அனார் கவிதைகள்

 விடுதலைக்கு அப்பால் உள்ளிருக்கும் பட்டுப்பூச்சியால் நெய்யப்படுகிறது பட்டுக்கூடு மின்னல் கீற்றுகள் பழிச்செனத் தெறித்து மங்குகின்றன கண்கூசச்செய்யும் கோடிவண்ணங்களின் பிரகாசத்தை யாராலும் தாங்கமுடியாது பொன்னிழைத் தூவல்களால் இழைத்த பட்டுக்கூடு ஆகாயவெளியின் பிடிமானத்தில் அசைகிறது வினோத ஒலிகளால் நேர்த்தியான சத்தங்களை எழுப்பும் பறவைகள் சிறு குருவிகள் நிகழ்த்தும் நாட்டிய அணிவகுப்பு சூழ்ந்திருக்க சர்ப்பமாகவும் சாத்தானாகவும் மாறித்தோன்றும் பேர் எழிலை…

மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா?

முதல் பாகம் முன்னுரை தமிழ் உணர்வு சிந்தனையாளர்கள் இடையேயும், தமிழர் அரசியல் முன்னெடுப்பளார்கள் இடையேயும் இன்று பெரிய சிந்தனை தாக்கத்தையும் தீவிர உரையாடல்களையும் தோற்றுவித்திருக்கும் களமாக அமைந்திருப்பது தமிழ்த் தேசியம் என்னும் இனவழி அரசியல் முன்னெடுப்பாகும். கடந்த நூற்றாண்டில் தேசியவாத கருத்தாக்கங்களின் எதிராகவும் காந்தியச்சிந்தனைகளின் எதிராகவும் நின்று, திராவிடர்கள் என்ற இனமரபுக்குள் தமிழர்களின் மாற்றுச் சிந்தனை…

What Your Teacher Didn’t Tell You: மெய்ப்பொருள் காண்பதறிவு

ஒரு பொருள் அல்லது கருத்தியலை நம் ஆய்வுக்குரியதாக ஏற்று அதுபற்றிய முந்தைய கருத்து மற்றும் முடிபுகளை தொகுத்தெடுத்து, இனியும் ஏற்க கூடியதை ஏற்று, தகர்க்கக் கூடியதை தகர்த்து, தொகுத்த தகவல்களைக் கட்டுரையாக வகை தொகைப்படுத்தி படைக்கும்போது அது ஆய்வுக்கட்டுரையாக உருப்பெறுகிறது என்கிறார் முனைவர் ந.ரெங்கநாதன் இ.செ.ப (தகவல் தொடர்பியல் துறை பற்றிய ஆய்வு அனுபவம், தமிழில்…

பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு: ஒரு பார்வை

பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு கோலாகலமாக தொடங்கியது என்று சொல்வதற்கு எனக்கும் ஆசையாகத்தான் உள்ளது. காரணம், ‘வரலாற்றைத் தேடி’ என்ற தலைப்பில் உலக நாடுகள் தழுவிய நிலையில் ஒரு மாபெரும்  மாநாடு நடக்கிறது என்ற காரணத்தினால், அதன் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்த வரலாற்றுப் பூர்வ நிகழ்வுக்கு மக்கள் தொண்டாளரான மதிமுக தலைவர் வைகோ கலந்து கொள்கிறார்…

வென்றவன் அரசன்; தோற்றவன் பயங்கரவாதி!

இரண்டாம் பாகம் இன்றைய நிலையில் பிபி நாராயணனை பற்றி மிகையாக சிலர் சொல்கிறார்கள்? அவர் எம்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார்? சிலர் அந்த காலத்தில் பிபி நாராயணன் போன்றவர்கள் மிக ஆடம்பரமாக வாழ்க்கை வாழ்ந்தார்கள்? அவர்கள் தோட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். இன்னொரு சாரார் நாராயணன் தோட்ட மக்களுக்காகவே வாழ்ந்தார் எனச் சொல்கிறார்கள்? உங்கள்…

மலேசியக் கல்விக் கொள்கையில் மாற்றம் தேவை

திரு. கா. ஆறுமுகம் மலேசியக் கல்விச் சூழலில் மிக முக்கியமாக அவதானிக்கப்படுபவர். குறிப்பாக கல்வி கொள்கைகள்வழிதான் தாய்மொழிக்கல்வி என்பதை ஓர் அரசியல் அடையாளமாக உருவாக்க இயலும் என்பதிலும் அதன்வழிதான் பண்பாட்டை காக்க இயலும் என்றும் வாதிடுபவர். தொடர்ந்து நமது நாட்டிலும் அனைத்துலக அளவிலும் கல்வி சார் கருத்தரங்குகள், மாநாடுகள், சந்திப்புகளில் முக்கிய பேச்சாளராகப் பங்குகொண்டு விவாதித்து…

பேசும் முன் யோசி!

மனித வாழ்வின் ஒவ்வொரு தருணமும் படைப்புக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உட்பட்டதாகவே அமைகின்றது. வாழ்வை கூர்ந்து கவனித்தால் நம் கருத்துப் பகிர்வின் திறன் அடிப்படையிலேயே நம் வாழ்க்கை நிலையும் இருப்பதைக் காண முடியும். வேலை, பதவி உயர்வு, வியாபார அனுகூலங்கள், பல்கலைக்கழக தேர்வின் மதிப்பீடுகள், தேர்தலில் வெற்றி தோல்வி எனத் தொடங்கி சிலரின் பிழைப்புக்கும் படைப்புத் திறன்…

இல்லாத திசைகள் 2 – கோலாலம்பூர்  எனக்குத்  தண்ணீர்  காட்டியது

தண்ணீர்… இது இல்லாமல் ஏதும் உண்டா. என் இளமைக் காலங்கள் தண்ணீர் நிறைந்ததாய்த்தான் இருந்தது. எனக்கு விபரம் அறியும் வயதில் என் அப்பா அம்மா பால் மரம் சீவிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களோடு செல்வேன். அம்மாதான் மரம் சீவுவார். அப்பா நல்ல நிழல்தரும் மரமாக பார்த்து அதற்கடியில் பாய்விரித்து தூங்கி விடுவார். அம்மா பாலைச் சேகரித்து…

காரட்டுக்கு பழகிய கழுதைகள்

மனித மனம் குறித்து பேசுவதென்றால் என்னவெல்லாம் பேசலாம் என்று மனதிற்கும் தெரிந்திருக்காது. மனம் என்பதின் இருப்பிடம் எதுவாக இருக்கலாம் என ஆளுக்கு ஆள் ஓரிடத்தை சொல்லிக் கொண்டிருக்கிறோம். அறிவில்தான் மனம் இருக்கிறது. இதயத்தில்தான் மனம் இருக்கிறது. அறிவுக்கும் மூளைக்கும் தொடர்பு இல்லை. இதயத்துக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனம் என்ற ஒன்று இல்லவேயில்லை. எண்ணங்களைத்தான்…

டோட்டோ சானும் நமது கல்வி முறையும்

கனடாவில் உள்ள ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். மூன்று குழந்தைகளுக்குத் தாய். கொஞ்சம் சோர்வு அவர் குரலில் இருந்தது. காரணம் வினவியபோது குழந்தைகளால் பிரச்னை என்றார். “ஏன் பள்ளிக்குப் போக அடம் பிடிக்கிறார்களா?” எனக் கேட்டேன். “இல்லை… எவ்வளவு கெஞ்சியும் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்” என மீண்டும் சோகமானார். எனக்குத் தோழியின் பதில் ஆச்சரியமாக…

மோர்கன் என்றொரு ஆசான்

மோர்கன் த/பெ பெருமாளுக்கு ஏற்பட்ட எரிச்சலில் எதிரில் இருக்கும் கணினித்திரையை காலால் எத்தவேண்டும் போலிருந்தது. அசைவின்றி நிற்கின்ற அத்திரை ஏற்படுத்திய கோபத்தைவிட, செந்திலைக் கூப்பிட்டல்லவா அதைச் சரி செய்யவேண்டும் என்றபோது கடுப்பு எகிற, கதவை எத்திவிட்டு வெளியில் வந்து ஒரு சிகரெட்டை எடுத்தார். மோர்கன் தமிழர்தான். பிறந்தது செம்பவாங் நேவி குடியிருப்பில். அப்பா பிரிட்டிஷ் நேவியில்…