கடிதம்/எதிர்வினை

அந்தரா தாராவானக் கதை – ஜி.எஸ்.தேவகுமார்

தாராவை ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு பாணியில் அணுக இயலும். ஒவ்வொரு நாவல்களும் அதை அணுகுபவரின் தனிப்பட்டப் புரிதல்களை வைத்தே அளக்கப்படும். நவீனப் படைப்புகளை வாசகன் தனிமையில் தன் உளம் சார்ந்தே அணுகுகின்றான்.

அந்நியத் தொழிலாளர்கள் வருகையின் தொடக்கத்தில் கதை நடக்கும் காலகட்டம். ஆனாலும் காட்சிகள் முன்னும் பின்னுமாகக் காலப்பயணம் செய்ய வைத்ததில் தான் நாவலின் சுவாரசியமே அடங்கியுள்ளது. கிச்சி தாராவை தேடிப் போகும் காட்சிகளில் எதிர்ப்பாராத திருப்பம் வியக்க வைத்தது. தற்காலத்தோடு கடந்த காலத்தையும் அதே பாத்திரத்தைக் கொண்டு பிணைத்து பிரித்த விதம் சிறப்பு. மிக கவனமாக கையால வேண்டிய யுக்திகள் அவை.

Continue reading

வெறுப்பின் தொடக்கங்கள்

சகோதரர் நவீன் அவர்களுக்கு,

ஜூலை மாத வல்லினம் வாசித்து முடித்தேன். மூன்று சிறுகதைகள் எனக்குப் பிடித்திருந்தன. அதில் எஸ்.ராவின் சிறுகதை அடக்கம் என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள். நான் ஏற்கெனவே அனுப்பிய சிறுகதைகளை நீங்கள் வல்லினத்தில் பிரசுரிக்காமல் நிராகரித்ததுண்டு. நீங்கள் நிராகரித்தவற்றை மற்ற இணைய இதழ்கள் பிரசுரித்ததும் உண்டு. அதனால் எனக்கு சங்கடம் இல்லை. நான் ஆச்சரியப்படுவது இவ்விதழ் 142ஆவது இதழ் என உங்கள் முக நூலில் அறிவித்திருந்தீர்கள். இத்தனை இதழ்களையும் இதே தீவிரத்துடன்தான் செய்கிறீர்களா? இத்தனை ஆண்டுகள் இந்தத் தீவிரம் குடிகொண்டிருக்க எது காரணமாக உள்ளது? அப்படி தீவிரமாகத் தோன்றிய சில இதழ்கள் ஏன் நின்றுவிடுகின்றன? வாசகர்களின் எண்ணிக்கையா? இணைய இதழ்களில் பணமும் வருவதில்லையே. எது உங்களை இயக்குகிறது?

பவன்

Continue reading

கடிதம்: ஜி.எஸ்.தேவகுமார்

அன்புள்ள ம.நவீன்,

ஒரு முறை உங்கள் பேட்டி ஒன்றை வாசித்தேன்.  கேள்வி கேட்டவர் உங்களின் நேர நிர்வாகத்தைப் பற்றி கேட்டார். எப்படி இவ்வளவு வாசிக்க, எழுத முடிவதோடு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறீர்கள் என்ற வியப்பு அந்தக் கேள்வி கேட்கப்பட காரணம். அந்தக் கேள்விக்கு நீங்கள் கொடுத்த பதிலில் உங்களின் ஒட்டுமொத்த இலக்கிய வாழ்க்கையின் சாரமே அடங்கியுள்ளது. இதே கேள்விக்கு பிரையன் டிரேசி போன்ற சுய முன்னேற்ற நிபுணர்கள் மிக பெரிய விரிவுரை, திட்டம், பயிற்சி என்றெல்லாம் அடுக்கிச் செல்வார். ஆனால் நீங்கள் கொடுத்த, ‘‘நான் எப்போதுமே என்னை எழுத்தாளனாகக் கருதுகிறேன். தனியாக நேரம் என்று எதையும் ஒதுக்குவதில்லை…’ (உங்கள் பதில் என் நடையில்) என்ற உங்களின் பதிலே மற்ற எழுத்தாளர்களிடமிருந்த உங்களைத் தனித்து உயர்த்திக் காட்டியது. வேலை ஓய்வுபெற்ற பிறகு இந்த பதில் பலரிடமிருந்து வர வாய்ப்புள்ளது.

Continue reading

சிகண்டி: பேரன்னையாகும் திருநங்கைகள் – சண்முகா

சிகண்டியை வாசித்து முடித்தேன். போகவே முடியாத இடங்களுக்குச் சென்றும், பார்க்கவே முடியாத மனிதர்களைப் பார்த்தும், வாழவே முடியாத வாழ்க்கையை வாழ்ந்தும் பார்த்தேன். வாசிப்பனுபவம் எப்போதுமே மிகவும் அந்தரங்கமானது. கதைவழி நாம் நம் வாழ்க்கையில் உணர்ந்தவையெல்லாம் அல்லது கதையையே நம் வாழ்க்கையாக உணருவதெல்லாம் நிறைய இடங்களில் சொல்லாக வெளிக்கொணர முடிவதில்லை. சிகண்டி அவ்வனுபவத்தைச் சொற்களால் கடத்தியுள்ளது.

Continue reading

சிகண்டி: குற்றமும் விடுதலையும் -சிவமணியன்

உயிர்வளி ஏற்றுபவைகள்,  செறிவூட்டப்பட்ட அரிக்கும் அமிலங்கள்,  வினையூக்கிகள்,  காற்றேறி எரிபவைகள்,  பூச்சுக்குள் மறைந்திருக்கும் நச்சுகள், காரகாடி பொருட்கள், நீர்மக் கரைப்பான்  போன்ற நேரெதிர் வேதியல் இயல்புள்ள பல்வேறு பாத்திரங்களாலும், அவைகள் அருகருகே உரசியதால்  வெடிக்கும் கதைத்தருணங்களால் நிரம்பியவைகள் பெரிய நாவல்கள்.  பாத்திரங்களால் சம்பவங்களால்  படிமங்களால்  விரிந்த பெரிய நாவல்களை  தொடர்ச்சியாக வாசிக்க அதிக சிரத்தை தேவைப்படுகிறது.  குவிந்தும் விரிந்தும்  சிதறியும் செல்லும்  வடிவில் இருக்கும் நாவலை உள்வாங்குவது வாசிப்பை விட அதிக மன உழைப்பினை கோருபவை. 

Continue reading

சிகண்டியின் நவயுகம் – கோ. புண்ணியவான்

என் அறியாப் பருவத்தில் நானும் திருநங்கைகளைக் கேலிப் பொருளாகவே எதிர்கொண்டேன். அவர்கள் பார்வையாளர்களைக் கவர பெண்வேடம் போட்டுக்கொள்கிறார்கள் என்று எண்ணினேன். அவ்வாறு எண்ணுவதற்கு ஒரு காரணம் இருந்தது. சின்னக் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் சுயமாக அம்மாவுடைய பாவாடையை அணிந்துகொள்வதும் செருப்பைப் போட்டுக்கொள்வதும்  முகப்பூச்சிகளை பூசிக்கொள்வதையும் பார்த்திருக்கிறேன். உளவியல் ரீதியாக, அவர்கள் தன் தாயை தனக்குள்ளே தகவமைத்துக்கொள்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். அதையே சில விடலைப்பையன்களும் செய்துகொள்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றியது. ஆனால் தொடர் வாசிப்பு அந்த எண்ணம் குறுகலானது என்று சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தது.

Continue reading

ஊழ்வினையின் பெருஞ் சீற்றம் – ஆசிர் லாவண்யா

கதாபாத்திரங்களை மிக நூதனமான முறையில் கையாண்ட பல நாவல்களில் சிகண்டிக்குத் தனி இடமுண்டு. வாசிப்பை இரு முறை மேற்கொண்டு, நாவலை அலசி பார்த்ததில் எழுத்தாளர் ம.நவீன், திருநங்கைகள் எனும் இணைப்புப் புள்ளிகளை வைத்து சத்தியத்தின் பெருஞ்சீற்றத்தினை முடுக்கி விட்டிருப்பது நாவலினுள் எழும் பேரிரச்சல் வழி புலப்படுகிறது.

Continue reading

இலங்கையில் இருந்து ஒரு கடிதம்

வணக்கம் நவீன்,

எனது முகநூல் நண்பர் மனோஜ் உங்களின் ‘பட்சி‘ கதையின் இணையச் சுட்டியினை அனுப்பியிருந்தார். அதை வாசித்ததன் ஊடாக உங்களது எழுத்துக்களின் மீதான அபிமானியாக மாறியிருந்ததை உணர்ந்தேன். அதன் தொடர்ச்சியாக ‘நகம்‘ சிறுகதையை வாசித்தேன் என்று சொல்வதை விட கதையில் வாழ்ந்தேன் என்று திடமாக என்னால் சொல்ல முடியும்.

Continue reading

அப்சரா: கடிதம் 5

சிறுகதை : அப்சரா

அன்புள்ள நவீன்,  வரலாற்றுக்குள் இருக்கும் வரலாறு இயல்பாகவே சுவாரசியத்தையும் மர்மத்தையும் கொண்டுள்ளது. அது புனைவு வடிவில் எழுதப்படுகையில்அதன் மர்மம் இன்னும் கூடுகிறது. அவ்வகையில் அப்சரா சிறுகதையை சுவாரசியமான புனைவாக வாசிக்க முடிந்தது.

Continue reading

PENGIRL ROCK: சில மறைக்கப்பட்ட உண்மைகள்

மூன்று நாட்களுக்கு முன் ஆஸ்ட்ரோ அறிவிப்பாளர் ரேவதி மாரியப்பன் அவர்கள் தனது சமூக வளைத்தளத்தில் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட பதிவொன்று வெளியாகியிருந்தது. அவர் கண்களில் அழுகையின் மிச்சமிருந்தது. பலகாலமாக விழுதுகளில் பார்த்த முகமல்ல அது.

Continue reading