“இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது.”

விஜயலட்சுமி மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகத்தின் நூலகவியலாளர். நவீன தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். நல்ல பயனான கட்டுரைகளைத் தந்தவர். குறிப்பாக மலேசியத் தமிழ் எழுத்தாளர்களிடம் காணப்படும் அறிவுத்துறை மற்றும் பதிப்புத்துறை சார்ந்த தெளிவின்மையைக் கலைவதற்கான முயற்சியாக ‘துணைக்கால்’ எனும் நூலை வெளியிட்டவர். அந்நூல் பதிப்புத்துறை மற்றும் அறிவுத்துறை சார்ந்த விடயங்களைத் தெளிவுபடுத்தும்…

“எதையும் வாசிக்காமல் சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.”

ம.நவீன், மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் பலருக்கும் அறிமுகமான பெயர். மலேசிய இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து பல ஆக்ககரமான செயற்திட்டங்களை ‘வல்லினம்’ அமைப்பின் மூலமாக முன்னெடுக்கும் இலக்கியச் செயற்பாட்டாளர். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான இவர், இந்நாட்டின் இலக்கியத்துறையில் முக்கியமான படைப்பாளி. இன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து எவ்வித சமரசமும் இல்லாமதல் நவீன இலக்கியத்தில் தீவிரத்தன்மையுடன்…

முன்னுரை: காற்றில் அலையும் ஓசை

மலேசியாவில் வெளிவரும்  ‘மன்னன்’ மாத இதழுக்கு நேர்காணல்கள் செய்யத் தொடங்கியது 1999களில். அது வெகுசன இதழ். எனவே நேர்காணல்களின் நோக்கம் வாசகர்களை உற்சாகப்படுத்துவதாய் இருந்தது. எனவே சமகாலத்தைய நிகழ்வுகளின், சலசலப்புகளின் அடிப்படையில் நேர்காணல்களில் கேள்விகளை அமைத்திருப்பேன். ‘காதல்’ இலக்கிய இதழ் தொடங்கப்பட்டபோது அதில் மாதம் ஓர் எழுத்தாளரின் நேர்காணலைப் பிரசுரிப்பதென முடிவானதும், அப்பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன்.…

சாளரங்களைத் திறந்து வைக்கும் கலைஞன்

நவீனின் முதல் சிறுகதை தொகுப்பான ‘மண்டை ஓடி’ கதைகளைப் படித்ததும் அவரின் முதன் முதல் எழுதப்பட்ட இரண்டு மூன்று கதைகள் எவை என்றுதான் பார்த்தேன். இலக்கியம் குறித்த பெரிய புரிதல் இல்லாமல், வாசிப்பும் இல்லாமல், ஆசையின் பாற்பட்டோ, சொல்லவேண்டும் என்ற உந்திப்பினாலோ அல்லது எழுத்தின் மீதான ஆர்வத்தாலோ எழுதப்பட்ட கதைகள் எனக்கு முக்கியமானவை. அதிலே சுயம்புவான…

அரூப முதலையின் கால் தடங்கள்

தமிழில், வேறெந்த இலக்கிய வடிவையும்விட உயரிய இடத்தை சிறுகதைகள் அடைந்திருக்கின்றன எனலாம். நூற்றாண்டு கால தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் பேசப்படாத பொருளோ, சோதிக்கப்படாத வடிவமோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு முக்கியமான பரிச்சார்த்த முயற்சிகள் பலவும் இங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சிறுகதைகளில் அழுந்தத் தடம் பதித்த முன்னோடிகள் பலரும் இயங்கிய களத்தில் நாமும் இருக்கிறோம் என்பதே, அதீத பொறுப்பையும்,…

சென்னையில் மலேசிய நவீன இலக்கியம்

16.9.2018இல் சென்னையில் அமைந்துள்ள இக்சா மையத்தில் வல்லினம் மற்றும் யாவரும் பதிப்பகம் இணைந்து மூன்று நூல்களின் அறிமுகக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ (மலேசிய – சிங்கை ஆளுமைகளின் நேர்காணல்கள்), போயாக் (ம.நவீன் சிறுகதை தொகுப்பு), ஊதா நிற தேவதைகள் (இரா.சரவணதீர்த்தாவின் சினிமா கட்டுரைகள்) ஆகிய மூன்று நூல்களின் விரிவான அறிமுகம் செய்யப்பட்டது.…

என் தாத்தாவுக்கு, மீன் தூண்டிலொன்று வாங்க…

மீன்பிடி உபகரணங்கள் விற்கும் புதிய கடையொன்றை கடந்து செல்கிறேன். காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகைப்பட்ட தூண்டில்கள், தாத்தாவை நினைவூட்ட, அவருக்கு ஒன்று வாங்க வேண்டுமென எண்ணுகிறேன். இறக்குமதி செய்யப்பட்டதென முத்திரை பொறித்த ஒரு பத்துப் பாகங்களைக் கொண்ட தூண்டிலொன்று. பத்துப் பகுதிகளும், ஒன்றின் மேல் மற்றொன்று படிந்து, அநேகமாய், இறுதியில் ஒரு துப்பாகியின் பிடி போன்றமைந்த,…

மதுரையில் வல்லினம் நூல்கள் அறிமுகம்

மலேசிய இலக்கியத்தைப் பரவலான கவனத்திற்குக் கொண்டுச் செல்லும் முயற்சியில் யாவரும் பதிப்பக ஏற்பாட்டில் மூன்று மலேசிய  நூல்களின் அறிமுக விழா 21.10.2018 (ஞாயிறு) பிரேம் நிவாஸ் மஹாலில் நடைபெறுகிறது. மா.சண்முகசிவாவின் சிறுகதை நூல் குறித்து எழுத்தாளர் இமையம், விஜயலட்சுமி மொழிப்பெயர்ப்பில் வெளிவரும் கே.எஸ்.மணியத்தின் சிறுகதைகள் குறித்து பவா. செல்லதுரை மற்றும் ம.நவீன் தொகுத்த மீண்டு நிலைத்த…

அமைரா கவிதைகள்

1. நான் ஒரு பாடலை பாட வேண்டும் மலைகளுக்கு மேலிருந்த எனது ஊற்றை திறந்து- இருண்ட பள்ளத்தாக்குகளுக்கிடையில் அமர்ந்து எனது மகிழ்ச்சியுடன்-அழுகையும்   என்னில் எல்லா சுமைகளும் கடந்து போக அமைதியில் மரங்கள் வளர்வதை பார்த்தேன்.   மின்னல் ஒளியை காண தாழைகளை வளர்த்தேன். அங்கே காதலின் மலர்கள் எவ்வாறு பூத்தது?   ஒரு கூர்வாளை…

அம்பாரி யானை

9௦ களின் தொடக்கத்தில் நவீன தமிழ் இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய எனக்கு பத்தாண்டுகள் கடந்த பின் சில கேள்விகள் இருந்தன. தமிழ் எழுத்தாளர்களை பொதுவாக வகைப்படுத்தும்போது வணிக எழுத்தாளர்கள், இலக்கிய எழுத்தாளர்கள் எனச் சொல்கிறோம். இலக்கிய எழுத்தாளர்களுக்குள் வந்தால் அதிலுமே சில பிரிவுகள் இருக்கின்றன. எழுத்தின் வகையாலன்றி பேசுபொருளின் அடிப்படையில் நான் வகுத்துக் கொண்ட விதத்தால்…

வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்ட முடிவு

வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டம் 2017 இல் தொடங்கியது. எழுத்தாளர்களைக் குறுநாவல் எழுதவைத்து அதனை செறிவாக்கம் செய்து நூலாகப் பதிப்பிக்க வேண்டும் என்பதே வல்லினம் குழுவின் அடிப்படையான நோக்கம். இது போட்டியல்ல. சோர்வடைந்திருக்கும் மலேசிய நாவல் இலக்கிய வளர்ச்சியைப் புத்தாக்கம் பெற வைப்பதே வல்லினம் குழுவின் அடிப்படை நோக்கம். இந்தக் குறுநாவல் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் எழுத்தாளர்களுக்கு…

சென்னையில் வல்லினம் நூல்கள் அறிமுகம்

‘யாவரும்’  தொடர்ந்து நவீன இலக்கியச் சூழலில் கவனம் பெற்றுவரும் பதிப்பகம். தூயனின் இருமுனை, சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை, எம்.கே.குமாரின் 5.12 P.M என இப்பதிப்பகம் வெளியிட்ட சிறுகதை நூல்கள் விருதுகள் மூலமும் விமர்சகர்கள் மூலமும் பரந்த கவனத்தைப் பெற்றன. வல்லினம் இவ்வருடம் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து 10 நூல்களைப் பதிப்பிக்கிறது. இவ்விரு பதிப்பகங்களும் இணைந்து வெளியிடும்…

பவா செல்லத்துரை: பேச்சாளனாக மாறிய எழுத்தாளன்

சாயங்கால வேளைகளில் நரிக்குறவர்கள் ஏரிக்கரைகளில் கொக்கு சுட்டு ஊர்த்தெருக்கள் வழியாக விற்றுச்செல்வார்கள். வாணலியில் வறுக்கப்பட்ட கொக்கு, நாரைகளுக்கு தனித்த சுவையுண்டு. அம்மா வாணல் சோறு என்று அடி தீய்ந்த வாணலில் துளி சோறு போட்டு பிறட்டித்தருவார்கள். எச்சுவைக்கும் ஈடானதல்ல அது. அப்படி ஒருநாள் தெருவழியாக குறவர்கள் கொக்கு விற்றுக்கொண்டு சென்றார்கள். இரண்டு முழ சணலை கொக்கின்…

பிடிப்பு

தசைப்பிடிப்பு. அவனது வயிறு பிடிப்புக்கொள்ளத் தொடங்கியது. உண்மையில் அவன் தன்னால் நீண்ட தூரம் நீந்த முடியும் என்றுதான் எண்ணியிருந்தான். கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும்போதே அவனது வயிறு பிடிப்புக்கொள்ளத் தொடங்குகிறது. முதலில் அவன் அது வயிற்றுவலி என்று நினைத்தான் – தொடர்ந்து நீந்தினால் நீங்கிவிடலாம். ஆனால், வயிறு தொடர்ந்து இறுக, அவன் நீந்துவதை நிறுத்தி,…

பவா என்ற கதைசொல்லியின் புனைவுலகம்

பவா என்ற மனிதரை இரண்டு விதமாக அறிவேன். ஒன்று வம்சி பதிப்பகத்தின் உரிமையாளராக. மற்றொன்று ஒரு கதைசொல்லியாக. நேரடியாக அவரைச் சந்தித்திராவிட்டாலும் யூட்யூபில் உள்ள காணொளிகள் வழியாக அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.சில கதைகளை வாசித்தபோது ஏற்பட்ட உணர்வு நிலைகளுக்கு முற்றிலும் மாறான உணர்வெழுச்சியை ஏற்படுத்த வல்லது பவாவின் கதை மொழி. உதாரணத்திற்கு அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’…

மடி

அலும்னி மீட் அழைப்பிதழைப் பார்த்தபோது தோன்றிய எரிச்சலும் கோபமும் அதே அளவில் எனக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அறையின் சாவிக்காக காத்திருந்தபோது மீண்டும் தோன்றியது. அப்படியொன்றும் ரொம்ப நேரம் நான் காக்க வைக்கப்படவில்லை. அதோடு என் சிறிய பெட்டியை தூக்கிக் கொண்டு நடந்து வருவதற்குக்கூட டிரிபிள் ஈ டிபார்ட்மெண்ட் மாணவன் ஒருவன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தான். அவனை என்னிடம்…

நாடோடியின் பாடல்: எல்லாநாளும் கார்த்திகை தொகுப்பை முன்வைத்து.

“நான் மீடியாவாய்ஸ்ல எழுதிட்டிருந்த தொடர நிறுத்திட்டேன் அய்யனார்” “ஏன் பவா?” “எழுதனுமேன்னு கமிட்மெண்டோட எழுத பிடிக்கல. மறுபடியும் எப்ப தோணுதோ அப்ப எழுதிக்கலாம்” இதுதான் பவா. தன்னை ஒருபோதும் எழுத்தைச் செய்பவனாக மாற்றிக் கொள்ள விரும்பாத கலைஞன். எந்த ஒன்றிலும் ஆத்மார்த்தமாக மட்டுமே ஈடுபடவிரும்பும் எளிய மனம்தான் பவாவினுடையது. ஏன் அதிகம் எழுதுவதில்லை? என்கிற வழக்கமான…