
பகுதி 1 கேள்வி: அன்பின் மாலதி, ஓர் எழுத்தாளர் தன் படைப்பைப் பிரசுரிக்க இதழ்களைத் தேர்ந்தெடுக்கவேண்டுமா? நீங்கள் எல்லா இதழ்களிலும் எழுதுவதுண்டா? அதற்கான தேர்வு உண்டா? –வரன், கனடா. பதில்: நான் என்னுடைய படைப்புகளைப் பிரசுரிக்க இதழ்களை மிகக்கவனமாகத் தேர்வு செய்தே அனுப்புகிறேன். இங்குபெரும்பான்மையான சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்கள் மற்றும் மின்னிதழ்கள் புரவலர்களின் ஆதரவால், அரசியல்வாதிகளின் ஆதரவால்,கறுப்புப்பணத்தைக் கொண்டோ,தொண்டு நிறுவன…















