பிறப்பற்ற பிறப்பு

சுகத்திற்கு மட்டுமே கட்டில்கள் ஒதுக்கப்பட்ட பிறகு தூங்கம் தூக்கு கயிறுகளில் தொங்கிக்கொண்டிருக்கின்றன வயிற்றை நிறைத்துக் கொண்டது போல் மனத்தை  நிறைத்துக் கொள்ள வழியில்லை அன்பு ததும்பிய நான்கறையும் துருபிடிக்கத் தொடங்கிவிட்டன இப்போதுதான் துடிக்கிறது என்னுள் இன்னொரு இருதயம் . கண்ணீரை நிரப்பிக் கொண்டு சிரித்து மழுப்புகிறேன் சிரிப்பொலியின் சீற்றத்தில் நானே சாகிறேன் அசைவுகளில் நான் அசைவற்று…

மலேசிய இந்தியர்களுக்கான தொல்காட்சியகம் கனவாகவே கரையுமா?

மலாக்கா மலேசியாவின் வரலாற்று மாநிலம். மலேசிய வரலாற்றை மலாக்காவிலிருந்து தொடங்குவதுதான் அரசைப் பொறுத்தவரை உவப்பானது. அதற்கு முன்பே பழமையான சுவடுகளைக்கொண்ட பூஜாங் பள்ளத்தாக்கெல்லாம் மேம்பாட்டுத் திட்டத்துக்காக அப்புறப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்க, வரலாறு குறித்த எவ்வித அக்கறையும் இல்லாமல் மலேசியாவில் தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லும் பிற்போக்குவாதிகள் ‘தமிழர் தேசியம்’ எனத் தமிழக அரசியல் கோமாளிகளின் பாதங்களில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.…

மாற்று வரலாறு பேசுவோம்

இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் வேளையில் தமிழ்நாட்டில் மற்றுமொரு எழுத்தாளரான புலியூர் முருகேசன் தாக்கப்பட்டிருக்கும் செய்தி வந்தடைந்திருக்கிறது. அவர் எழுதிய கதையில் கவுண்டர் சமூகம் பற்றி இடம் பெற்றிருக்கும் பகுதியின் மீது ஒம்பாமை கொண்ட ஒரு கும்பல் கரூரிலுள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து அவரைத் தூக்கி காருக்குள் போட்டுக்கொண்டு போய் எங்கோவொரு காட்டுப்பகுதிக்குள் வைத்து கடுமையாகத்…

‘எழுத்து’ இதழும் சிற்றிதழ் அரசியலும்

பொதுவாகவே சிற்றிதழ் குறித்த மரபான ஒரு மனப்பதிவு நம்மிடையே உண்டு. சிற்றிதழ் என்பது அதிகம் விற்கப்படாத, தரம் குறைந்த காகிதத்தில் தயாராகி, விளம்பரம் இல்லாமல், 2000 அல்லது அதற்கும் குறைவான பிரதிகள் அச்சாகி, வண்ணங்கள் இல்லாமல் கறுப்பு வெள்ளையில் வெளிவரும் பிரதி என்பதை வரையறைகளாகச் சொல்வதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் புறத்தோற்றத்தை வைத்து கணிக்கப்படும் அளவீடுகள். ஆனால்…

அயோத்திதாச பண்டிதர்: தென்னிந்தியாவில் தலித் தன்னுணர்வு உருவாக்கம்

இந்தக் கட்டுரை, 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில், தென்னிந்தியாவில் வெளிப்பட்ட தலித் தன்னுணர்வின் அடிப்படைக் கூறுகளைப் பற்றிய பகிர்வு ஆகும்.  குறிப்பிட்ட அக்காலத்தின் வரலாற்றுத் தகவல்களுக்குள் அதிகம் நுழையாது, தலித் சிந்தனையாளர் அயோத்திதாச பண்டிதர் (1845-1914) அவர்களால் முன்னிறுத்தப்பட்ட தலித் தன்னுணர்வின் முக்கிய அம்சங்கள் குறித்து விவரிப்பதாகவும் ஆராய்வதாகவும் இக்கட்டுரை…

பொய்யிலிருந்து மெய்க்கான நகர்வு

தன்னுடைய செயல்கள் அனைத்திலும் பொருளாதார லாபத்தை மட்டும்  குறிக்கோளாகக் கொண்டிருக்கும் மறுகாலனியம் கல்வியை விற்பனைச் சரக்காக மாற்றியதால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மதிப்பு இழந்த பாடப்பிரிவுகளில் வரலாறும் ஒன்று. ஆனால் மறுகாலனியத்தால் பன்னாட்டுச் சந்தையில் மேலாதிக்கம் செய்கின்ற நிறுவனங்களைச் சேர்ந்த வளர்ச்சியைடைந்த நாடுகளில் வளரும் நாடுகளைக் குறித்த வரலாறு உட்பட இதர சமூக அறிவியல்…

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – ம. நவீன்

தமிழில் விமர்சனம் என்பது அரிதாகிவிட்டது. விமர்சனம் இருக்கிறது என்று சொன்னால் அது முதுகு சொறிந்து கொடுப்பதாக, நட்பு சார்ந்ததாக, ஆதாயம், அரசியல், எதிர்ப்பார்ப்பு நிறைந்ததாக இருக்கிறது. ஒரு படைப்பை அதன் பலம் சார்ந்து, தரம் சார்ந்து விமர்சிக்கின்ற பண்பு அருகிவிட்டது. இப்போக்கு இலக்கியப் படைப்பிற்கு மட்டுமல்ல மொழிக்கும் இழப்பு. பொய் உரைகளையே நாம் இலக்கிய விமர்சனம்…

பருப்பு

குரங்கு அப்பம் பிரித்த கதையாக சமாதானம் பேசவந்தோம் என்று அந்நியப்படைகள் ஈழ மண்ணில் மூலை முடுக்கெல்லாம் பரவியிருந்த காலத்தில் எல்லரோரையும் போல பருப்பின் வாழ்கையிலும் இரண்டு பெரிய சூறாவளிகள் அடித்து பருப்பின் வாழ்கையையே புரட்டிப்போட்டன. கோண்டாவிலிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெடியளுக்கு கதிரவேலர் ஓர் கடவுளாகவே இருந்தார். அந்த நேரத்தில் அமைதிப்படைகள் நடத்தும் சுற்றிவளைப்பில்…

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 3

நிறைய பேர் மனதிலும் மூளையிலும் குடி கொள்ளும் ஒரு பிம்பம் பெண். அவள் குழந்தையாக இருக்கும் போதும் சரி, பூப்படையும் போதும் சரி, அவள் தாய்மையடைந்த கர்ப்பக்காலத்திலும் சரி, தொடர்ந்து மீண்டும் குழந்தை என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல நம்பிக்கைகளுக்கு உள்ளாகிறாள் (உள்ளாக்கப்படுகிறாள்). பெரும்பாலும் பெண்ணின் வாழ்க்கை முறையை கட்டமைக்க பல நம்பிக்கைகள் உட்புகுத்த படுகின்றன.…

சக கவிஞன் கி.பி. அரவிந்தன் நினைவாக…

என் இளமை பருவத்தில் இறந்த தோழர்கள், சான்றோர்கள் ஒருவரைக்கூட மறந்துவிடாமல் முந்திக்கொண்டு அஞ்சலிக் கவிதை எழுதுவதை ஒரு தவம்போல செய்து வந்தேன். முக்கியமான மரணங்களின்போது சிரித்திரன் ஆசிரியர் என்னை தேடுவார். நான் எழுதிய முக்கியமான அஞ்சலிகள் சில சிரித்திரனில் வெளிவந்தது. நான் வன்னிக்குப் போகும்போது அமரத்துவம் எய்திய போராளிகளுக்கு எழுதிய அஞ்சலிக் கவிதைகளுக்காக என்னை வாழ்த்துவார்கள்.…

பங்கோரில் வல்லினம் குழு: ஓர் அனுபவப் பகிர்வு

1.5.2015 (வெள்ளி) பங்கோர் தீவில் வல்லின இலக்கியச் சந்திப்புக்குக் கங்காதுரைதான் முழு பொறுப்பு ஏற்றிருந்தார். உணவு மற்றும் தங்குமிடம் என நேர்த்தியான ஏற்பாடுகள். தொழிலாளர் தினத்துடன்  விசாக தின விடுமுறையும் இணைந்திருந்ததாலும் தலைநகரில் அன்று ஜி.எஸ்.தி வரிக்கு எதிராக ஆங்காங்கு எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்ததாலும் மூன்று மணி நேர பயணம் சாலை நெரிசலால் எட்டு மணியாக…

பூசாரி அம்மத்தா

காணாக்கிளைப் பறவை அனுப்பும் குரல் உரசி இலை உதிர்க்கும் ஒலியோடு ஜோடியாக வெயில்மணம் பூசிப் பைய வரும் மதியக் காற்றின் முதுகில் தொற்றிக்கொண்டு வந்திறங்கும் அம்மத்தாவின் வீட்டு வாசலில் மகனைப் பிரிந்து தொலைவூர் சொந்தவீட்டில் தனியாகவே வாழும் அம்மத்தா முதுமை தேய்த்த கால்மூட்டுக்கு உள்ளங்கையை ஊன்றக் குடுத்து சாய்த்தவாறே அம்பலம் சுற்றி அஞ்சு முழுத்திங்கள் கண்டுவிட்ட…

லீ குவான் யூ: நாட்டை முன்னேற்றினார், ஆனால் அதை நம்பவில்லை!

நவீன சிங்கப்பூரை உருவாக்கியவர் எனக் கருத்து வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அதன் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வின் (செப் 16, 1923 – மார்ச் 23, 2015) மரணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. யாசிர் அராஃபத், நெல்சன் மண்டேலா ஆகியோருக்குப் பிறகு அதிக உளவில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டதாக…

குறையொன்றுமில்லை: நூல் வெளியீடு

கடந்த 15/03/2015 அன்று, சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலான ‘குறையொன்றுமில்லை’ என்ற நூலை வல்லினம் வெளியீடு செய்தது. பிரம்மானந்தாவின் நூலை வல்லினம் வெளியிடுகிறது என்றவுடன் ஏற்பட்ட பல்வேறு தரப்பட்ட குழப்பங்களுக்கு நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருந்த எழுத்தாளர் தயாஜி பதில் கூறினார். வல்லினம் எந்த இசங்களையும் சார்ந்து இயங்கவில்லை என்றும் அது முற்றிலும்…

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்: நூல் விமர்சனம்

உலகில் எழுதப்படுகின்ற எல்லா இலக்கியப் படைப்புகளின் நோக்கமும் அன்பை சொல்வதற்கான வார்த்தையை, வழியைத் தேடுவதுதான். கண்டடைவதுதான். அந்த வகையில் பூங்குழலி அன்பை சொல்வதற்கான சிறந்த வழியாக, மொழியாக, வடிவமாக கவிதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கு அன்பை சொல்வதற்கான சொல்லும், மொழியும், வழியும் கிடைத்ததா என்பதை “நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” கவிதைத் தொகுப்பை படிக்கிற வாசகர்கள் அறிவார்கள். நிகழ்தலும்…

குறையொன்றுமில்லை: நூல் அறிமுகம்

துறவிகள், முனிவர்கள், சன்யாசிகள் போன்ற ஆன்மீக பணியாளர்கள் தமிழ் இலக்கிய உலகுக்கு அன்னியமானவர்கள் அல்ல. பன்னெடுங்காலமாகவே தமிழ் இலக்கியத்தோடு முனிவர்களும் தவச் சான்றோர்களும் துறவிகளும் நெருங்கிய தொடர்பாளர்களாகவே இருந்துவருவதை தமிழ் இலக்கிய வரலாறு மெய்பிக்கிறது. சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ ஒரு சமண துறவி. பக்தி இலக்கியம் படைத்த சமயக் குறவர்கள் ஆன்மீக வாழ்க்கையை நாடியவர்களே. சைவ…

காவி ஆடையிலிருந்து ஒரு புதுக் குரல்

இந்நூலிலுள்ள கட்டுரைகளை எச்சரிக்கை உணர்வுடன் வாசித்தேன். ஒரு நூலைப் படிக்கும் போது எச்சரிக்கை உணர்வுடன் வாசிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. சுவாமியின் காவி ஆடை அந்த உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. நழுவும் தழுவல்கள், வாழ்க்கைக்கு வாழ்த்துகள், வீழ்வேன் என நினைத்தாயோ ஆகிய கட்டுரைகளில் மிகவும் முக்கியமான விசயங்கள் குறித்து எழுதியிருக்கிறார். குறிப்பாக அன்பு, உறவு பற்றிய…