
யாழ் பதிப்பகம் ஆசிரியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று. குளிர்காற்று பரவி இருந்த அறையில் மல்லிகை மணத்துடன் ஒருவித திரவியத்தின் வாசமும் நிரம்பி இருந்தது. குமட்டியது. மல்லிகையை வெளியே வீசிவிட்டு வரலாமா என யோசித்தாள். உள்ளே நுழைந்தபோது இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் இல்லாமல் கால் வழுவிழந்திருந்தது. யாராவது பார்த்துவிட்டால்? இந்த எண்ணம்…