அரசியல் கட்சிகள் நடத்துவோர் யாரும் தங்களுக்குள் நடைபெறும் சண்டையென்றும் பிணக்கு என்றும் மோதல் என்றும் ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு சுழன்று வர முடியாது. காரணம், பொதுத் தேர்தலில் பல்லின மக்களின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை ஒருபுறம் இருந்தாலும் அதிலும் குறிப்பாக இந்திய சமுதாயத்தின் வாக்குகளைப் பெற வேண்டிய அவசியத்திற்கு இயல்பாக முன் தள்ளப்பட்டிருப்பதால்,…
மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா? (பகுதி 2)
இரண்டாம் பாகம் தமிழ்த் தேசியம் தமிழ் தேசியம் என்னும் முழுமை இல்லாத கருத்தாக்கத்தை அவ்வளவு சுலபமாக விளக்கி விடவும் முடியாது. காரணம் அடிப்படையில் தமிழ் தேசியம் வேறொரு சமூக நீதியை பேசுவதாகவும் நடைமுறையில் வேறு ஒரு சமூகநீதியை கடைபிடிப்பதாகவும் உள்ளது. உலக தமிழர்களுக்கு தோதான மேடையை அமைக்கும் பேரியக்கமாக அது தன்னை அடையாளப்படுத்தினாலும் நடைமுறையில் அது…
மாப்பஸானின் குதிரை
சிறுகதை என்றவுடன் நம் மனதில் அது ஒரு சம்பவத்தைச் சொல்லும் படைப்பு முறை என தோன்றலாம். அதாவது ஒரு சம்பவம் நடக்கிறது, அந்தச் சம்பவத்தின் இறுதியில் ஒரு திருப்பம் இருக்கும். அந்தத் திருப்பமே கதையை வாசிப்பவருக்குச் சுவாரசியத்தையும் இதுவரை வாசித்ததற்கான மொத்த அனுபவத்தையும் கொடுக்கும் என பொதுவான ஒரு கருத்து இன்றும் உண்டு. சில சமயம்…
இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை
ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சிபற்றிச் சிந்திக்கும்போது அடிப்படையில், அவை நான்காகப் பகுக்கப்பட்டு விவாதிக்கப்படுவது காணக்கூடியதாக இருக்கிறது: 1. மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்திற்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு மரபு வழிப்பட்ட நிலை ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும்…
இலங்கையின் தமிழ் இலக்கியம்
இலங்கை, சிறிலங்கா, சிலோன், தாமிரபரணி என்றெல்லாம் சொல்லப்படும் ஈழத்தின் தமிழிலக்கியம் 14ஆம் நூற்றாண்டுடன் தொடங்குகின்றது என்கிறார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை. ஆனால், ஈழத்தின் வரலாறு அதற்கும் அப்பால் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஈழ வரலாறு நீண்டதாக இருந்தாலும் அந்த அளவுக்கு இலக்கிய ரீதியாக அதனுடைய அடையாளத்தைக் காண முடியவில்லை. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கூட அது…
முரண் உண்மைகளைச் சொல்வோம்
ஈழ சிறப்பிதழாக வெளிவந்துள்ள ஜனவரி-மார்ச் 2015 பறை இதழுக்கு எழுத்தாளர் ஷோபா சக்தியின் தலையங்கம் ‘கலைக்கு கறாரான கோட்பாடுகளோ சித்தாந்தங்களோ வரைவிலக்கணமோ எல்லையோ கிடையாது. ஆனால் ஒரு நிபந்தனையுண்டு; அது உண்மையை மட்டுமே பேசவேண்டும்’ என்ற லியோன் த்ரொட்ஸ்கியின் நிபந்தனை எளிமையான ஒன்றைப்போல தோன்றினாலும் அந்த எளிமையைக் கடைப்பிடிக்க அனைத்துலகிலும் இலக்கியவாதிகள் கடுமையாகச் சிரமப்படுகிறார்கள் என்பதுவே…
வாய் தவறிச் செல்லும் வார்த்தைகள்
கவிஞர் காசியானந்தனை தெரியாத தமிழர்கள் இந்தப் பூமிப்பந்தில் எத்தனை பேர் இருப்பார்கள்? அவரது பாடல்கள் மிக நீண்டகாலத்திற்கு ஈழத்தமிழர்களிடத்தில் செல்வாக்கு செலுத்தும். அவரது பாடல்களினால் உணர்வு நரம்புகள் முறுக்கேறியபடி குளிர்தேசங்களில் எண்ணற்ற இளரத்தங்கள் இன்றும் கொதித்துக்கொண்டுமிருக்கலாம். காசியானந்தன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என ஆரம்பத்தில் நான் மிகத் தீவிரமாக நம்பியிருந்தேன். ஒரு கையில் துப்பாக்கியும், மறு…
முற்போக்கு இலக்கிய முன்னோடி கே. கணேஷ்: சில சிந்தனைகள்
ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் முக்கியமானவர்களில் ஒருவர் கே. கணேஷ் (1920-2004). முற்போக்கு எழுத்தாளர்களுள் சிரேஸ்டர் என வழங்கத்தக்க தனிச் சிறப்பு வாய்ந்தவர். பல்துறை சார்ந்த ஆற்றலும் பயிற்சியும், சிருஸ்டிகர ஆற்றலும் பெற்றவர்கள் வெகு சிலரே உள்ளனர். அவர்களுள் கணேஷ்க்குத் தனியிடமுண்டு. இருப்பினும் அன்னாரின் பல்துறைச் சார்ந்த ஆளுமைகளை வெளிக் கொணரும் வகையிலான ஆய்வுகள் மதிப்பீடுகள் மிகவும்…
இல்லாத திசைகள் 3 – காத்திருத்தல்
எனக்கும் என் மனைவிக்கும் பெரும்பாலும் நிகழ்கிற சண்டைக்குக் காரணம் சொன்ன நேரத்துக்கு வந்து சேர்வதில்லை நான் என்பதுதான். பெரும்பாலும் அவரை காக்க வைத்து விடுவேன். அதனாலையே சண்டை வந்துவிடும். தப்புதானே… அதுவும் காத்திருக்கும் கோடூரம் அறிந்த நானே காக்கவைப்பது பெரிய தப்புதானே. கோலாலம்பூருக்கு வந்திறங்கிய முதல் நாள் இரவு காத்திருப்பை மறக்க முடியுமா? கோலாலம்பூருக்கு வந்து…
யோகி கவிதைகள்
நான் உன்னை பிரிகிறேன் என் அன்பே மூன்றாவது முறையாக இன்று உன்னை பிரிகிறேன் பிரிதல் உனக்கும் ஓர் ஓவியத்துகான புள்ளியை கொடுக்கலாம் புள்ளிகளைக் கோடுகள் ஒன்றினைக்கலாம் நீ அவற்றுக்கு வர்ணம் தீட்டி அழகான படம் வரைந்து காட்டி அதைக் காட்சிக்கு வைக்கலாம் என் அன்பே ஓர் ஓவியனின் ஓவியம் போல் இல்லை இந்த பிரிவு அதை…
நோவாவின் புதிய தொடர்…
‘உடைந்த கண்ணாடியை பார்க்க கூடாது’ ‘இரவானதும் நகம் வெட்ட கூடாது’ ‘ஒற்றைக் காலில் நிற்க கூடாது’ ‘இரவில் விசில் அடிக்க கூடாது’ ‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் நடக்கக்கூடாது’ ‘இரவில் உப்பை வாங்க கூடாது’ கர்ப்ப காலத்தில் கூந்தல் வெட்டக்கூடாது’ இப்படி ‘கூடாது, கூடாது. கூடாது’ என நிறைய கூடாதுகளை நாம் யாவரும் கேட்டிருக்கலாம். ஏன் கூடாது என்று…