சதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன வதை செய்யலாம். அதிக பட்சம் சோறு போடாமல் கூட இருக்கலாம். யாராவது உணவகத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவார்களா? என் அம்மாவுக்கு இதுபோன்ற திட்டமெல்லாம் எங்கிருந்துதான் வருமோ. சபா மாமாதான் இனி உன்னை மேய்க்க லாயக்கு…
‘டை’ அணிந்தவன் கணேசன் இல்லை.
என் கைப்பேசியின் பெயர் பட்டியலைத் திறந்து ‘ G ’ எழுத்தைத் தட்டினால் மூன்று கணேசன்கள் வந்து வரிசை பிடித்து நிற்கின்றனர். முதலாவது கணேசன் என் மகளின் டியூசன் ஆசிரியர். ‘வாவாசான் இன்டெலெக்’ டியூசன் சென்டரை நிர்வகிக்கிறார். இரண்டாவது கணேசன் என் பழைய தோழன். ஆரம்ப பள்ளியில் இருந்து பழக்கமானவன். மூன்றாவது கணேசன் யாரென்று தெரியவில்லை.…
கொசு
நான் ஒரு எம்.எல்.எம் வியாபார ஏஜேண்ட. அதனால் என் காருக்குள் ஒரு எளிய கொசு நுழையக்கூடாது என்றெல்லாம் இல்லைத்தான். யார் காரைத் திறந்து வைத்திருந்தாலும் இந்த எழவெடுத்த கொசு சட்டென நுழைந்துவிடும். நீங்கள் என்னை எங்காவது பார்த்திருக்கக்கூடும். தைப்பிங் நாலு ரோடு பக்கம் எந்த மூலையிலாவது என்னை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கழுத்துப்பட்டை ஒன்றை இறுக்கமாகக் கட்டிக்…
லியோ டால்ஸ்டாயின் ‘Three Questions’
தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்ட அநபாயன் என்ற மன்னனுக்கு மூன்று கேள்விகள் பிறந்தன. அவனது கேள்விகள்: உலகை விட பெரியது எது? கடலை விடப் பெரியது எது? மலையை விடப் பெரியது எது? அவனால் இக்கேள்விகளுக்கு விடைகளைக் காணமுடியாததால் ஓர் ஓலையில் எழுதி அதைத் தொண்டை நாட்டு மன்னனுக்கு அனுப்பி பதிலைத் தெரிவிக்கும்…
தொப்பையைக் குறைப்பது எப்படி?
தொப்பையை குறைப்பது பற்றி இணையத்தில் தேடும்போது இங்கே வந்திருக்கலாம். நானும் எவ்வளவோ செய்து பார்த்தாச்சி இது வேறயா என வாய்விட்டு பேசி, யாருக்கும் தெரியாமல் இதனை நீங்கள் படிக்கத்தொடங்களாம். ஒவ்வொரு மாதமும் இந்த பக்கத்தில் எந்த சர்ச்சயை கண்டுக்கொள்ளலாம் என இங்கு வந்திருக்கலாம். நீங்கள் செய்துக்கொண்டிருக்கும் பயற்சியோ, செய்துக்கொண்டிருக்கும் முயற்சியோ இத்தலைப்பில் ஒத்துப்போகிறதா என பார்க்க…
லூய் யோக் தோ சீனக்கவிதைகள்
தமிழில் : கி.இ.உதயகுமார் , பூங்குழலி வீரன் பிரியாவிடை ‘சி’ என் இருப்பு இங்குதான் என முடிவெடுத்திருக்கிறேன் நம்பிக்கைகள் மக்கிப்போகும் பொழுதுகளில் மீதி வாழ்வின் எதிர்ப்பார்ப்புகள் தகுதியற்றுப் போகின்றன… புலப்படாத ஏக்கங்களின் மையமிது “பார்… தூரங்கள் மெதுவாக மறைந்து போகின்றன…” ஆனால் இந்தக் கிரகத்தை விட்டுச்செல்ல அடம் பிடிக்கிறேன் படிப்பது, எழுதுவது, இசையமைப்பது, வரைவது, நேரத்துடன்…
மாற்றத்தை நோக்கியதே இலக்கியம்
மூலம் S.M. ஷாகீர் மொழியாக்கம்: அ.பாண்டியன் கட்டுரையாளரைப் பற்றி: S.M. ஷாகீர்- இயற்பெயர் ஷேட் முகமது ஷாகீர் பின் ஷேட் ஓத்துமான். 4.2.1969 கோத்தா பாருவில் பிறந்தவர். 1990 முதல் எழுதி வருகிறார். இதுவரை 22 இலக்கிய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது ‘மெரெங்குஹ் லாங்கீட்’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு (1994/1995) பெர்டான இலக்கிய…
ஏ.சாமாட் சைட் வாழ்க்கை குறிப்பு
ஏ.சாமாட் சைட் (இயற்பெயர்: அப்துல் சாமாட் முகமது சைட்) மலாய் இலக்கிய உலகில் பலராலும் நன்கு அறியப்பட்டவர். இதுவரை முப்பதுக்கும் மேல்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நாவல், கவிதை, சிறுகதை, இலக்கிய கட்டுரை என்று பல்வேறு தளங்களில் இயங்கக்கூடிய இலக்கிய ஆளுமை. 1985 –ல் தேசிய இலக்கியவாதி அங்கீகாரம் பெற்றது உட்பட பல பட்டங்களைப் பெற்றுள்ளார். மலாக்கா…
தமிழக வாக்காளர்களுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்
இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ் செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற்காக…
மலேசிய இலக்கியத்தின் மற்றுமொரு நகர்ச்சி: பறை
16.3.2014ல் ‘புத்தகச் சிறகு’ நிறுவனம், இலக்கிய நிகழ்வொன்றை கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நிகழ்த்தியது. இணையம் எவ்வகையான விரிந்த வாசகர்களைக் கொண்டுள்ளது என்பதை அறிய ‘புத்தகச் சிறகு’ இந்நிகழ்வுக்கான அறிவிப்புகள் அனைத்தையும் இணையம் மூலமே செய்தனர். வருகையாளர்களின் எண்ணிக்கை 100 பேரை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.