இலக்கிய விழாவில் சு.வேணுகோபால்.

வழக்கம் போலவே இவ்வருடம் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவுக்கும் தமிழகத்தில் இருந்து முக்கியப் படைப்பாளிகள் இருவர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சு.வேணுகோபால். நுண்வெளி கிரகணங்கள், கூந்தப்பனை, ஆட்டம்,  நிலம் எனும் நல்லாள், பால்கனிகள், வலசை போன்ற நாவல்கள் – வெண்ணிலை, ஒரு துளி துயரம், களவு போகும் புரவிகள், பூமிக்குள் ஓடுகிறது நதி எனும் சிறுகதை தொகுப்புகள் –…

“முகநூல் புகழை அதை விரும்புபவர்களே வைத்துக்கொள்ளட்டும்” – சு.வேணுகோபால்

இணையம் வழி பெறப்பட்ட இந்த நேர்காணல் சு.வேணுகோபாலின் வாசகர் கேள்வி பதிலின் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. நான்கு மாதங்கள் தொடர்ந்து வல்லினம் வாசகர்களுக்கு அவர் வழங்கிய பதில்களைத் தொடர்ந்து இந்த நேர்காணல் அவர் ஆளுமை குறித்த விரிவான அறிமுகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் என நம்புகிறோம். நவீனத் தமிழ் இலக்கிய உலகில்  வலுவான படைப்புகள் மூலம் கவனம் பெற்றுள்ள…

சு.வேணுகோபால்: கூழாங்கற்களின் நாயகன்

தொண்ணூறுகளுக்குப் பிறகான காலகட்டத்தில் பொதுவாக நவீன இலக்கியப் படைப்பின் வடிவம்,வெளிப்பாட்டு முறை சார்ந்து ஒரு தவறான புரிதல் சூழலில் உண்டாயிற்று. மொழியை அதன் இயல்புத்தன்மையினின்றும் வல்லந்தமாக திருகியும், செயற்கையான பூடகத்தன்மையை அதற்களித்தும் வெளிவரும் படைப்புகளே மிக நல்ல இலக்கியப் படைப்புகள் என்ற ஒரு தோற்றப்பிழை உண்டானது. பின்நவீனத்துவப் படைப்பை உருவாக்குவதாக எண்ணிக்கொண்டு நேர்க்கோடற்ற துண்டாடப்பட்ட விவரணையை…

நுண்வெளி கிரகணங்கள்: விலகும் இருள்

சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியர்களின் வாழ்வில் நிறைய பொதுத்தன்மைகள் ஏற்படத் தொடங்கின. நவீனக் கல்வியும் சந்தையும் ஒரு பொது மொழியையும் பொதுவான மனநிலையையும் மக்களிடையே உருவாக்கத் தொடங்கின. ஒரு வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் அவர்கள் மாணவர்கள் ஒத்த வயதினர் ஒரே வகையான பாடங்களைப் பயில்கின்றனர் என்ற பொதுத்தன்மைகள் உருவாகின்றன. ஆனால் அவர்களின் நிறம், உயரம், ஜாதி, உணவுப்பழக்கங்கள்,…

மோகப்பெருந்தீயில் உதிரும் சிறுசாம்பல் : சு.வேணுகோபாலின் ஆட்டம்

“ஆடாதவர்களுக்கு வாழ்க்கையில்லை. வாழ்க்கையில் ஆடாதவர்கள் இல்லை. ஆட்டமே வாழ்க்கை. வாழ்க்கையே ஆட்டம். மானுட ஆட்டம்“ ( நாவலிலிருந்து ) மனிதன் எப்போதும் ஒரு சமூக விலங்கு. தனிமையை ரசிக்கலாம்; கொண்டாடலாம். ஆனால், அவனால் அதிலேயே நிலைபெற்று இருக்க முடியாது. அதனால்தான் இன்றும் கூட தனிமைச்சிறை என்பது கொடூர தண்டனைகளில் ஒன்றாக இருக்கிறது. உணவு, உடை, உறைவிடம்…

யுகசந்தியின் கலைஞன்: கூந்தப்பனையை முன்வைத்து

தேர்ந்த எழுத்தாளன் உலகை உன்னிப்பாக கவனிக்கிறான். நாம் அன்றாடம் புழங்கும் வெளியில் நாம் கவனிக்கத் தவறிய ஏதோ ஒன்றை புலனுக்கு உணர்த்தும்போது நம்முள் ஒரு சன்னமான வியப்பு மேலிடுகிறது.“இந்த உலகம் எனக்கும் நன்கு பரிச்சயமானதுதான்.இதை ஏன் நான் கவனிக்கவில்லை?” அறிந்த உலகில் அறியாத ஒன்றைக் காட்டுகிறான். இந்த நம்பகத்தன்மையும் அணுக்கமுமே வாசகன் எழுத்தாளனின் உலகில் நுழைவதற்கான…

திசையெல்லாம் நெருஞ்சி: உண்மைகளை பிரித்தறியும் கலைத்திறன்.

புனைவுக் கலையின் உடல் கற்பனையால் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் அதன் உயிர், வாழ்க்கையின் உண்மைகளைக் கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது. சிங்கப்பூரில் தொடக்க காலத்தில் வெளிவந்த சிறுகதை தொகுப்புக்கு கட்டுக்கதைகள் என்றே தலைப்பிட்டுள்ளனர். ஆகவே புனைவுகள் படைப்பாளனின் கற்பனை எல்லைக்கு ஏற்ப விரிந்தும் ஆழ்ந்தும் சென்றாலும் அதன் உள்ளீடாக சுய அனுபவங்களும் வாழ்வியல் உண்மைகளுமே நிரப்பப்பட்டிருக்கும். உண்மைக்கும் கற்பனைக்கும் இடையில்…

சு.வேணுகோபால் சிறுகதை: சொல்ல முடிந்தது

விடிகாலை, சிப்ட் முடித்துவிட்டு மில்லிலிருந்து ரகுராம் சைக்கிளில் வந்தான். மாணிக்கம் ஆசிரியர் திண்ணையில் இருந்த துரையும் சின்னச்சாமியும் வேகமாக எழுந்து நடந்தார்கள். கேசவன் டீக்கடை முன் தேங்காய் உரிக்கும் வாச்சியோடு நின்றிருந்த செல்வமும் பரமேஸ்வரனும் வேகமாகப் போனார்கள். டீக்கடை எதிரில் உள்ள புங்கமரத்தின் அடியில் போட்டிருந்த பட்டியக்கல்லில் சைக்கிளில் இருந்தபடியே காலூன்றி நின்றான். வடக்கால் இருந்துவந்த…

அந்த விபத்து

சின்வுவா புத்தகக் கடைக்கு எதிரில், சாலைக்கு மறுபுறம் நடைபெற்றுக்கொண்டிருந்த சாலைப் பராமரிப்பு வேலையிடத்தில் விசுக்கென புகுந்த காற்றொன்று குப்பைகளைச் சுழற்றி வளைத்து அள்ளி எடுத்துக்கொண்டு போய் எங்கும் இறைக்கின்றது. அதன்  புழுதிப் படலம் அடங்கிக்கொண்டிருக்க, டெஸ்ஹெங் அவின்யுவிலிருந்த வானொலி பழுது பார்க்கும் கடையிலிருந்த வானொலியிலிருந்து நான்காவது ஒலிக்கூறு (beep) கேட்டதைத் தொடர்ந்து, இப்போது பிற்பகல் மணி…

யாழ் பதிப்பகத்தின் மலேசிய ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதை போட்டி – 2018

மலேசிய கல்வி பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களை பதிப்பித்து வருவதோடு அரசாங்க  தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்பு திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இப்போட்டியில் மலேசிய தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில்  தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சி…

மலேசிய எழுத்தாளர்களின் வாழ்க்கை

[2006ஆம் ஆண்டு Nou Hach மாநாட்டில் எழுத்தாளர் கே.எஸ். மணியம்  வழங்கிய சொற்பொழிவு] வணக்கம்! சக எழுத்தாளர்களிடமும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களிடமும் பேசுவதற்கான இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நான் பேசப்போவதில் உங்களுக்குத் தேவையான சில கருத்துகள் இருக்கும் என்று நம்புகிறேன். தொடக்கமாக, மலேசியாவின் இலக்கியம் குறித்த காட்சியை உங்கள் முன் வைக்கிறேன். இந்த…

“அடையாளத் தேடலில் பல நேர்மறையான அம்சங்களும் சாத்தியமே.” – கே.எஸ்.மணியம்

90களில் கே.எஸ்.மணியம் அவர்களிடம் எடுக்கப்பட்ட இந்த நேர்காணல்  அவரது புனைவுலகம் மட்டுமல்லாது கருத்துலகையும் வாசகனின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய சமூக, அரசியல் அவதானிப்புகளை அவரது சொற்கள் மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாக உள்ளது. தமிழ் வாசகர்களுக்காக மொழிப்பெயர்க்கப்பட்ட இந்த நேர்காணல் வழி அவரது புனைவுலகை மேலும் ஆழமாக உணர முடியும்…

ஒரு கற்பனையின் வழித்தடம் : கே.எஸ். மணியத்துடன் ஓர் உரையாடல்

கே.எஸ். மணியத்தின் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என அனைத்தும்  மலாயா/மலேசியாவின் புலம்பெயர் சமூகம் இதுவரை கடந்துவந்திருக்கும் பாதையையும் இனி செல்ல வேண்டிய இலக்கையும் அதற்கான வழிகளையும் அலுக்காமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அனைத்து சமூக உறுப்பினர்களும் தங்களுடைய மரபுவழி அடையாளங்களையும் வாழும் நாட்டின் அடையாளங்களையும் ஒருங்கே அணைத்துக் கொள்வதன்வழி  பன்முகத் தன்மைகொண்ட ஒன்றைச் சமூகமாக உருவெடுக்க முடியும்…

புலி வேட்டை – கே.எஸ்.மணியம்

கிழவன் மரணத்தை எதிர்கொள்ள போராடிக் கொண்டிருந்தான். அவன் எதிர்ப்பார்த்த அமைதியைக் கனவுகள் வந்து தொல்லைபடுத்தி குலைத்தன. அவற்றுள் சில கொடுங்கனவுகளின் கூர்மையான எல்லைவரை கொண்டுபோய் தூக்கத்தை அவனிடமிருந்து பறித்துக் கொண்டிருந்தன. அவனது சிந்தனையைச் சிதைத்துகொண்டேயிருந்த கனவுகள் அவனை விரக்தியாலும் எரிச்சாலாலும் முணுமுணுக்க வைத்தன. “எதைப்பற்றியும் அக்கறையில்லாமல் இருந்தாதான் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும்.” அவன் அப்போது சன்னல்வழி…

அந்தக் கோயில்

நாங்கள் தத்தளிப்பு மிகுந்த பரவசத்திலிருந்தோம். தேனிலவுடன் வரும் எதிர்ப்பார்ப்பு, விடலைக்காதல், மென்மை, வெம்மை ஆகியவற்றுடன் நெகிழ்ந்திருந்தோம். அரை மாதமே விடுமுறை என்றாலும் வங்வங்கும் நானும் பயணத்தைப் பலமுறை திட்டமிட்டிருந்தோம்; பத்து நாட்கள் திருமண விடுப்பு,மேலும் ஒரு வார கூடுதல் வேலை விடுப்பு. திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு. எங்களுக்கு அதைவிடவும் வேறெதுவும் அத்தனை…

வாட்ஜ்டாவும் பச்சை நிற சைக்கிளும்

பல நூற்றாண்டுகளாக, பெண் உரிமைக்கும் அவர்களுக்கான சுதந்திர வெளிக்கும் முக்கியத்துவம் கொடுக்காத சவூதி அரேபியா இன்று பல மாற்றங்களை கண்டு வருவதாக ஊடகங்கள் சொல்கின்றன. சவூதி மன்னன் சல்மான் தலைமையில் நடக்கும் மாற்றத்தின் வேகமும் அவை  மேற்கத்திய செய்தி ஊடகங்களில் முதல் பக்கச் செய்திகளாகக் காட்டப்படுவதும் எத்தனை நாள் நீடிக்கும் என்ற சந்தேகங்களை பல அரசியல்…

கொல்லப்படும் குறிகள்

3000 வருடங்களுக்கு முன், எகிப்து மன்னராட்சியின் போது, பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு, பண்டைக்கால பாபிருஸ் ஏட்டில் (Papyrus Salt 124) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக டெய்லிமெய்ல் இணையத்தள செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.  Deir el Medina-வில் தங்கியிருந்த பானெப் எனும்  சிறந்த  கட்டிடக்கலை கைவினைஞர் (Paneb) மேல்…