
ந.மகேஸ்வரி கதைகள் எழுதிய அதே காலகட்டத்தில் வடக்கில் இருந்து படைப்புகளை தந்துகொண்டிருந்தவர் பாவை. இவரின் சிறுகதை தொகுப்பு 1986-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஞானப்பூக்கள்’. இந்நூலை தனி ஒருவராக வெளியிட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முன்னுரையில் வாசிக்கும்போது பிரமிப்பாகத்தான் உள்ளது. இத்தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளும் 1972 முதல் 1986 வரை அச்சு ஊடகங்களில் வெளிவந்தவை என்பதோடு …