கடிதம்/எதிர்வினை

பேச்சி: சிவமணியன் கடிதம்

Cerita-Hantu-Sawitri-nan-Mistis-Di-Perkebunan-Kelapa-Sawit-Kalimantanஅன்புள்ள நவீனுக்கு,

பேச்சி கதை வாசிப்பின் முடிவில்,  புதிதாக தீட்டப்பட்டு அதன் தணல் கூட குறையாத கத்தி, முதல் பலியினை அறுத்து அதன் குருதியில் தோய்ந்த  உடனேயே, தன் கூர்நுனி கொண்டு பிரசவித்த பெண்ணின் மார்புக் காம்பில் நுண்துளையிட்டு, உறைந்து அடைத்த முலைப்பாலை, இளக்கி வெளிக்கொணர்ந்து, பிறந்த குழந்தைக்கு பருகக் கொடுத்த காட்சியை கண்டது போல இருந்தது.

Continue reading

பேச்சி : கடிதங்கள்

20180304_162353கதைக்குள் நுழைவதற்குள், கதைசொல்லியை நான்கு வார்த்தைகள் திட்டிவிட வேண்டும்.

வார்த்தைக்கு வார்த்தை வியக்கும்படிச் சொல்லிச் செல்லும் யுக்தியை எங்கிருந்து ஐயா கௌவிக்கொண்டீர்கள்?

ஒரு சிறுகதையில் இவ்வளவு சொல்ல முடியுமா என்ற வியப்பை அள்ளிக் கொட்டுவதில் அப்படியென்ன வெறி உங்களுக்கு?

சிறிய புள்ளியான கருவை நீங்கள் பாட்டுக்கும் கிறுக்கித் தள்ளி திகைக்க வைப்பதில் யார் மேல் இந்த ஆதங்கம்?

அடிக்கடி புதியவைகளை எழுதித் தள்ள எங்கிருந்து கிடக்கிறது நேரம்?

Continue reading

பேச்சி : கடிதங்கள்

20180304_161641-300x218பேரன்புக்குரிய நவீன். அசத்தலான கதை ஒன்றை கொடுத்துவிட்டீர்கள். பிசகு இல்லாமல் ஆரம்பித்த இடத்தில் முடித்துள்ளீர்கள். நவீனமும் தொன்மமும் பாம்புகளாகி ஒன்றுடன் ஒன்று ஊர்ந்து (பிணைந்து)உச்சத்தை அடைந்து நல் வாசிப்பனுவத்தை வழங்கியது.

மூன்று தலைமுறை ஆண்கள்.

Continue reading

பேச்சி: சுனில் கிருஷ்ணன்

அன்புள்ள நவீன்

இதுவரை வந்துள்ள இந்த வரிசை கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை என ‘பேச்சி‘யை suneeசொல்வேன். ‘யாக்கை’ யின் கதை சொல்லல் பாணி இதிலும் தொடர்கிறது. அப்பா கதை சொல்லியாகவும், அப்பா சொல்லி மகன் செல்வம் எழுதிய கதை என இரு சரடாக பிணைந்து செல்கிறது. அப்பா சொன்ன கதையே கூட செல்வம் சொன்னதுதானா என்றொரு மயக்கத்தை கதை அளிக்கிறது. இரண்டு கதைகளில் ஒரு கதை முற்று பெறுகிறது, மற்றொன்று பெறவில்லை என்பதாக கூட தோற்றமயக்கம் உருவாக்கியதில் கதை வெற்றி பெற்றுள்ளது. ‘கிராப்ட்’ ரீதியாக இந்த சோதனை கதை சொல்லல் முறையில் தேர்ந்து விட்டீர்கள் என்றே சொல்ல வேண்டும். எனினும் இதில் ஒரு சிறிய ஆபத்து உள்ளது, இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாக ஆகிவிடக்கூடும். கருப்பு மண்ணுக்கு அடியில் சிவந்த மண் கொம்பனை நினைவுபடுத்தியது போன்ற தகவல் வாசகரை கவனம் சிதற செய்யும் யுத்தியாக ஆகிவிடக்கூடும். தொன்மமும் உறவு சிக்கலும் முயங்கும் கதை. பேச்சி எனும் தொன்மம் வழியாக உறவு சிடுக்கை, பெண் உளத்தை தொட முயல்கிறது.

Continue reading

யாக்கை : கடிதங்கள் 5

யாக்கை: சிறுகதை

அன்புள்ள நவீனுக்கு,drawn-fishing-sea-fish-14

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

கனவு கலைந்து,  கலங்கிய நினைவுடன் விழித்தெழுந்த, ஒரு அதிகாலையில் முதல் வேலையாக ‘யாக்கை’ கதையை வாசித்தேன்.  அந்த தருணம் முதல் எழுதும் இந்தக் கணம் வரை மனதில்  ‘யாக்கை’ யே நிரம்பி வியாபித்திருக்கிறது.  ‘காலைக் காட்சியில் பாசியால் நிரம்பி பச்சை நிறத்தில் காட்சியளித்த கடல்’ , ‘ஆழ்கடலுக்குள் உண்டாக்கிய அலைகளால் நீர்  செம்மண்  நிறத்திலிருந்தது’ போன்ற வர்ணனைகளும்,  ‘மழை பெய்த கடலடியில் மண் கிளம்பி கண்ணாடி போன்ற வலையில் படிந்து விட்டால் மீன்கள் உஷாராகி விடும்’ போன்ற நுண்தகவல்களும்,  ‘நீரில் உலர்ந்து பிளவுபடத்துவங்கிய முதுகுத்தோலை கொத்தி மீன்கள் சதையை பிய்த்த’, ஈத்தனின் வாழ்வின் உச்ச தருணங்களும், என இந்த கதை அபாரமான வாசிப்பனுபவம்  தந்தது.  கப்பலின் முன்பகுதிக்கு அணியம் எனவும், இங்கு சங்கரா மீன் என கூறப்படுவதன் ஒரு வகை, செப்பிலி மீன் எனவும் அறிந்து கொண்டேன்.

Continue reading

யாக்கை: விஜயலட்சுமி

உடலும் அதனுடன் சேர்ந்து உயிரும் இன்னொன்றுக்கு உணவாவதை ஈத்தனின் மரணமும் row-boat-boat-rowing-paddle-steering-girl-braidமகளின் தொழிலும் சொல்கிறது. கடலில் ஈத்தனின் உடல் மீன்களால் அனுமதியின்றி தின்னப்பட்டது. தன் மகள் ஆண்களால் தின்னபட்டுவிட்டாள் என்பதை புரிந்தவுடன் ஈத்தன் தன்னை கடலுக்கு இரையாக்குகிறான். இப்போது அவளுடன் புணர வந்தவன் தன்னையும் ஒரு உடல் தின்னி என்பதை உணரும்போது நிற்க முடியாமல் ஓடுகிறான்.

இது கதையோட gist.

Continue reading

யாக்கை: கடலூர் சீனு கடிதம்

பிரிய எழுத்தாளர் நவீன்

உங்கள் தளத்தில்  யாக்கை சிறுகதைக்கு வந்த வாசகர் எதிர்வினை அனைத்தும் வாசித்தேன் . ஒரு கதை எவ்வாறெல்லாம் வாசித்து உள்வாங்கப்படுகிறது என்பதை நெருங்கி அறிவது ஒரு வாசகனாக எப்போதுமே எனக்கு உவகை அளிப்பது .

கடிதங்களை வாசித்த வரையில் நான் அவதானித்தது மூன்று.

Continue reading

யாக்கை : கடிதம் – கிருஷ்ணன்

நவீன் ,

இந்த சிறுகதை மிகச்சிறப்பாக இருந்தது ,

உங்களது போன சிறுகதை போயாக்கில் வரும் கனவு மிக செயற்கையாக இருந்தது. உண்மையில் உள்ள அச்சம் அவ்வாறே கனவுருக்கொள்ளாது , உருமாறித் தான் தெரியும். மேலும் ஒரு ஆங்கில ஆசிரியரின் தர்க்கம் மீறிய அச்சம் ஏற்புடையதாக இல்லை. கதை சற்று மார்கோஸ் சாயலில் இருந்தது.

Continue reading

யாக்கை சிறுகதை – கடிதங்கள் 4

யாக்கை சிறுகதை  கதையை நகர்த்தும் பாத்திரங்களின் இரு உடல்களும் தங்களைக்row-boat-boat-rowing-paddle-steering-girl-braid காப்பாற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கிறது என்பதை மையப்படுத்துகிறது. ஈத்தனின் உடல் இனி மகளின் எதிர்கலத்தைக் காப்பாற்ற உதவாது என்பதையும், கேத்ரினின் உடல் காமுகரிடம் சிக்கி சிதைவுறப் போகிறது என்பதைக் குறியீட்டு ரீதியாகயாகவும் அழகியல் ரீதியாகவும் சொல்லிச் செல்கிறார்.  இரண்டு உடலுமே ‘தின்னக் கொடுத்து’ சன்னஞ் சன்னமாக அழிகிறது அல்லது அழியப்போகிறது என்பது அதன் சொல்லும் திறனில் சிறக்கிறது.

Continue reading

யாக்கை சிறுகதை – கடிதங்கள் 3

திருவாளர் நவீன் அவர்களுக்கு. போயாக் சிறுகதையின் மூலம் chewjettyஉங்களை அறிந்து உங்களது சிறுகதைகளையும் அறிந்தேன். ‘யாக்கை’ நல்லதொரு சிறுகதை.

ஈத்தனுடைய தந்தையார் ஈத்தனுக்காக தன் யாக்கையை சுறாமீனுக்குத் திண்ணக்கொடுக்கிறார். ஈத்தனுடைய மகளும் ஈத்தனால் தன் உடம்பை மனிதர்களுக்குத் திண்ணக்கொடுக்கிறாள். இப்படி இரு தலைமுறையினரை தனக்காகவும் தன்னாலும் திண்ணக்கொடுக்கவைத்த ஈத்தன் தன் யாக்கையையும் கடலுக்குத் திண்ணக்கொடுக்கிறார்.

Continue reading