
தமிழ் எழுத்துகளில் துணைக்காலுக்கென தனித்த மரியாதை இருப்பதில்லை. அவ்வெழுத்து இன்னொரு எழுத்தைச் சார்ந்தது. ஆனால் அது இல்லாமல் போகுமானால் மொழியைக் குறில் நெடிலுடன் எழுதுவது சாத்தியமே இல்லாமல் தவிக்கும். ஒருவகையில் நான் எழுதியுள்ள கட்டுரைகள் அணைத்தும் துணைக்கால் தன்மை கொண்டவைதான். இத்தலைப்புகளைக் குறித்து அறிமுகமும் புரிதலும் இல்லாமல் அது தொடர்பான அனைத்து துறைகளும் இயங்கும். ஆனால்…