Category: சிறுகதை

வீடு

செல்வசேகர். அவர் தந்த முகவரி அட்டையில் இந்தப் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. பெயரின் மேல் கருப்பு கோட் அணிந்தபடி புன்னகைக்கும் முகம், வெள்ளை அட்டையில் மேலும் கருப்பாக தெரிந்தது. முதுகுக்குப் பின்னால் பளபளக்கும் கட்டிடங்கள், அவர் செய்யும் தொழிலைத் தெளிவாக காட்ட. செல்வசேகர் முகவரி அட்டை ஏன் தந்தார் என பாலாவிற்கு புரியவில்லை. அவரின் கைபேசி எண்…

மசாஜ்

மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக…

கயிறு

பிரான்சிஸ் வீட்டுக்கு போகாமலே இருந்திருக்கலாம். போனாலும் பார்த்தோமா, வந்தோமா என்றிருந்திருக்க வேண்டும். செய்யாதது பெரும் பிழை. நினைக்க நினைக்க அவமானம் ஒரு துர்நாற்றம் போல எரிச்சல் படுத்திக் கொண்டிருக்க, வண்டியை வேகமாய் உறும விட்டேன். கோயிலுக்கு நேரமாகிவிட்டது. இன்னேரம் பூசை தொடங்கியிருக்கும் என்பது இன்னும் பதட்டத்தை அதிகரித்தது. இவ்வளவு தாமதமாக ஒரு நாளும் போனதில்லை. கோயில்…

இரட்சிப்பு

ஏழாவது முறையாக சிறையிலிருந்து விடுதலையாகிறேன். கடந்த ஆறுமுறையிலும் எங்கு போவது என்ற போக்கிடம் தெரியாமலிருந்தேன். இந்தமுறை கொஞ்சம் ஞானம் வந்ததுபோல அடங்கியிருப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். நானாகத் தேடிக்கொண்டதும் சிக்கிக்கொண்டதும் மூன்றுமுறை. அதிரடிச்சோதனைக்கு ஏதாவதொரு பெயரிட்டு கிடப்பில் கிடந்த ஏதாவதொதொரு கோப்புக்குப் பலியானது மீதி. தைப்பிங் சிறை, தாப்பா சிறை, புடு சிறை, சுங்கை பூலோ…

பொட்டலம்

உள் நுழைந்ததும் வலது பக்கமாக பார்த்துப் போவீர்களேயென்றால் படிகள் தென்படும். முதல் மாடிக்குச் செல்லுங்கள். இரண்டாம் மாடி மூன்றாம் மாடி என்று ஏதுமில்லை. முதல் மாடி மட்டும்தான். வலதுபக்கமாகத் திரும்புங்கள். நேராகச்சென்று மறுபடியும் திரும்புவீர்களென்றால் நான்கைந்து விதமான உணவருந்தும் இருக்கைகள் இருக்கும். இரு மருங்கிலும் காணலாம். வலது பக்கத் தொடக்கத்திலேயே வெண்ணிறப் பிரம்பு நாற்காலிகள் உண்டா,…

வலி அறிதல் (முதல் பரிசு)

அப்பாவுக்கு எம்ஜியாரை அவ்வளவாக பிடிக்காது. “நல்லா கவனி, அப்படியே தூணு பின்னால ஒளிஞ்சிகிட்டே கண்ணக் கசக்குவான் பாரு..”, என்று எள்ளல் தொனிக்க சிரித்தபடியே அவர் அடிக்கடி சொல்லும் ஒற்றை வரியே எம்ஜியாரைப் பற்றிய அப்பாவின் பரிகாசம் கலந்த விமரிசனமாக பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. அவரின் வயதேயொத்த ராஜூ அங்கிள், பலராமன் மாமா போன்ற பலராலும்  “என்னாமா…

உப்பு (இரண்டாவது பரிசு)

நெற்றியின் வியர்வை  உதட்டை நெருங்க, முதுகிலுள்ள பள்ளிப்பை கனத்தினால் கால்கள் வலித்தன. இதயத்துடிப்பு சற்று அதிகமாக இருந்தாலும் ஏனோ கால்கள் அந்த இடத்தைவிட்டு நகர சம்மதிக்கவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தேன். வழக்கம்போல் ஏங்கி இருந்த கண்கள் கண்ணாடிப்பேழையை மட்டும் உற்று பார்த்துக் கொண்டிருந்தன. மரியாதை தெரியாத வெள்ளைத்தோல் ஆடவன் ஒருவன், அவன் காரசாரமான…

குளத்தில் முதலைகள் (மூன்றாவது பரிசு)

நடு இரவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது காலம். சாலை ஓரத்தில் தெரு விளக்கின் கீழ் இரு மோட்டார் சைக்கிள்கள் நின்றுகொண்டிருந்தன. அந்த மோட்டார் சைக்கிளில் 30 வயது எட்டி இருக்கும் இரு முரட்டு ஆசாமிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது பேச்சின் எந்த வார்த்தையும் ஒழுக்கம் நிறைந்த மனிதர்களாகக் காட்டவில்லை. அந்த இரண்டு பேரில், ஒருவனின் போன்…

இருப்பது

காலையிலிருந்தே மோடம் போட்டுக்கொண்டிருந்தது. மழை வரப்போகிறது. வரலாம் என்று இரண்டு மூன்று நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தார். வெயில் அதிகமாகி உயிர்கள் வாடும்போது தானாக மழைபொழிந்துவிடும் இயற்கையின் சமநிலையை எண்ணி வியப்பாக இருந்தது. தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு குறைவாகத் தண்ணீர் ஊற்றினார். எப்படியும் மழை பெய்யப்போகிறது. ஊற்றுகிற தண்ணீரைவிட மழைதானே அவற்றுக்கும் பிரியமானது என்று நினைத்துக்கொண்டார். வாசலில்…

கரகம்

(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில்…

வாள்

(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) அந்தக் கும்மிருட்டில் உயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி நடந்தான் சந்தனசாமி. மழை சிறுசிறு தூறல்களாகக் கருமேகத்திலிருந்து வழிந்து மண்ணை நசநசக்கச் செய்துகொண்டிருந்தது. அவன் நடந்த பாதை – அதைப் பாதை என்று சொல்ல முடியாது – அவனாக உண்டாக்கிக்கொண்ட வழியில் சேறும் சகதியும் களிமண்ணுமாகச் சேர்ந்து…

புள்ளிகள்

(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) “டேய்… அறிவுகெட்ட முண்டம். எடுடா கல்ல!.’’ வெளியிலே இடி இடித்தது. ”அல்லூர் தண்ணி ஓடாம, கல்லப் போட்டுத் தடுக்கிறியே. நாத்தம் கொடலைப் புடுங்குது. எத்தன வாட்டி சொல்றது, எடுக்கப் போறயா? ரெண்டு சாத்தட்டுமா?” இடிகள் திசைகளில் எதிரொலித்தன. இந்த இரைச்சலில், அருகே இருந்த வேப்பமரத்திலிருந்த காக்கைகள் அச்சம் கொண்டு…

நிர்வாணம்

ஏழு வருஷப் பழக்கம். ஒத்த நூல் பிரிஞ்சி கெட்டித் துணி பரபரன்னு கிழிஞ்சமாறி சட்ன்னு அறுந்து போச்சு. வருஷக் கடைசியில கலியாணம். மண்டபம் புக் பண்ணி, துணி எடுத்து, மால, சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்து…. எல்லாமே செஞ்சாச்சு. பத்திரிகதான் இன்னும் கொடுக்கத் தொடங்கல. தொண்டைக்குழிக்குள்ள இறுகி மூச்சை, பேச்சை எல்லாத்தையும் அடைச்சிகிட்டு தண்ணிகூட இறங்கல. அப்பதான்…

கிணற்றிலிருந்து மீண்டவள்

“அதுக்கு உங்களை மாதிரி சீதேவியப் பெத்திருக்கணும்மா. எனக்கு அதுக்கெல்லாம் கொடுப்பின இல்ல.” தங்கம் என்னைப் பார்த்துக்கொண்டே உம்மாவிடம் சொன்னபோது எனது முகத்தில் என்ன உணர்ச்சியைக் கொண்டு வருவதென்று எனக்குத் தெரியவில்லை. அவள் சொன்னது ஒரு மெல்லிய புகையைப்போல, அந்த இடமெங்கிலும் பரவியது. அந்தச் சமையலறையை அடைத்துக்கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பதைப் போலத்தோன்றியது. சில்லறைக்காசைச் சுரண்டுவது போல…

சிகப்புப் புள்ளி

பஸ் ஸ்டாப்பிலிருந்து பஸ் கிளம்பும்போதுதான் சிவகுமரனுக்கு சட்டென்று நினைவு வந்தது. அது புக்கித் மேரா டவுன் சென்ட்டர். அங்கு இறங்க வேண்டும். ஆனால் சிகப்புப் பொத்தானை அழுத்துவதற்குள், பஸ் கிளம்பிவிட்டது. தன்னையே ஒருமுறை திட்டிக்கொண்டார். அடுத்த ஸ்டாப் சிறிதுதூரம். வெயிலில் திரும்பி நடந்துவர வேண்டும். “சர்ர்ரியான வேஸ்ட்டு மாமா நீ!” குணா சொன்னது மீண்டும் காதில்…