இளம் தலைமுறையின் இடைக்கால ஈடுபாடு ரெ.பாண்டியன், விஜயன், அரவிந்தன், ராஜசேகர், ராஜாராம், சூரியரத்னா, பாலமலர் போன்றவர்களால் 1988ல் தொடங்கப்பட்ட வாசகர் வட்டம் நவீன இலக்கிய வாசிப்பு, விமர்சனத் தேடலுக்குக் களம் அமைத்தது. இதே காலகட்டத்தில் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவுப் பிரிவின் தமிழ்ப் பகுதியும் உயர்நிலைப் பள்ளி மூத்த தமிழாசிரியர் மத்திய குழுவும் இணைந்து உயர்நிலைப்…
சடக்கு அறிமுகமும் சீ.முத்துசாமி படைப்புலகமும் (காணொளி)
இலங்கை வாசகர்களும் இலக்கிய வாசகர்களும்
எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் ‘இலங்கை,நவீன்‘ எனும் குறிப்பை வாசித்தபோதே அதை ஒட்டிய சர்ச்சை எழும் என அறிந்ததுதான். ஒரு பயணக்குறிப்பு அதை வாசிக்கும் நபர்களின் தேடலில் / தேவையில் இருந்து உள்வாங்கப்படுகிறது. உண்மையில் என் பயணக்குறிப்புகள் எதை ஒட்டியும் ஆழமான பதிவொன்றைச் செய்யவில்லை. அவை அப்போதைய எனது மனப்பதிவின் புகைப்படங்கள். ஜெயமோகன் பிரதானமாக ஒரு நிலத்தின்…
ஏன் சடக்கு?
‘சடக்கு’ இணையத்தளம் மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் முகத்தை படங்கள், துண்டு பிரசுரங்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் வாயிலாக ஆவணப்படுத்தி பொது பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்பது ஒருவகை புரிதல். ஆவணப்படுத்துதல் எனும் பதத்தைவிட காப்பகப்படுத்துதல் எனும் பதம்தான் இவ்விணையத்தள உருவாக்கத்திற்கு மிகப் பொருத்தமான பதமாக இருக்கும். ஆவணப்படுத்துதல் என்பது பயன்மதிப்புமிக்க…
சு. வேணுகோபால் பதில்கள்
ஐயா, நான் உங்கள் சிறுகதைகளை வாசித்துள்ளேன். பெரும்பாலான கதைகள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் நவீன இலக்கியத்தில் பலர் கதைகளை வாசித்து விளங்கிக்கொண்டுள்ளேன். தாங்கள் எவ்வகையில் மற்ற எழுத்தாளர்களுடன் மாறுபடுகிறீர்கள்? மித்ரன், சென்னை அன்புடன் மித்திரனுக்கு, உங்கள் கேள்வியில் இரண்டு விசயங்களை முன் வைத்துள்ளீர்கள். பிறர் எழுதுகிற நவீன கதைகள் புரிந்து கொள்ளும் படியாக இருக்கின்றன. என்…
“விரிந்த வாழ்வின் விசித்திர அனுபவங்களே எனக்கான கதைகள்” – கே.ராஜகோபால்
குறும்படங்களுக்கான போட்டி அறிவிப்பொன்றில்தான் கே.ராஜகோபால் எனும் இயக்குனரை முதன்முறையாக அறிந்தேன். நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினர் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரைப்பற்றி அறிந்துகொள்ள மேலும் தேடியபோது நிறைய குறும்படங்களையும் ஒரு திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார் என்றும் அறிந்தேன். அத்திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த நொடியில் அவர் எத்தனை முக்கிய படைப்பாளி என்பதை உணர முடிந்தது. அப்படம் “மஞ்சள் பறவை”…
இஸ்ரேலிய எழுத்தாளர் எட்கர் கரிட் (Etger Keret) சிறுகதைகள்
உன்னுடையவன் – Your Man என்னைவிட்டு பிரியப்போவதாக எபிகாயில் கூறியபோது நான் அதிர்ச்சியில் இருந்தேன். வாடகை வண்டி அவளுடைய இடத்தில் தான் வண்டியை நிறுத்திவிட்டிருந்தது. அவள் காரிலிருந்து இறங்கி அருகிலிருந்த நடைபாதையில் நின்றவாறு இதற்குமேல் என்னைத் தேடி வர வேண்டாம் என்றாள், இதைப்பற்றி தொடர்ந்து பேசவும் விரும்பவில்லை என்றாள். இதெல்லாம்விட மிக முக்கியமாக என்னிடமிருந்து எந்த…
தே-ஓ கோசோங்
நேற்றிரவு படுக்கப்போகும்போது இருந்த தலைவலி இன்று காலையில் எழுந்திருக்கும்போதும் தொடர்ந்தது. இரவில் மூன்று-நான்கு முறை எழுந்து சிறுநீர் கழிக்கச்சென்றதில் சரியான உறக்கமில்லை. உறக்கத்தில் மூழ்கத்தொடங்கும் வேளையில் அல்லது உறக்கம் பிடித்த சிலநிமிடங்களில் மீண்டும் உந்துதல் தோன்ற எழுந்து கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே படுக்கையிலிருந்து எழும்போதே உறக்கச்சடவும் உடன் சேர்ந்துகொண்டது. வலப்புறப் பாதவிரல் நுனிகளில் லேசான…
சடக்கு வந்த வழி
ஆவணப்படங்களை இயக்கிக்கொண்டிருந்த சமயம் ஒரு பெரும் போதாமையை உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தங்களுக்கு முந்தைய தலைமுறை ஆளுமைகள் குறித்து கூறும்போது அவ்வாளுமைகளின் படங்கள் கிடைக்காமல் திணறுவோம். ஆவணப்பட செறிவாக்கப்பணியில் அந்தக் குறிப்பிட்ட ஆளுமைகளின் படத்தை இணைக்காமல் மனம் நிறைவு கொள்ளாது. இது ஒரு ஊனமாக மனதில் உறுத்திக்கொண்டிருந்த சமயம்தான் கோ.சாரங்கபாணிக்கும் இதே…
சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்
அபிப்பிராய பேதங்கள் என் அபிப்பிராயங்கள் அனைத்தையும் வழவழப்பான கூழாங்கற்களாக்கி வீட்டு வரவேற்பறையில் உள்ள மீன் தொட்டியில் போட்டு வைத்திருந்தேன். ‘நல்லவிலைக்கு வந்தால் ஒரு கடலும் வாங்கிவிடலாம்’ என்றாள் லலிதா. இன்று ஞாயிற்றுக்கிழமை இருவரும் கடல் விற்கும் கடைக்குப் போனோம். ’மாதாந்திர வாடகைக்கு பௌர்ணமி அலைகள் சகிதம் சமுத்திரமே கிடைக்கும்’ என்றான் கடல் விற்பவன். சமுத்திரம் வாங்கி…
ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 2
மலாய், சீன இலக்கியங்களின் எழுச்சியும் தனித்து வளர்ந்த தமிழ் இலக்கியமும் இக்காலகட்டத்தில்தான், (1950களில்) மலாய், சீன இலக்கியங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. சீன இலக்கியத்தில் சமூகம், கலாசாரம் சார்ந்து இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன என்கிறார் டாக்டர் டான் சீ லே (Chee Lay, Tan, 2015). முதலாவது மலாயா சீன இலக்கியத்தின் தனித்தன்மையை வளர்க்கும் நன்யாங்…