
“தீர்வை கணக்க நாங்க இங்க தீர்மானிக்கிறதே வஸ்தாரி வரிசை வச்சி தான்” என்றார் ஊர்க்காடு ஜமீன் கோட்டியப்பத் தேவர். அவர் கைப்பிடிக் கொண்ட மர நாற்காலியில் பெருமிதத்துடன் அமர்ந்திருந்தார். அவரது இடது கை மீசையை நீவிக் கொண்டிருக்க, வலது கை ஜமீனுக்கான கோலை தாங்கி நின்றது. அவர் சொல்லி முடித்ததும் தாமஸ் துரை பின்னால்…












