“மனைவியின் தாலியை அடகுவைத்து புராதனப் பொருட்கள் சேகரித்தேன்” பிரகாஷ்

பினாங்கு இந்திய மரபியல் அருங்காட்சியகத்தின்  நிர்வாகி பிரகாஷ்,  ஜெகதீசன் – ராஜகுமாரி தம்பதியரின் இரண்டாவது மகன் . இவர் பிறந்து வளர்ந்தது பேராக் மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் நகரில். தந்தையார் முடித்திருத்தும் கடைகள் வைத்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த இவர் தன் சொந்த முயற்சியில் பினாங்கு தீவில் இந்திய மரபியல் அருங்காட்சியகம்…

“தற்காலிக மன விலகல்கள் வரலாற்றுக்கு அவசியமற்றது.” – மா.செ.மாயதேவன்

1950களில் மலேசியாவில் ஏற்பட்ட புதிய இலக்கிய அலையில் உருவானவர் மா.செ.மாயதேவன். இரு நாராயணன்களும் நடத்திய கதை வகுப்பு, கு.அழகிரிசாமி உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’, கோ.சாரங்கபாணியின் தமிழர் திருநாள் என பல்வேறு கலை இலக்கிய முன்னெடுப்புகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு, சிறிது சிறிதாகத் தன்னைச் செதுக்கிக்கொண்டவர். 85 வயதான அவரை நேர்காணலுக்காக தைப்பிங் நகரில் சந்தித்தோம். பலவற்றை அவர்…

“எழுத்தாளனை உருவாக்க முடியாது” – மா.இராமையா

‘இலக்கிய குரிசில்’ முனைவர் மா.இராமையா, 1946ஆம் ஆண்டு ‘காதல் பரிசு’ என்ற முதல் கதையை எழுதியதன் வழி மலேசியத் தமிழ்ச் சிறுகதை உலகின் அடியெடுத்து வைத்தவர். இதுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 1000திற்கும் மேற்பட்ட கட்டுரைகளும் 50க்கும் மேற்பட்ட கவிதைகளும் 12 நாவல்களும் எழுதியுள்ளார். இவர்பெற்ற பரிசுகளின் பட்டியல் மிக நீண்டது. ‘மலேசிய இலக்கிய வரலாறு’…

எல்லாமும் சரிதான்

பொட்டுப்பொட்டாகப் பனித்துளிபோல் நெற்றியில் வியர்வை துளிகள் பூத்திருந்தன. “காய்ச்ச… இப்பதான் அடங்கி வேர்க்குது டாக்டர்…” மடியில் கிடந்த குழந்தையை மார்பில் அணைத்தபடி பதற்றம் கலந்த கவலையை டிரேகன் ராஜாவின் முகத்தில் பார்ப்பது இதுதான் முதல் தடவை. சாதாரண சளிக்காய்ச்சலுக்கெல்லாம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடிவரும் டிரேகனைப் பார்க்கும்போதெல்லாம் இவன் ஏன் இங்கே வர்றான் என்றுதான் நினைப்பார் டத்தோ…

மாயமான் – கே.எஸ்.மணியம்

சில வருடங்களுக்கு முன்,  பாசீர் பஞ்சாங்கின் புறநகர்ப்பகுதியில், தாமான் பஹாகியா புதிய வீடமைப்பு திட்டம் உருவானபின் அதுவரையிலும் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழிடங்களைப் பெயர்த்தெடுக்க வேண்டியதாகியது. அத்திட்டத்தில் உருவான நவீன, தனித்த, ஆடம்பர இரட்டைமாடி வீட்டு வரிசைகளின் குடியிருப்பைக் கடந்து, காடும் அதை ஒட்டிய மலை முகடுகளுக்கும் நெருக்கமான, ஓர் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அவர்கள்…

பொதுத்தேர்தலின் முடிவும் எழுத்தாளர் சங்கத்தின் வாக்குறுதியும்.

2017இல் எழுத்தாளர் சங்க தேர்தலுக்குப் பிறகு மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதியிருந்தேன். ஒரு சுரண்டலுக்குக் கல்வித்துறையின் வழி அவர் சம்பாதித்த நற்பெயரை ஆயுதமாக வழங்கியிருந்ததை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட மடல் அது. எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் ஒவ்வொரு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பயம் நெருக்கும் போது புதிதாகச் சில திட்டங்களை ஆண்டுக்கூட்டத்தில் கூறுவார்.…

எங்கெங்கு காணினும் எண்களடா: ‘கணிதத்தின் கதை’ நூல் நோட்டம்

கொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கிடங்கில் நுழைந்ததும் எந்த நோக்கமும் இல்லாமல் கண்ணில் பட்ட நூல்களை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். வாசகர்களின் தேடலுக்கு வசதியாக எழுத்தாளர்கள் அடிப்படையிலும் இலக்கிய வகைகள் அடிப்படையிலும் நூல்கள் அடுக்கப்பட்டு இருந்தன. பிரபலமான நூல்களில் இருந்து சற்று விலகி மேல் மாடிக்குச் செல்லும் வழியில் மாணவர் பள்ளி நூல்கள் இருந்தன. இலங்கை தமிழ்ப்பள்ளிகளில்…

சு.வேணுகோபால் பதில்கள்

உங்களின் தமிழ்ச்சிறுகதை பெருவெளி நூலுக்கு கே.என் செந்திலின் விமர்சனம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?  பூவேந்தன் அன்புடன் பூவேந்தனுக்கு, அறத்திற்குப் புறம்பான திட்டமிட்ட வக்கிற நாடகங்களை காலம் பொசுக்கி விடும். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை தங்களின் ஆன்மிகம் என்ன? மத நம்பிக்கை உண்டா உங்களுக்கு?…

தமிழ் உதயா கவிதைகள்

கொலைக்காடு ஒன்று வெவ்வேறு மர்மங்களால் ஆனது முட்களால் , வாள்களால், துளைக்கும் ரவைகளால், விடமேறிய சொற்களாலும் கூட. அவரவர் மனங்களின் எடைகளைப் பொறுத்தது சாவுக்கு சாவு மாறுபட்ட வெகு நீண்ட நாளொன்றில் நான் வரைபடத்தோடு கொலைக்காட்டுக்குச் சென்றேன் எட்ட நின்று அமிழ்தம் கவிழ்ந்த விடத்தில் கை நனைத்தேன் பருத்திச்சுளை தின்று பாற்பற்கள் கொழுத்திருந்தன ஆயிரம் நீர்ச்சுனைகள்…

“பெரும்மாற்றங்கள் நிகழ பிடிவாதமான கொள்கைகள் அவசியமாகவே உள்ளன” டாக்டர் ஜெயக்குமார்

காலஞ்சென்ற கிளந்தான் மாநில முதல்வர் நிக் அப்துல் அசிஸ் அவர்களுக்குப் பிறகு எளிமையான வாழ்க்கை மூலம் அரசியல் சூழலில் கவனத்தைப்பெற்றவர் டாக்டர் ஜெயகுமார். எளிய வீடு, வாகனம் என்பதோடு ஆண்டுதோறும் அவர் அறிவிக்கும் தனது சொத்துடமை பிரகடனம் மலேசிய அரசியல்வாதிகளில் யாரும் கடைப்பிடிக்காத கொள்கைகள். 2008 ஆம் ஆண்டு மலேசிய சோசலிசக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான…

“உலகுக்கு நான் விட்டுச்செல்வது எனது நூல்களைத்தான்” – பி.கிருஷ்ணன்

சிங்கப்பூரின் முன்னோடி மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான  பி. கிருஷ்ணன் இலக்கியப் பணிக்காக சிங்கப்பூரின் உயரிய விருதான கலாசார பதக்கம் முதல், தென்கிழக்காசிய இலக்கிய விருது, தமிழவேள் விருது எனப் பல விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர். 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1953ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆரம்பகால நிறுவனராகவும் துணைச் செயலாளராகவும் இருந்த…

சு.வேணுகோபால் பதில்கள்

மதிப்பிற்குறிய ஐயா. நான் கடந்த முறை கேள்வி கேட்டிருந்த ஆதவன். புதுவிசை ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா இல்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேலும் ஒரு கேள்வி. தங்கள் கருத்துகளை வெளிப்படையாகவும் எடிட்டிங் இன்றியும் எழுத ஏன் அகப்பக்கம் ஒன்று வைத்திருக்ககூடாது ? ஆதவன், தமிழகம்   அன்புமிக்க ஆதவனுக்கு, என்னுடைய கருத்துக்களை வெளிப்படையாகவும் எடிட்டிங் இல்லாமலும்…

ஊதா நிற தேவதைகள்

1982-இல், எழுத்தாளர் எலிஸ் வால்கர்  எழுதிய ‘The Colour Purple’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம்,  இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கத்தில் 1985-இல் வெளிவந்தது. இந்நாவலை எழுதிய எலிஸ் வால்கர்  நாவலுக்கான PULIZER விருது பெற்ற முதல் ஆப்பிரிக்கர்-அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. Jaws, Indiana Jones, Jurassic Park போன்ற பல வெற்றிப்…

பெருமிதம், தாழ்வுணர்வு மற்றும் சில தடுமாற்றங்கள்

01) மலேசியாவிலிருந்து ‘வல்லினம்’ இலக்கியச் செயற்பாட்டியக்கத்தைச் சேர்ந்த குழுவினர் 2018 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்களுடைய வருகையின் நோக்கம் மலேசிய இலக்கியம் பற்றிய அறிமுகத்தையும் அதையொட்டிய பரஸ்பர இலக்கிய உரையாடல்கள், அறிமுகங்களையும் நிகழ்த்துவது. இதை வல்லினம் இதழின் ஆசிரியர் ம. நவீன் தன்னுடைய பதிவில் கீழ்வருமாறு தெளிவாக விளக்கியுள்ளார். “‘வல்லினம் 100’ களஞ்சியத்தை…

சிலந்தி

ஐந்தடி அகலத்தில் நீளமாக இருக்கும் அந்தத் தாழ்வாரத்தின் பூத்தொட்டிகளில் கரும்பச்சை, இளம்பச்சை, செம்பச்சை என்று பலவண்ணப் பச்சைகளில் இருந்த இலைகளில் வெய்யில் நீண்டு படர்ந்திருந்தது. நீளநீளமான வெள்ளைக்கோடுகள் இருக்கும் இலைகள் நிறைந்த செடியின் ஓரமாக எனது நாற்காலியை நிறுத்திவிட்டு, தனது கைப்பெட்டியைத் திறந்து ஒரு பெரிய நீலநிறத் துணியை எடுத்து எனது கழுத்தைச் சுற்றிக் கட்டினான்…

”ப்ளூடூத் ஜோஹன்”

ப்ளூடூத் என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதும் அது தானாகவே வந்து ஜோஹனின் காதுகளில் அமர்ந்துகொண்டது. அது தரம் உயர்த்தப்பட்டு வெவ்வேறு வடிவம் எடுத்தாலும் உடனுக்குடன்  எப்படியாவது அவரை வந்தடையும் ரகசியம் யாரும் அறியாதது. அவற்றின் வழியேதான் நானாவித உலகப்பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லிக்கொண்டிருந்தார். சிலுவாருக்குள் நேர்த்தியாக நுழைக்கப்பட்ட சிவப்பு பனியனும் இடையில் பெல்ட்டும் அணிந்து புல்தரையில் அவர் பேசிச்செல்லும்…

வெள்ளை பாப்பாத்தி

மினி சைக்கிளின் இரும்பு கேரியரில் அமர்ந்துகொண்டால் ருக்குவின் பிட்டம் கொடிமலருக்குத் தலையணையாகிவிடும். பெடலை மிதிக்கும்போது விளம்பித லயத்தில் தலை அசைந்து தாலாட்டுவதுபோல இருக்கும். அவள் பள்ளிக்கு மட்டம் போடத்தொடங்கிய ஒருசில நாட்களுக்கு முன்புதான் இறுதியாண்டு சோதனை முடிந்திருந்தது. இரவல் பாடப் புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு, தேர்வுத் தாட்களையும் முடிவு அட்டையையும் பெற்றுக்கொள்ளச் சொல்லி கதிர்வேலுவை ஆசிரியர் ஏவும்…