
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. சிங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில் நான்கு மொழிக்குமான கருத்தரங்குகள் நடக்கும். 24 வருடங்களுக்கு முன் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் ரெ.கார்த்திகேசு கலந்துகொண்டுள்ளார். அதற்கும் முன்பு இராஜகுமாரன் 80களில் கலந்துகொண்டுள்ளார். அதற்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியவாதிகள் அழைக்கப்படுவது இரண்டு மாமாங்கத்திற்குப் பின்…