
சுந்தரம் சைக்கிளை வேகமாக மிதித்தான். நான் பின்னால், ஒரே பக்கமாக இரண்டு கால்களையும் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். வலது கையால் சுந்தரத்தின் தோளை இறுகப்பிடித்துக் கொண்டேன். மருத்துவமனை மேடு தெரிந்ததுமே தலையைச் சாய்த்து ஜப்பான் கல்லில் சுருட்டுத்தாத்தா உட்கார்ந்திருக்கிறாரா என்று பார்த்தேன். அவர் எப்போதும் போல அங்கேதான் உட்கார்ந்திருந்தார். வாயில் துண்டு சுருட்டு நெருப்பு இல்லாமல் துருத்திக்கொண்டிருந்தது.…