I மாமாவிடம் இருந்து போன் கால் வந்தது.“சேகரு, ஆபிஸிற்கு வா.” என்று சொல்லிவிட்டு என் பதிலைக் கேட்குமுன் அழைப்பைத் துண்டித்துவிட்டார். அவர் எப்போதும் அப்படித்தான். பைக்கை எடுத்துக்கொண்டு உடனே கிளம்பினேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மாமாவிடம் வேலைக்குச் சேர்ந்தேன். என்ன வேலை என்று கேட்டால் என்னால் சரியாகப் பதில் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. நான்…
மந்திர மெத்தை
தூக்கம் ஏமாற்றிக் கொண்டிருந்த நள்ளிரவில் அறைக்குள் ரகசியமாக நுழைந்து உள்ளே சுற்ற ஆரம்பித்தது ஏதோ ஒரு பாட்டிசை. கைப்பேசி எடுத்து மணி பார்த்தேன், மூன்று. எழுந்து வெளியே வந்தேன். அப்பாவும் அம்மாவும் உறங்காமல் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். “ஏதாவது வேணுமா” என்றாள் அம்மா. தலையசைத்துத் தண்ணீர் குடிக்கச் செல்வது போல சமையலறைக்குள் சென்று…
தூசி
”அண்ணே பீமநகரி பஸ் எப்ப வரும்னு சொல்ல முடியுமா” என டீக்கடைக்காரரிடம் வெளியூர்க்காரர்களுக்கேயுரிய ஒரு அந்நியத்தன்மையையும் ஐயத்தையும் ஒருங்கே திரட்டி மெல்லக் கேட்டேன். அதைக் காதில் வாங்காத பாவனையில் டீயை ஆற்றிக் கொண்டே “அதெல்லாம் நேரக்கணக்கு கிடயாது. நில்லும். அதுவா வரும்போது வரும்” என்றார். அங்கிருந்த பொன்மஞ்சள் நிறத்திலான பஜ்ஜியைப் பார்த்தபோது பசி அடிவயிற்றைக் கிள்ளியது.…
ஆசான்
“வீட்டுக்கு வந்து ரெண்டு மணிக்கூட ஆகல, அதுக்குள்ள எங்கல போற? ஒனக்கு பிடிக்குமேன்னு ரசவட செஞ்சு வச்சா, ஒரு வாயி திங்கல. போக்கு சரியில்ல கேட்டியாடே…” நான் சட்டையை மாற்றும் போது, கூடவே அம்மையின் அர்ச்சனையும் ஆரம்பித்தது. “வெளிய போறதுலாம் சரி, வேற ஏதாவது பண்ணிட்டு வந்த, வீட்டு நடைல ஏறக் கூடாது. அப்பனுக்க எல்லா…
தாவாய்: இயற்கையுடனான ஒத்திசைவு
இயற்கையைச் சார்ந்து மட்டுமே வாழ்வை அமைத்துக் கொள்வதென்பது மாதிரியான கருத்துருவாக்கங்களைச் சமூக ஊடகத் தளத்தில் அதிகமாகக் காண முடிகிறது. விலங்கு ஊன்களைத் தவிர்ப்பது, தாவரங்களிலிருந்து பெறப்பட்ட உணவுகள், உடைகளை மட்டுமே பயன்படுத்துதல், தனிப்பயணம் மேற்கொள்ளுதல் என இயற்கையுடன் ஒன்றித்து வாழ முற்படும் வகையிலான முயற்சிகளை வாழ்க்கை முறையாகவே முன்வைக்கும் பதிவுகளுக்குப் பெருமளவிலான ஈர்ப்பு உருவாகியிருக்கிறது. அந்த…
வல்லினம் & GTLF இணைவில் மாபெரும் இலக்கிய விழா
இம்மாத இதழ், வல்லினம் மற்றும் ஜார்ச் டவுன் இலக்கிய விழா குழுமத்தின் இணைவில் நடைபெற உள்ள மாபெரும் இலக்கிய விழாவின் சிறப்பிதழாக மலர்கிறது. இலக்கிய விழா தகவல்களோடு அதில் பங்கெடுக்கும் இலக்கிய ஆளுமைகள் குறித்த விரிவான கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. உலகில் தலைசிறந்த இலக்கிய விழாக்களில் ஒன்றான ஜார்ச் டவுன் இலக்கிய விழாவில் வல்லினமும் ஒரு…
கனவுகள் குவியும் களம்
கடந்த ஆண்டு மலேசியாவில் நடக்கும் அனைத்துலக இலக்கிய சங்கமமான ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் (George Town Literary Festival) கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பினாங்கில் உள்ள யுனெஸ்கோ உலக மரபுடைமைப் பகுதியான ஜார்ஜ் டவுனில், ஆண்டுதோறும் நவம்பர் வார இறுதியில் நடத்தப்படும் இவ்விழா குறித்துத் தமிழ்ச் சூழலில் அறிமுகம் குறைவுதான். அதற்குத் தமிழ்ச்…
எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புலகம்
நூற்றாண்டு வரலாறு கொண்ட நவீனத்தமிழிலக்கிய வரலாற்றில் எண்ணிக்கையாலும் தரத்தாலும் மேம்பட்ட பல படைப்புகளின் வாயிலாக மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்தாளர் ஜெயமோகனின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாக அவரின் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இந்திய ஞான மரபு கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள் ஆகியவற்றுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் வாயிலாக முன்னெடுத்து வரும் இலக்கிய,…
புதுமைதாசன்: சிங்கப்பூர் கலை எழுச்சியின் அடையாளம்
மெலிந்த சிறிய உருவம். தன்னை வெளிப்படுத்தாத மிகுந்த உள் அடக்கம். பெரும் நிகழ்விலோ சிறு கூடலிலோ கைகளைப் பின்னால் கட்டியபடி அமைதியாக நிற்கும் பி.கிருஷ்ணனைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் சராசரி முதியவர் என்று கடந்துவிடக்கூடும். ஆனால், பழுப்படைந்த விழிகளில் பொதிந்துள்ள அறிவின் ஒளியை எதிர்கொள்ளும்போதும் கணீரென கனத்து ஒலிக்கும் குரலைச் செவிமடுக்கும்போதும் அவர்பால் மரியாதை கலந்த…
தமிழ் விக்கி: மலேசியக் கலைக்களஞ்சியம் அறிமுக விழா
நடைமுறையில் இருக்கும் ஒன்றின் மீது பொதுவாகப் பலருக்கும் விமர்சனங்கள், குறைகள் மாற்று கருத்துகள் இருப்பது மிக இயல்பானது. அரசியல் முதல் சமூக அமைப்பின் பல்வேறு செயல்பாடுகள் மீதும் இதே நிலைதான் உள்ளது. ஆனால் பெருவாரியாகக் குறை காண்பவர் அல்லது விமர்சனம் வைப்பவர் அந்தச் சூழலை மாற்றும் திட்டங்களில் இறங்குவதில்லை. அப்படி இறங்கி போராடி மொத்த அமைப்பையும்…
விஸ்வநாதன்: கலைக்குள் உழலும் மண்புழு
விஸ்வநாதன் என்ற பெயர் கலையுலகில் அறியப்பட்டது மிகக்குறைவுதான். எழுத்துலகில் அதனிலும் அரிது. மேடையிலும் தொலைக்காட்சியிலும் ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளவர். மேடை நாடகங்களில் இயக்குனராகவும் துணை இயக்குனராகவும் பங்காற்றியவர். ஆனால் எதிலும் எப்போதும் ஒதுங்கி நிற்பவர். தன்னை முனைப்புடன் முன்வைக்கத் தெரியாதவர். முன்வைப்பதை ஒட்டிய அரசியலையும் அறியாதவர் எனலாம். விஸ்வநாதனை முதலில் ஓர் ஆசிரியராகவே அறிவேன். இவருடன்…