Category: கட்டுரை

SAKA: பழிவாங்கும் குலதெய்வங்கள்

சில வருடங்களுக்கு முன்னர் நான் பணியாற்றிய பள்ளிக்கு புதிதாக ஓர் ஆசிரியர் மாற்றலாகி வந்தார். கம்பீரமான தோற்றத்துடன் இனிமையாகப் பழகக்கூடியவர். அவர் மாநில சுல்தானின் தூரத்து உறவினர் என்று நண்பர்கள் கூறினர். அவரின் தோற்றம் அரசகுலத்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில்தான் இருந்தது. சில ஆண்டுகள் பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றிய அவர் திடீர் என்று நோய்வாய்ப்பட்டார். தொடர்ந்து…

ஸுனார் : அங்கதத்தைக் கலையாக்கிய ஆளுமை

கேலிச் சித்திரக் கலை ஒரு செய்தியை அல்லது தகவலை ஓவியம் வழி நகைச்சுவையுடன் மற்றவர்களுக்குக்கொண்டு செல்வதாகப் புரிந்துகொள்ளலாம். கோமாளி இதழுக்குப் பிறகு மலேசியத் தமிழ் இதழியல், பதிப்புச் சூழலில் கேலிச் சித்திரக் கலைஞர்கள் அரிதாகிவிட்ட சூழலைதான் தற்போது பார்க்கமுடிகிறது. அதிலும், சமூகப் பிரச்சனைகளையும் அரசியல் சிக்கல்களையும் கேலிச் சித்திரம் வழி பேசும் தமிழ்க் கலைஞர்கள் கடந்த…

மலாய் புராணக் கதைகள் ஓர் அறிமுகம்

எல்லாத் தொன்ம நிலங்கள் போலவே மலாய் மொழி புழங்கிய தீவுக்கூட்டங்களில் வாழ்ந்த எளிய மக்கள் மத்தியில் எழுத்து அறிமுகமாகாத காலத்தில் வாய்மொழியாகவே பல கதைகள் உருவாகி உலவி வந்தன. இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தென் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், புருணை, போன்ற நாடுகளை இந்த மலாய் தீவுக்கூட்டங்களில் உள்ளடக்கலாம். மன்னர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலப்பிரபுகளுக்கும் இருந்த…

விலங்குகள் சொல்லும் கதைகள்

‘Folklore’ எனும் சொல் 1864 ஆம் ஆண்டு ஜான் வில்லியம் தாமஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.தமிழில் நாட்டுப்புறவியல் என்பது இதன் சொல்லாட்சியாக இருக்கிறது.நாட்டுப்புறவியலில் பல வகைமைகள் இருந்தாலும் அதில் நமக்கு மிகவும் பரீட்சயமானது நாட்டுப்புறக் கதைகளாகும். நாட்டுப்புறக் கதைகள்(Folktales) அநாமதேயமாக உருவாக்கப்பட்டவை.அவை வாய்மொழியாக தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. அவை குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குள் மக்களால் பாதுகாக்கப்படுகின்றன.அவை ஒரு சமூகத்தின்…

ஹெமிங் வே: வாழ்வெனும் கடலுக்கு அஞ்சிய கிழவன்

ஊட்டி முகாமில் கலந்துகொண்டு திரும்பியபின் பல புதிய படைப்பாளிகள் எனக்கு அறிமுகமானார்கள். அம்முகாமுக்காக உருவாக்கப்பட்ட தளத்தில் இருந்த பல கதைகளை ஆர்வத்துடன் வாசித்தேன். அதில்தான் ஹெமிங் வே எனும் படைப்பாளி எனக்கு அறிமுகமானார். தொடர்ந்து அவர் எழுதிய கிழவனும் கடலும் என்ற நோபல் பரிசு பெற்ற நாவலின் குறும்படத்தைத் தேடிப் பார்த்தேன். அவர் குறித்து விரிவாக…

அவிழாத மொட்டுகள்

உங்கள் உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களின் பரப்பளவு ஒருநாள் சிறுத்துவிடுவதைப் பற்றி என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அல்லது கால் உடையாமல், ஊனப்படாமல் ஒரே இடத்தில் வாழ்க்கை முழுவதிலும் அமர்ந்துகொண்டு,சிறு வேலைக்குக்கூட அடுத்தவருடைய உதவியை நாடி வாழ்வதைப் பற்றி எண்ணியதுண்டா? இவையெல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்கள் வலிந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் அது ஒரு அலங்காரமாக அவர்கள்…

தையும் பொய்யும்

முன்னோட்டம் தமிழ் அறிவுச் சூழலில், கடந்த 30 ஆண்டுகளாகத் தொடரும் சர்ச்சைகளில் ஒன்று தமிழ்ப்புத்தாண்டு தொடர்பானது.  சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று சமூகம் வழங்கிய பழக்கத்துக்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும்  முயற்சியில்,  முடிவே இல்லாத வாதங்கள் தொடர்கின்றன. தை முதல் நாளே தமிழாண்டு தொடக்கம் என்ற உலக…

அணையா அனல் – இமையத்தின் ஐந்து நாவல்களை முன்வைத்து

எழுத்தாளர் இமையம் தமிழின் தற்கால கதைசொல்லிகளில் முதன்மையானவர்களில் ஒருவர். அவருடைய கதைகள் நடுநாடு என்று விளிக்கப்படும் வட தமிழக – புதுச்சேரி நிலப்பரப்பை களமாக கொண்டவை. இயல்புவாதத் தன்மையிலானவை. அந்நிலத்தின் மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் கையாள்பவை. இக்கட்டுரை அவருடைய ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங்கதே’ மற்றும் ‘செல்லாத பணம்’  என இதுவரை அவர் எழுதிய…

இமையம் சிறுகதைகள்: அறியப்பட்டதை ஆவணமாக்கும் கலை

(1) “தலித்தியம் என்றால் என்ன? எனக்குத் தெரியாது. பெண்ணியம் என்றால் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்பது குறித்தெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை. கோட்பாடுகள் என்னை எழுதத் தூண்டவில்லை. நிஜ வாழ்க்கைதான் எழுதத் தூண்டியது.” இது ஒரு நேர்காணலில் வெளிப்பட்ட எழுத்தாளர் இமையத்தின் குரல். அவருடன் தொடர்ந்து…

ஆறுமுகம் : ஒழுக்கவிதிகளுக்கு வெளியில்

சமூகம் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் அறிந்த, பழகும், சந்திக்கும் மனிதர்களால் மட்டும் ஆனதல்ல. அல்லது வரலாறு பதிவு செய்துள்ள உன்னத மனிதர்களையும் லட்சியப் புருஷர்களையும் மட்டும் கொண்டதல்ல. நாம் கண்டுகொள்ளாத அல்லது திட்டமிட்டே அறிய விரும்பாத மனிதர்களும் சமூகத்தின் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அருவருப்போடு நாம் ஒதுக்கிவைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாழ்க்கை…

பி.ரம்லி: கலை – கனவு – கலகம்

‘தூய கனவு நொறுங்கி சிதைந்தது கட்டிய மாளிகை கல்லறை ஆனது இருள் சூழும் வருங்காலம் வருவது நிச்சயம், என் ஆன்மா உழல்கிறது வடக்கும் தெற்கும்’ இது பி.ரம்லியின் வரிகள். அவர் இறுதியாய் எழுதிய மலாய் பாடல் வரிகள். அவர் வாழ்வின் இறுதிப்பகுதியின் அலைக்கழிப்பைச் சொல்லும் வரிகள். 1973 இல் தனது 44வது வயதில் இறப்பதற்கு முன்…

வல்லினம்: நேற்று – இன்று – நாளை

வல்லினம் பதினோராவது ஆண்டில் நுழைகிறது. 115ஆவது இதழ். ஒருவகையில் மலேசிய நவீன தமிழ் இலக்கியத்துக்கான பெரும் தொகுப்பு என வல்லினம் அகப்பக்கத்தைச் சொல்லலாம். கலை இலக்கியப் பதிவுகள், விமர்சனங்கள், வரலாறு, அரசியல், ஆவணப்படங்கள், நிழற்படங்கள் என பல்வேறு ஆக்கங்கள் உள்ள இந்தத் தளம் மலேசியத் தமிழ்ச் சூழலின் கடந்த ஐம்பது ஆண்டுகாலச் சித்திரத்தை எளிதாக ஒரு…

ICERD: ஒரு பின்னடைவு

மொழி, இனம், மதம் என்ற ஏதோ ஓர் அடையாளத்தின் காரணமாகத் தன்னை தனித்து வெளிப்படுத்துவது மனித இயல்பாக இருந்தாலும் அதே அடையாளத்தைக் காரணமாக்கி மற்ற அடையாளங்களைச் சிறுமைப்படுத்துவதோ உரிமைகளைப் பறிப்பதோ மனித நாகரீக வளர்ச்சிக்கு எதிரானது. நாகரீக சமூகம் என்பதன் முதன்மை அடையாளமாக  ‘மண்ணில் வாழும் எல்லா மனிதனும் சமம்’ என்னும் பரந்த நோக்கை நோக்கி…

அம்பாரி யானை

9௦ களின் தொடக்கத்தில் நவீன தமிழ் இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய எனக்கு பத்தாண்டுகள் கடந்த பின் சில கேள்விகள் இருந்தன. தமிழ் எழுத்தாளர்களை பொதுவாக வகைப்படுத்தும்போது வணிக எழுத்தாளர்கள், இலக்கிய எழுத்தாளர்கள் எனச் சொல்கிறோம். இலக்கிய எழுத்தாளர்களுக்குள் வந்தால் அதிலுமே சில பிரிவுகள் இருக்கின்றன. எழுத்தின் வகையாலன்றி பேசுபொருளின் அடிப்படையில் நான் வகுத்துக் கொண்ட விதத்தால்…

பவா செல்லத்துரை: பேச்சாளனாக மாறிய எழுத்தாளன்

சாயங்கால வேளைகளில் நரிக்குறவர்கள் ஏரிக்கரைகளில் கொக்கு சுட்டு ஊர்த்தெருக்கள் வழியாக விற்றுச்செல்வார்கள். வாணலியில் வறுக்கப்பட்ட கொக்கு, நாரைகளுக்கு தனித்த சுவையுண்டு. அம்மா வாணல் சோறு என்று அடி தீய்ந்த வாணலில் துளி சோறு போட்டு பிறட்டித்தருவார்கள். எச்சுவைக்கும் ஈடானதல்ல அது. அப்படி ஒருநாள் தெருவழியாக குறவர்கள் கொக்கு விற்றுக்கொண்டு சென்றார்கள். இரண்டு முழ சணலை கொக்கின்…