தேவதைகளின் குசு

எதேச்சையாக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. தனியார் அலைவரிசையில் பாடல் நிகழ்ச்சி ஒன்று ஒளியேறிக்கொண்டிருந்தது. வாண்டுகள் தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தனர். தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் சில கன்றாவிகளை செய்தனர். அதில் ஒன்று, பெண் தொகுப்பாளினி கீழே குனியும்போது குசு விடும் சத்தத்தை ஒலிக்கச் செய்து அரங்கில் பார்வையாளர்களை சிரிக்க…

கடவுச்சீட்டு என்னும் கள்ளச்சீட்டு

மலேசிய பின்னணி நாவல் என்றும் மலேசிய மக்களின் வாழ்வை கூர்ந்து கவனித்து எழுதப்பட்டது என்றும் பின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்ததால், தமிழக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘கடவுச்சீட்டு’ நாவலை விடுமுறையில் நேரம் ஒதுக்கி வாசித்தேன். ‘கடவுச்சீட்டு’ மிக எளிய கதையமைப்பைக் கொண்ட நாவல். தமிழக கிராமம் ஒன்றில் வளர்ந்த பெண்ணை மலேசிய இளைஞன்  ஒருவன்,  (சில சமாதானங்களைச்…

பூங்காவில்

“நான் நீண்ட காலமாக பூங்காவில் உலவியதில்லை. அதற்கென நேரம் ஒதுக்கவோ அல்லது அதில் ஆர்வமோ எனக்கில்லை.” “எல்லோருக்கும் அதே நிலைதான். வேலை முடிந்ததும் மக்கள் வீட்டிற்கு விரைகிறார்கள். வாழ்க்கையே அவசரகதியில் உள்ளது.” “சிறுவனாக இருந்தபோது, இங்கே வந்து இந்த புல்லில் விழுந்து புரள நான் உண்மையிலேயே விருப்பு கொண்டிருந்தேன்.” “நான் எனது தாய் தந்தையரோடு வந்ததுண்டு.”…

ரொட்டி கோசம்

சரியாக எட்டுக்கு அலாரம் வைத்து எட்டரைக்கு விழிப்பதுதான் ஷாகுலின் வழக்கம். சில சமயங்களில் எட்டு நாற்பதுக்குப் போகும். அன்றைய தினம் தோற்றுப்போன அந்த பத்து நிமிடத்தை ஜெயிக்கவே முடிந்ததில்லை. அவனின் வேலை அப்படி. கீழே 24 மணி நேரமும் இயங்கும் சாப்பாட்டுக்கடை; மேலே படுக்கை. தினசரி வேலை. வருடம் முழுவதும் அதுதான் வாடிக்கை. ஒன்பது மணிக்கு…

ஒரு நிகழ்ச்சியும் ஒரு நாவலும்

நவம்பர் 18ஆம் தேதி வல்லின ஏற்பட்டில் நடைபெற்ற 10வது கலை இலக்கிய விழாவிற்குச் சென்றிருந்தேன். வழக்கமாக நான் கலந்துகொள்கிறே ஒரே உள்நாட்டு இலக்கிய விழா இதுதான் என்கிறபோதிலும் இவ்விழா இவ்வாண்டுடன் முடிவடையவிருக்கிறது என்கிற அறிவிப்பினை வாசித்தபோது சாக்குப்போக்குச் சொல்லாமல் கைப்பேசி டைரி குறிப்பில் எழுதிவைத்துக்கொண்டு பல எதிர்ப்பார்புடன் நிகழ்விற்குச்சென்றேன் என் எதிர்ப்பார்ப்பு வீண்போகவில்லை. நிகழ்ச்சி மிகவும்…

நேர்மையற்ற சிறுகதை போட்டி : ஒரு நேரடி சாட்சியம்

கடந்த 2016-ல் என் தோழி ஹேமா ஒரு செய்தியைப் புலனம் வழியாக என்னிடத்தில் காட்டினார். வல்லினத்தின் சிறுகதை எழுதும் போட்டி அறிவிப்பு அது. பள்ளியில் நான் சில பேச்சுப்போட்டிகளுக்காக மாணவர்களுக்கான கட்டுரைகள் எழுதுவதால் என்னை ஒரு நல்ல எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டார். நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டேன். கதை எழுதி அனுப்பவேண்டிய நாள் 15.09.2016. நானும்…

ராஜேஷ் ஜீவா கவிதைகள்

தன்னையுண்ணும் ஒருவன் நீண்ட நாட்களாக ஊர்ஊராக யாசித்தும் பசியாற எதுவும் கிடைக்காதவன் நெடிய யோசனைக்குப் பின் உண்பதற்குத் தன்னைத் தேர்ந்து கொண்டான் மலைக்குகை தைல ஓவியத்தில் தொல்குடியொருவன் கையிலேந்திய கூர்ஈட்டியை கைமாறாகப் பெற்று மார்புச் சதையை கிழித்துச் சுவைத்தவன் அடுத்ததாக தன்  கெண்டைக்காலில் விளைந்திருக்கும் கொழுத்த திரட்சியினை அறுத்துத் தின்கையில் கடல்கன்னியர் சிப்பிகளை ஆசை ஆசையாகப்…

மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கான ‘யாழ்’ சிறுகதைப் போட்டி

யாழ் பதிப்பகம் திட்டமிட்டபடி 2019-ஆம் ஆண்டு மலேசிய ஆசிரியர்களுக்கான தமிழ் சிறுகதைப் போட்டியை ஏற்று நடத்தவுள்ளது. இப்போட்டியின் முன் ஆயத்தமாக கடந்த 18/11/2019 – இல் சிறுகதைப் பட்டறை ஒன்றும் எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை மூலம் நடத்தப்பட்டது. இப்பட்டறையில் பல ஆசிரியர்கள் கலந்து பலன் அடைந்தனர்.   ‘யாழ்’ சிறுகதைப் போட்டி விதிமுறைகளும்…

வல்லினம் கலை இலக்கிய விழா 10 – ஒரு கண்ணோட்டம்

2009 ஆண்டில் தொடங்கப்பட்ட கலை இலக்கிய விழா 2018 ஆம் ஆண்டில் நிறைவு விழாவாக அமையும் என்பதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான். பத்தாவது கலை இலக்கிய விழாவுக்கான திட்டம் கடந்தாண்டே வரையறுக்கப்பட்டது. அன்றைய நாளிலிருந்து கலை இலக்கிய விழாவுக்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. ஆரம்ப காலங்களில் 20,000 வெள்ளி செலவை உள்ளடக்கிய கலை இலக்கிய விழா ஆண்டாண்டாக…