
வல்லினம் சம கால இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வது மட்டுமல்லாமல் வரலாறு மற்றும் ஆவணத் தொகுப்பிலும் ஊக்கத்துடன் செயல்பட்டு வரும் இயக்கம். தொடர்ந்து ஆவணப்படங்களை வெளியிடுவதுடன் தகுந்த படைப்பாளிகளைக் கௌரவிக்கவும் அவர்களின் படைப்புகளை தீவிரமான வாசிப்புப் பரப்புக்கு முன்னெடுத்துச் செல்லவும் வல்லினம் முனைப்பு காட்டி வந்துள்ளதை மலேசிய இலக்கியத்தை ஊன்றி கவனித்து வரும் யாரும் மறுக்க முடியாது.…