
கடந்த ஆண்டு கோவிட்19 நோய்க் காரணமாக நாடு திடீர் முடக்கத்திற்கு உள்ளாகியிருந்த காலகட்டத்தில் ம.நவீன் சுறுசுறுப்பாக எழுதத் தொடங்கியிருந்தார். தொடர்ந்து அவர் படைப்புகளை எழுதி சுடச்சுட என் வாசிப்புக்கு அனுப்பி வைப்பார். நானும் அதே வேகத்தில் அந்தக் கட்டுரைகளையும் கதைகளையும் வாசித்து என் கருத்துகளை குறிப்பிட்டு அனுப்புவேன். அதில் சில விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன.…