
செல்லப்பாவிற்கு ஒரு கனவு இருந்தது. வேதநாயகம் பிள்ளை, ராஜமய்யர், மாதவையா காலத்தில் ஏற்பட்ட ஒரு படைப்புத் திருப்பம்; பாரதி, வ.வே.சு.ஐயர், உ.வே.சா. உண்டாக்கிய எழுச்சிக்காலகட்டம்; வ.ரா.கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி ந.பிச்சமூர்த்தி முதலானோர் உருவாக்கிய புரட்சிகாலகட்டம் போல ஏன் மற்றொரு இலக்கிய காலகட்டம் கடந்த 20 ஆண்டுகளாக எழவில்லை? அதைப்போன்ற காலகட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற…