Category: பதிவு

சுந்தர ராமசாமி சிறுகதைகள்: தமிழாசியா கலந்துரையாடல்

தமிழாசியாவின் சிறுகதை வாசிப்புப் பகிர்வு 2023 ஏப்ரல் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் முதன்மையான ஆளுமைகளும் அவர்களின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளும் இந்தக் கலந்துரையாடல்களில் விரிவாக ஆராயப்படுகிறது. அவ்வகையில் கடந்த முறை (20.1.2024) எட்டாவது சந்திப்பில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் பிரசாதம், ரத்னாபாயின் ஆங்கிலம், விகாசம் ஆகிய சிறுகதைகள் உரையாட எடுத்துக்கொள்ளப்பட்டன.…

ஜெயகாந்தன் சிறுகதைகள்: தமிழாசியா கலந்துரையாடல்

தமிழ் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்ட மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனை அறியாத இலக்கிய வாசகர்கள் மிக அரிது. என் நவீன இலக்கிய வாசிப்பைக்கூட ஜெயகாந்தனின் எழுத்துகளின் மூலமே தொடங்கினேன். தமிழாசியாவில் தொடர்ந்து நடத்தப்படும் சிறுகதை கலந்துரையாடலில் இம்முறை(17.2.2024) ஜெயகாந்தனின் சிறுகதைகள் கலந்துரையாடப்பட்டது மிகுந்த மன நெருக்கத்தைக் கொடுத்தது. ‘நான் இருக்கிறேன்’, ‘முன்…

விஷ்ணுபுரம் அரங்கில் எஸ். எம். ஷாகீருடன் உரையாடல்

தமிழ்ச்சூழலில் பிறமொழி இலக்கியங்கள் குறிப்பாகக் கிழக்கத்திய மொழி இலக்கியங்கள் குறித்த அறிமுகங்களும் விவாதங்களும் மிகக் குறைவாகவே நடைபெற்றிருக்கின்றன. தென்கிழக்காசிய மொழிகளில் ஒன்றான மலாய் மொழியின் இலக்கியமும் அவ்விதமே ஒப்பு நோக்க தமிழ்ச்சூழலில் குறைவாகவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மலாயை ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்த போதிலும் மலாய் மொழி இலக்கியங்கள்…

கு. அழகிரிசாமியை வாசிக்கும் முறை

‘தமிழாசியா’ மாதம் ஓர் எழுத்தாளரை அறிமுகம் செய்துவைக்கும் வண்ணம் தொடர்ச்சியாகச் சிறுகதைக் கலந்துரையாடல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெவ்வேறு நிலையிலான இலக்கிய வாசிப்புப் பயிற்சி கொண்ட எட்டுப் பேர் பங்குகொண்டு வருகிறோம். ஆகஸ்ட் 19ஆம் திகதி நான்காவது சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், இருவர்…

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா 2023

வல்லினம் மற்றும் யாழ் பதிப்பகங்கள் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்றது. 2022இல் வல்லினம் ஏற்று நடத்திய அறிவியல் சிறுகதை போட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட யாழ் சிறுகதை போட்டி ஆகியவற்றுக்கான பரிசளிப்பு விழாவாக அது அமைந்தது. இவ்விரு பதிப்பகங்களின் நிர்வாகி எழுத்தாளர் ம.நவீனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. எழுத்தாளர் கி.…

வல்லினம் & GTLF: மூன்று நாள் இலக்கியப் பெருவிழா

நான் கடைசி நேரத்து பணிக்குவியல்களை விரும்பாதவன். அரக்கபரக்க பூர்த்தியாகும் செயல்பாடுகள், நேர்த்தியற்ற விளைபயன்களையே கொடுக்கும் என உறுதியாக நம்புபவன். இவ்வருட இலக்கிய விழா, பிரம்மாண்டமானது என்றும் அதை ஒட்டிய பணிகள் வலுவானவை என்பதையும் நான் அப்பேச்சு தொடங்கப்பட்ட காலத்திலேயே அறிவேன். எனவே, மே மாதமே அதன் செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கத் தொடங்கியிருந்தோம். என்னளவில் விழா என்பது…

வல்லினம் & GTLF இலக்கிய விழா காணொளிகள்

தமிழ் விக்கி அறிமுக விழா காணொளிகள் வரவேற்புரை ம.நவீன்தலைமை உரை அருண் மகிழ்நன் தமிழ் விக்கி கலந்துரையாடல் எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்புரை தமிழ் விக்கி பங்களிப்பாளர்களுக்கு நினைவு பரிசு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ஹேம்லட் ரோமியோ ஜூலியட் ஒத்தெல்லோ வழக்கறிஞர் சி. பசுபதி உரை பி. கிருஷ்ணன் உரை நாடக இயக்குனர் விஸ்வநாதன் உரை பி. கிருஷ்ணன்…

யுவன் சந்திரசேகர் வருகை – ஒரு பதிவு

ஜூன் 10 – 11 ஆகிய இரு நாட்கள் வல்லினம் ஏற்பாட்டில் நவீன கவிதை முகாம் நடைபெற்றது. இந்தப் பட்டறையை வழிநடத்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சிறப்பு வருகை புரிந்தார்.  ஜூன் 10 காலை 9 மணிக்குப் பட்டறை தொடங்கியது. காலை உணவுக்குப்பின் பங்கேற்பாளர்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டனர். மொத்தம் 25 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.  இந்தப்…

யுவன் கவிதை முகாமில் கலந்துகொண்டவர்களின் பதிவு

அமானுஷ்ய எழுத்து ஒரு சினிமா அல்லது இசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தால் வந்த மறுநொடி அந்த நிகழ்வைப் பற்றிய நமது அபிப்பிராயங்களை அல்லது அங்கு நாம் சிலாகித்த சில விஷயங்களை உடனே நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் பகிர்ந்து மகிழ்வோம். காரணம் அவை காட்சிகளோடு ஒலி ஒளி வடிவில் நமக்குள் புகுந்து நம்மை ரசிக்க…

யுவன் சந்திரசேகர் படைப்புலகம் நிகழ்ச்சி பதிவு (காணொளி)

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தலைமை உரை அரவின் குமார் உரை – குள்ளச்சித்திரன் அ, பாண்டியன் உரை – மணற்கேணி ம.நவீன் உரை – யுவன் சிறுகதைகளில் மூன்று கூறுகள் யுவன் சந்திரசேகர் உரை

நாவல் முகாம்: ஒரு பதிவு

செப்டம்பர் 2020இல் நாவல் முகாமுடன் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ரஷ்ய இலக்கியங்கள் குறித்து உரையாடலாம் என்ற எண்ணம் இருந்ததால் நகர சூழலை விட்டு ஒதுங்கிய இடமாகத் தேடினோம். அது கனமான தலைப்பாக இருக்கும் என்பதால் நகர இரைச்சல் ஏற்றதல்ல என்பது அனுமானம். முகாமுக்காக நண்பர் கங்காதுரை கண்டடைந்த இடம்தான் தைப்பிங்…

வல்லினம் விருது விழா 2022: சில நினைவுகள்

வல்லினம் விருது 2014இல் தொடங்கப்பட்டது. அ. ரெங்கசாமிக்கு முதல் வல்லினம் விருது வழங்கப்பட்டதோடு வல்லினத்தின் முதல் ஆவணப்பட முயற்சியும் அவரது வாழ்வைப் பதிவு செய்யும் திட்டத்தில்தான் தொடங்கப்பட்டது. அவ்விருது விழாவுக்குச் சிறப்பு விருந்தினராகக் கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலை கலந்து கொண்டார். பின்னர், 2019இல் சை.பீர்முகம்மது அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதின் வழி ‘வல்லினம் விருது’ தனக்கான…

‘வல்லினம்’ நாவல் முகாமின் முதல் நாள்

மழை நீரானது புவி மீதினில் சேற்றின் மீது பொழிவதைக் கண்டு மழை நீர் என்பது சேற்றினால் ஆனது என எண்ணம் கொள்வது அவரவர் அறியாமையினை உணர்த்திடும். சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மீதான எனது எண்ண ஓட்டங்களும் அதன் மீதான பார்வையும் அவ்வாறே இருந்தன எனலாம். வல்லினம் ஏற்பாட்டில் நான் கலந்து கொண்ட சுனில் கிருஸ்ணன் அவர்களுடனான…

‘வல்லினம்’ நாவல் முகாமின் இரண்டாவது நாள்

பிப்ரவரி 26-27 என இரு நாள்கள் நடந்த வல்லினம் நாவல் முகாமில் நானும் கலந்து கொண்டேன். நாவல் முகாம் குறித்த இரண்டாவது நாள் அனுபவங்களைப் பதிவு செய்யும்படி வல்லினம் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தப் பதிவினை எழுதுகிறேன். பிப்ரவரி 27, காலை சிற்றூண்டிக்குப் பின் சரியாக 8.00 மணிக்கு முகாம் தொடக்கம் கண்டது. புதிய படைப்பாளர்கள் படைப்புலகத்தில்…

நாவல் முகாம்: புதிய பங்கேற்பாளர்களின் அனுபவம்

கடந்த 26/2/2022-ஆம் திகதி தொடங்கி 27/2/2022-ஆம் திகதி வரை வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட நாவல் முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இதுவே நான் பங்கேற்கும் முதல் நாவல் முகாமாகும். அதிகம் சிறுகதைகள், கவிதைகளைச் சார்ந்த பட்டறைகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்த எனக்கு, நாவலைக் குறித்து நடத்தப்பட்ட இந்த முகாம் முற்றிலும் பல புதிய அனுபவத்தையே தந்தது. ‘நாவல்…