சடக்கு வந்த வழி

ஆவணப்படங்களை இயக்கிக்கொண்டிருந்த சமயம் ஒரு பெரும் போதாமையை உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தங்களுக்கு முந்தைய தலைமுறை ஆளுமைகள் குறித்து கூறும்போது அவ்வாளுமைகளின் படங்கள் கிடைக்காமல் திணறுவோம். ஆவணப்பட செறிவாக்கப்பணியில் அந்தக் குறிப்பிட்ட ஆளுமைகளின் படத்தை இணைக்காமல் மனம் நிறைவு கொள்ளாது. இது ஒரு ஊனமாக மனதில் உறுத்திக்கொண்டிருந்த சமயம்தான் கோ.சாரங்கபாணிக்கும் இதே…

சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்

அபிப்பிராய பேதங்கள் என் அபிப்பிராயங்கள் அனைத்தையும் வழவழப்பான கூழாங்கற்களாக்கி வீட்டு வரவேற்பறையில் உள்ள மீன் தொட்டியில் போட்டு வைத்திருந்தேன். ‘நல்லவிலைக்கு வந்தால் ஒரு கடலும் வாங்கிவிடலாம்’ என்றாள் லலிதா. இன்று ஞாயிற்றுக்கிழமை இருவரும் கடல் விற்கும் கடைக்குப் போனோம். ’மாதாந்திர வாடகைக்கு பௌர்ணமி அலைகள் சகிதம் சமுத்திரமே கிடைக்கும்’ என்றான் கடல் விற்பவன். சமுத்திரம் வாங்கி…

ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 2

மலாய், சீன இலக்கியங்களின் எழுச்சியும் தனித்து வளர்ந்த தமிழ் இலக்கியமும் இக்காலகட்டத்தில்தான், (1950களில்) மலாய், சீன இலக்கியங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. சீன இலக்கியத்தில் சமூகம், கலாசாரம் சார்ந்து இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன என்கிறார் டாக்டர் டான் சீ லே (Chee Lay, Tan, 2015). முதலாவது மலாயா சீன இலக்கியத்தின் தனித்தன்மையை வளர்க்கும் நன்யாங்…

பேச்சி

“நீங்க பாத்தது உண்மையில பேச்சியம்மனையா? கதைய அப்படி முடிச்சா லாஜிக் இடிக்கும் டாட்.” இதோடு நூறாவது தடவை கேட்டிருப்பான். அதைக் கதை என செல்வம் சொல்வதே எனக்குக் கடும் கோபத்தை மூட்டியது. நான் ஒன்றும் பேசவில்லை. வார்த்தைகள் ஏதும் தடித்துவிட்டால் குலதெய்வத்தைப் பற்றிய எந்தப் பதிவும் இல்லாமல் போய்விடலாம். என்னைப்போலவே கோபக்காரன். நிமிர்ந்து பொன்னியின் படத்தைப்…

ராஜேஷ் ஜீவா கவிதைகள்

நன்னெஞ்சு விரல்மைதுனம் ஒவ்வொன்றிற்கும் அவள் கார்கூந்தலில் வெள்ளிக்கம்பிகள் உதிக்கின்றன சத்துடானிக் மூலிகைக்குளியல் அக்குபங்சர் ஆராஹீலிங் என சகலத்திற்கும் தலையை ஒப்புக்கொடுத்த பின்னரும் கணக்கு மட்டும் தீர்ந்தபாடில்லை நேர்ச்சைகளும் குறைந்தபாடில்லை அவ்வையென சகதோழிகள் சீண்டிச் சிரிக்கும் சமயங்களிலும் அவளுக்கு சங்கடங்கள் நேர்ந்ததில்லை கண்ணைத் திறந்த ஆட்டுக்குட்டி மலங்கமலங்க விழிப்பது போல குழலில்  பெருகும் நரைகள் குறித்து பெற்ற…

அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்

உருளும் சக்கரத்தில் கடகடத்து நகர்ந்து ஓடி, தடாலெனச் சுவரில் மோதி நின்று, வழிவிட்ட இரும்புகேட் வழி, உறுமலுடன் சீறிப்பாய்ந்து, உள்வந்து நின்றது கார். மீண்டும் மீண்டும் உறுமி, கரும்புகை பின்னால் புகை மூட்டமாக மேல் எழும்பிக் குமட்டும் நாற்றம், நாசியைத் துளைக்க –  எஞ்சின் அணைந்து அமைதியானபோது, குசினியில் ஓடிய மிக்சியை நிறுத்த, கால்கள் விறைத்து,…

வாசகர் கடிதம்

அன்புள்ள நவீனுக்கு, பேச்சி கதை வாசிப்பின் முடிவில்,  புதிதாக தீட்டப்பட்டு அதன் தணல் கூட குறையாத கத்தி, முதல் பலியினை அறுத்து அதன் குருதியில் தோய்ந்த  உடனேயே, தன் கூர்நுனி கொண்டு பிரசவித்த பெண்ணின் மார்புக் காம்பில் நுண்துளையிட்டு, உறைந்து அடைத்த முலைப்பாலை, இளக்கி வெளிக்கொணர்ந்து, பிறந்த குழந்தைக்கு பருகக் கொடுத்த காட்சியை கண்டது போல…

“ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா

தமிழகத்தில் மிக நீண்ட காலம் விமர்சனத்திலும், ஆய்வுகளிலும் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் கௌதம சன்னாவைச் சந்திக்கும் வாய்ப்பு மலேசியாவில் கிடைத்தது. தமது ஆய்வுகளைக் களபணிகளின் மூலமே சரிபார்த்துக் கொள்ளும் நோக்கமுடைய அவரது ‘குறத்தியாறு’  இலக்கியச் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்த காப்பியம். மாணவர் பருவம் தொட்டு இடதுசாரி இயக்கத்தின் இணைத்துக் கொண்டு பணியாற்றியதுடன், சங்கம் என்னும்…

மாறுதல்

அருவி குளிர்ச்சியை அள்ளிக் கொட்டியபடி ஓடுகிறது. தார்ச்சாலையில் நின்று பார்க்காமல் உள்ளே வந்து நின்றால், வெண்மஞ்சள் பாறையில் அருவி குதித்து வரும் நிர்மால்யம் ஈர்க்கிறது. தார்ச்சாலையில் நின்றபோது, இவ்வளவு அழகான அருவியை முழுசாகப் பார்க்கவிடாமல் மரங்கள் மறைத்தன. அருவியின் காலடி மரங்களின் கீழே நீரடித்து வந்த சருகுகள் மெத்தையைப்போலக் கிடக்கின்றன. மூன்று மாதங்களாக மழையே இல்லை.…

Etger Keret: மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்

இஸ்ரேலிய எழுத்தாளர் Etger Keret (1967) சமகால உலக இலக்கியத்தில் முக்கியமான சிறுகதையாசிரியா்களில் ஒருவர். Pipelines (צינורות, Tzinorot, 1992), அவரது படைப்பில் வெளியான இம்முதல் சிறுகதை நூல் மிகக் கடுமையான புறக்கணிப்புக்கு உட்பட்டது. ராணுவத்தில் தன்னுடன் பணிபுரிந்த நண்பனின் மரணத்திற்குப் பிறகு எழுத வந்த அவரது இரண்டாவது நூல் Missing Kissinger  (געגועיי לקיסינג’ר, Ga’agu’ai…

எஸ். பி. பாமா: கலையமைதியை விழுங்கிய தீவிரம்

மலேசிய பெண் எழுத்தாளர்களில் 80களில் எழுதவந்த எழுத்தாளர் எஸ்.பி. பாமா. பின்னர் வானொலி தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கியவர் நீண்ட இடைவெளிக்குப் பின் 2002-ஆண்டு முதல் மீண்டும் அச்சு ஊடகங்களுக்கு எழுதத் துவங்கினார். நாளிதழ் ஞாயிறு பதிப்புகளில் வெளிவந்த (2002க்கு பிறகு என்று நினைக்கிறேன்) பதிமூன்று சிறுகதைகளைத் தொகுத்து ‘அது அவளுக்குப் பிடிக்கல’ என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார்…

மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள் (பகுதி 2)

ஆதி குமணன் மறைவுக்குப் பிறகே மலேசிய பத்திரிகைச் சூழலில் கணிசமான மாற்றங்கள் உருவாயின. அந்த மாற்றங்களை அறிவதன் மூலமே இன்றைய பத்திரிகைச் சூழலையும் அறியமுடியும். 28 மார்ச் 2005-இல் ஆதி குமணன் மரணமுற்றார். இவரின் மரணத்திற்குப் பிறகு மலேசிய நண்பனில் நிர்வாகப் பிரச்சினை தலைதூக்கியது. Penerbitan Sahabat Malaysia-வின் கே.டி.என். உரிமத்தை சிக்கந்தர் பாட்ஷா வைத்திருந்தார்.…

ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 1

சிங்கப்பூரை வணிக மையமாக நிறுவி தமது பணியை முடித்துக்கொண்டு 1824ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி லண்டனுக்குப் புறப்பட்டார் சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ். அவரையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பணியாளர்கள் மற்றும் மூன்று பெரிய பெட்டிகள் நிறைய இந்த மண்ணின் இலக்கியங்களையும் சுமந்துகொண்டு சுமாத்திராவிலிருந்து கிளம்பிய ஃபேம் என்ற கப்பல் அன்று இரவே தீப்பிடித்து எரிந்துபோனது.…

அரூப நெருப்பு: அன்றாடங்களில் படரும் கனல்

தீவிர இலக்கியப் படைப்புகள் எழுதப்படும் காலத்தில் பொதுச்சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கிவிடுவதில்லை. ஜெயகாந்தன் போன்ற ஒரு சில விதிவிலக்குகள் உண்டெனினும் அவரது படைப்புகள் கூட சரியான விதத்தில் உள்வாங்கப்பட்டது அவை எழுதப்பட்ட சமகால சலனங்கள் அடங்கியபிறகே. உதாரணமாக அவரது அக்கினிப்பிரவேசம் என்ற பிரபலமான கதையைப் பெரும்பான்மையானவர்கள் அறிந்திருந்தாலும் அதற்கு அன்று கிடைத்தது ஒரு சமூகப் பொது…

யாக்கை

“ஏன் என்னைய எடுத்தீங்க சர்? வர்றவன் எல்லாம் பிலிப்பினோ, இந்தோ காரியதான் தேடுவானுங்க. இங்க கிராக்கியே இல்லாத சரக்கு நான்தான்” என்று அவள் இயல்பாகப் பேச்சைத் தொடங்கியது அவனுக்குப் பிடித்திருந்தது. முடியை இழுத்துவாரி குதிரைவால் கொண்டை கட்டியிருந்தாள். கொண்டைக்கு மட்டும் பழுப்பு நிற வண்ணம். சிலிவ்லெஸ் உடலோடு ஒட்டாதபடிக்கு மார்புகள் நிமிர்ந்திருந்தன. வெள்ளை லேகிங்ஸில்  பிட்டங்கள்…

ஆண்கள் அழ வேண்டாம்

தான் ஓர் ஆண் என்று மனதார ஏற்றுக் கொண்ட ஒரு இளம் பெண் சமுதாயத்தின் மத்தியில் ஆணாக வாழ, ஆணாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முனையும்போது ஏற்படும் சிக்கல்களையும் கொடூரங்களையும்  Boys Don’t Cry எனும் படக்  கதையின் வழி காட்டியுள்ளார் இயக்குனர் கிம்பர்லி பியர்ஸ்.( Kimberly Pierce). அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா( Nebraska) மாநிலத்தின் தலைநகரான…