காலை 6.30 மணிக்கெல்லாம் கிளம்பி யோகா மெத்தையை (Yoga Mat) எடுத்துக் கொண்டு வீட்டின் பால்கனியைத் திறந்தேன். காலை பனியைப் பார்த்து அதிக நாளாகிவிட்டது. பனி எங்கும் படர்ந்திருந்தது. பனியைப் பார்த்ததும் மனதில் ஓர் அமைதி பிறந்தது. அது யோகா செய்வதற்கான மனநிலை. உடனே வாகனத்தை நோக்கி நடந்தேன். என் வாகனம் முழுக்க பனித்துளிகளால் ஈரமாக…
ஆதி பூமியை வரையும் கைகள்
(அபிராமி கணேசனுக்கு ‘வல்லினம் இளம் படைப்பாளி விருது’ வழங்கப்பட்ட போது அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் முழு வடிவம்) அ.பாண்டியன் உரை யூடியூப்பில் கோவிட் நோய்தொற்று காலத்துக்கு முன்பே அதாவது 2020 தொடக்கமே திட்டமிடப்பட்ட இந்நிகழ்ச்சி சூழல் சரியாகும் வரை ஒத்திபோடப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் , நோய்சூழல் இன்றுவரை சரியாகாவிட்டாலும் அரசின் அனுமதிக்குப் பிறகு…
இலைகளில் ஒளிந்துள்ள எழுத்து
அபிராமி கணேசனுக்கு இளம் எழுத்தாளருக்கான வல்லினம் விருது கிடைத்துள்ளது. என்னால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத நிலையில் ‘புருனோ மான்சர்- காட்டில் கரைந்த காந்தியம்’ என்ற கட்டுரையின் வழியேதான் அவரை மனதில் மீட்டெடுக்க முடிந்தது. இளம் எழுத்தாளர் விருதை வழங்க அபிராமி கணேசனைத் தேர்வு செய்ததன் காரணத்தையும் அதன் வழி அந்த விருதின் தரத்தையும் அறியும்…
பந்தல்
கிணற்றடியிலிருந்து துலா ஏறி ஏறி இறங்கும் வாளிச்சத்தம் தூரத்திலும் கேட்கும் படி அன்றைக்கு பாக்குமரங்கள் சலசலப்பின்றி திமிறி நின்றன. பழைய துலா மரத்தண்டின் மேல் சுற்றி நிற்கும் பெரிய வெற்றிலைகளை குளித்துத் தெறித்த தண்ணீர் துளிகள் ஒட்டி ஒட்டி தளும்பும் இலைகளின் ஆட்டம் ஆவர்த்தனமாயிருக்கும். எனது இறந்த சைக்கிள்களை அளவில் சிறியதிலிருந்து வரிசையாக உள் சுவரில்…
சரவாக் பழங்குடியின மக்கள் (பகுதி 2)
சரவாக் பழங்குடிகள் பல்வேறு குறுங்குழுக்களாக வாழ்கிறார்கள். அவர்களிடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் அதிகமாக உள்ளதைக் காண முடிகிறது. இருப்பினும், சரவாக் பழங்குடியின் சிறுபான்மை குழு மக்களின் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வரலாறு, பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்ற தகவல்கள் மிகவும் அரிதாகவே ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. வாய்மொழி பதிவுகளாகவும் செவிவழிச் செய்திகளாகவும் கிடைக்கும் சில தகவல்களையும் அடிப்படையாகக்…
பொந்து
1 “அந்த ஊமச்சி இன்னைக்காச்சும் வரட்டும் கேட்டுப்புடுகேன். இவனுக்க புடுக்குதான் வேணுமான்னு. எனக்க தாலியறுக்கல்லா நிலையழிஞ்சு நிக்கா. என்ன மந்திரம் போட்டாளோ, அவளுக்க பொறத்தாலையே போயிட்டான்… பலவட்டற சண்டாளி. நாசாம போவா, கட்டழிஞ்சு போவா. அவ சீரழிவா. புழுத்துதான் சாவா… வீடு மூணு நாளா பூட்டிக் கெடக்கு… எங்க போனாங்களோ?” ராசம் ஆட்டோ ஸ்டாண்ட் இறக்கத்திலிருந்த…
மலேசிய எழுத்தாளருக்கு எபிகிராம் புனைவு நூல்களின் விருது
விருதுகள் இலக்கியவாதிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊக்குவிப்பு. குறிப்பாக ஒரு புத்தகத்திற்கு விருது கிடைக்கும்போது அந்தப் புத்தகம் பரவலான வாசிப்புக்குச் செல்கிறது. எல்லா விருதுகளும் அத்தகைய முக்கியத்துவம் கொண்டிருப்பதில்லை. ஒரு விருது தனக்கான முக்கியத்துவத்தைத் தனது தொடர் தேர்வுகளின் மூலமே பெற்றுவிடுகிறது. அவ்வகையில் எபிகிராம் புனைவு நூலுக்கான பரிசும்(Epigram Books Fiction Prize), தென்கிழக்காசியாவில் வழங்கப்படும் மிக…
‘வல்லினம்’ நாவல் முகாமின் முதல் நாள்
மழை நீரானது புவி மீதினில் சேற்றின் மீது பொழிவதைக் கண்டு மழை நீர் என்பது சேற்றினால் ஆனது என எண்ணம் கொள்வது அவரவர் அறியாமையினை உணர்த்திடும். சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மீதான எனது எண்ண ஓட்டங்களும் அதன் மீதான பார்வையும் அவ்வாறே இருந்தன எனலாம். வல்லினம் ஏற்பாட்டில் நான் கலந்து கொண்ட சுனில் கிருஸ்ணன் அவர்களுடனான…
‘வல்லினம்’ நாவல் முகாமின் இரண்டாவது நாள்
பிப்ரவரி 26-27 என இரு நாள்கள் நடந்த வல்லினம் நாவல் முகாமில் நானும் கலந்து கொண்டேன். நாவல் முகாம் குறித்த இரண்டாவது நாள் அனுபவங்களைப் பதிவு செய்யும்படி வல்லினம் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தப் பதிவினை எழுதுகிறேன். பிப்ரவரி 27, காலை சிற்றூண்டிக்குப் பின் சரியாக 8.00 மணிக்கு முகாம் தொடக்கம் கண்டது. புதிய படைப்பாளர்கள் படைப்புலகத்தில்…
வல்லினம் நாவல் முகாம்: இரு வாசகர்களின் பகிர்வுகள்
வல்லினம் குழுவினரால் நாவல் முகாம் 26 முதல் 27 வரை பிப்ரவரி மாதத்தில் இரண்டு நாள்கள் தைப்பிங் ‘கிரேண்ட் பெரொன்’ தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி பல தடைகளைத் தாண்டி, பாதுகாப்பு அம்சங்களுடன் இவ்வாண்டு குறிப்பிட்ட திகதிலும் நேரத்திலும் நடத்தப்பட்டது. இந்த நாவல் முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதாகவே ஐந்து நாவல்களைப் படித்து வர…
நாவல் முகாம்: புதிய பங்கேற்பாளர்களின் அனுபவம்
கடந்த 26/2/2022-ஆம் திகதி தொடங்கி 27/2/2022-ஆம் திகதி வரை வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட நாவல் முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இதுவே நான் பங்கேற்கும் முதல் நாவல் முகாமாகும். அதிகம் சிறுகதைகள், கவிதைகளைச் சார்ந்த பட்டறைகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்த எனக்கு, நாவலைக் குறித்து நடத்தப்பட்ட இந்த முகாம் முற்றிலும் பல புதிய அனுபவத்தையே தந்தது. ‘நாவல்…