கடிதம்/எதிர்வினை
பேய்ச்சி: பெண்மையெல்லாம் பேய்ச்சி
முதலில் ‘பேய்ச்சி’யை பேச்சி என்று தான் நினைத்தேன். ஆனால் பேய்ச்சி என திட்டமிட்டு பெயரிடப்படிருக்கிறது என படிக்கப் படிக்கதான் தெரிந்தது. பேய்ச்சி நாவலின் நிலப்பரப்பு எனக்கு கொஞ்சம் பரிச்சியமானதுதான். நானும் கெடாகாரி. லூனாஸும் டப்ளினும் ரொம்பவும் தூரமில்லையே. அதனாலேயே நாவலில் இன்னுமும் ஆழ்ந்து விட்டேன்.
பேய்ச்சி: நூதன செயல்பாட்டின் அச்சுறுத்தும் அசலம்.
பேய்ச்சியின் அவதரிப்பு ஓர் உச்சக்கட்ட ஆச்சரியம்.
மனிதனுக்குள் புதைந்து கிடக்கின்ற மர்மங்களைப் பற்றி விஞ்ஞானம் புரிந்து கொண்டிருப்பது மேலெலுந்தவாரியாக இழையோடும் ஒரு விளிம்பு நிலைத்தான். அந்த விளிம்பைத் தாண்டி விஞ்ஞானத்துக்குப் புரிபடாத வியப்பூட்டுகிற மர்மங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதை அள்ளித் தெளித்து கொண்டே எழுத்தாளர் ம. நவீன் மனித சிந்தையின் நிசப்தத்தை நடப்புக்குக் கொண்டு வந்திருப்பது ஒரு விந்தை.
பேய்ச்சி – சுனில் கிருஷ்ணன்
நாவலைப் பற்றிய சில பொதுவான எதிர்பார்ப்புகள் உண்டு. நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என சொல்லப்படுவதுண்டு. ஒரு நல்ல நாவல் வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும். ஒரு வரலாற்று பிரக்ஞை நாவலுக்குள் செயல்பட வேண்டும். கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகருடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாக பரிணாமம் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ஒரு தளத்தை அடைய முற்படும் போது நாவல் தனிப்பட்ட முறையில் அகத்திற்கு நெருக்கமான ஒன்றாக ஆகிவிடுகிறது. ம.நவீனின் முதல் நாவல் ‘பேய்ச்சி’ அவ்வகையில், மேற்கூறிய அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்யும் தமிழ் புனைவு வெளியில், மிக முக்கியமான புதுவரவு என சொல்லலாம்.
மகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும்
சுனில் கிருஷ்ணன் பருந்துப் பார்வை என்ற தற்காப்புக் கவசத்துடன் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். (மகரந்த வெளி) மலேசிய / சிங்கப்பூர் பகுதிகளில் விடுபட்டுப்போனது போலவே இலங்கையின் பகுதியும் பாதியில் தொங்குகிறது.
இலங்கை மலையகப் படைப்புகளில் மாத்தளை சோமுவின் படைப்புகள் ஆய்வில் தவிர்க்க முடியாதவை. ஒரு தோட்டத்து நாதஸ்வரம், சொந்த நாட்டு அகதிகள், கருவறை மற்றும் அவரது சிறுகதைகளை விட்டுவிட்டு இந்தக் கட்டுரை நகர்ந்துள்ளது. அதேபோல எஸ்.பொவை தவிர்த்து நீங்கள் இலங்கை இலக்கியத்தைச் சொல்ல முடியாது. எஸ்.பொவின் கடைசியாக வெளிவந்த யாழினி நாவல் தற்கால அரசியலை முன்வைத்துப் பேசுகிறது. எவ்வகை இலக்கிய விவாதத்திலும் எஸ்.பொன்னுத்துரையின் சிறுகதை, நாவல்களின் வீச்சைத் தவிர்க்கவே முடியாது.
சுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம்
‘மகரந்த வெளி’ கட்டுரையை காலையில் வாசித்தவுடன் இதை எழுதுகிறேன். சுனில் கிருஷ்ணனின் உழைப்பின் மீது கொண்டுள்ள மரியாதை அவரது ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அதிகரிக்கிறது. சிங்கை – மலேசியப் பயணத்தில் இன்னும் பல அனுபவங்களை இக்கட்டுரையில் அவர் தொகுத்து அளித்துள்ளார். அது மலேசிய – சிங்கை படைப்புகளை இன்னும் நெருக்கமாக அறிய வழியமைத்துள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவான இலக்கிய வடிவங்களை ஒட்டிய பார்வையாக இக்கட்டுரை இடம்பெற்றிருந்தால் இன்னும் கூர்மையான அவதானிப்புகள் கிடைத்திருக்கலாம் என்று தோன்றியது. பெயர்களைப் பட்டியலிடுகையில் விடுபடல்கள் சாத்தியம் என்றாலும் ஈழ இலக்கியத்தில் எஸ்.பொவின் பெயர் விடுபடல் கூடாது என்றே எண்ணிக்கொண்டேன்.
மலேசிய ‘டான் குயிக்ஸாட்’
மதியழகன் வல்லினம் குறித்து கூறியுள்ள அவதூறுகள் என் பார்வைக்கு வந்தன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே அவரது அறிவின் வளத்தை படம்பிடித்துக்காட்டியபின்னர் (http://vallinam.com.my/navin/?cat=32) மீண்டும் தன் வெற்றுக்கூச்சலைத் தொடங்கியுள்ளார் என நினைக்கிறேன். அவற்றை முழுமையாக வாசித்தேன். அவற்றில் பாதி அவதூறுகள் வல்லினத்தின் மீதும், மீதி என் மீதும் என் நண்பர்கள் மீதும் சுமத்தப்பட்டிருந்தன.
நாரின் மணம்: சிதறடிக்கப்படும் அழகு
எழுத்து என்பது எனக்கு மிக பிடித்தக் கலைதான். எனினும், அதை எழுத முயன்ற அளவுக்கு வாசிக்க முயன்றதில்லை. அதன் காரணமாகவே எனது முயற்சிகள் பல தோல்வியில் முடிந்திருப்பது இப்போதுதான் புரிகிறது. வாசிப்பது நமக்கான அசல் தன்மையை இழக்கச் செய்யும். நம்மை அறியாமல் நம் எழுத்துகளில் பிறரின் சாயல் வந்தமரும் என நம்பியிருந்தேன். இந்த உச்சநிலை அறியாமையைத் திருத்திக் கொண்ட தளம் வல்லினத்தின் பத்தாவது கலை இலக்கிய விழாதான். இங்கிருந்துதான் எனக்குப் பத்திகளும் அறிமுகமாயின. கட்டுரைகள் பத்திகளில் இருந்து வேறுபடுவதே எனக்குப் புதிய தகவல்தான்.
தலைமையாசிரியர் மன்றம்: கோஷமும் கொதிப்பும்
தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்
வணக்கம் சார். உங்கள் கட்டுரையைப் படித்தேன். என் பள்ளிக் குழுமத்தில் பகிர்ந்தேன். கண்டிக்கப்பட்டேன். என் தோழிகள் பலருக்கும் இது நிகழ்ந்துள்ளது. இப்படித் தனித்தனியாக பேசும்போது பள்ளியில் முடக்கப்படுவோம். ஒன்றாக இணைந்து இப்போட்டியை நிராகரித்தால் என்ன? கடந்த ஆண்டும் இதே போன்ற அறிக்கையே வந்தது. வயிறு எரிகிறது. நிகழ்ச்சி அன்று அனைத்து ஆசிரியர்களும் ஒற்றுமையாக கோஷமிட்டு நிராகரித்தால் உண்டு. முன் வருவார்களா?
மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
கடிதங்கள் 2: தலைமை ஆசிரியர் மன்றம்
தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்
நியாயமான மனதின் மனசாட்சியில் உறுத்தலை ஏற்படுத்த வாய்ப்புள்ள கேள்விகள்! பிழைப்புக்கு
முன்பு அனைத்தையும் சரணடைய வைத்துவிட்டஒரு தலைமுறை ஆசிரியர் கூட்டம் இதனையும் எவ்வித எதிர்வினையுமின்றி கள்ள மௌனத்துடன் கடந்து போகலாம். சமூகநலன் சார்ந்த நியாயமான கேள்விகள் என்பதால் பொதுவெளிக்கு கொண்டு போவதே சரி என்பது எனது அபிப்பிராயம்! அதிலும் இது நாம் புழங்குகிற மொழி என்னும் தளம் என்பதால் பொதுவெளிக்கு கொண்டு செல்கிற பொறுப்பும் வல்லினத்திற்கு உண்டு என்றே சொல்லலாம்!
எழுத்தாளர் சீ.முத்துசாமி
