அண்ணா, பூனியான் கதை வாசித்துவிட்டேன்.
பூனியான் அமானுஷ்யம் அறிவியல் என இரண்டு எதிரீடுகளின் நடுவில் நிற்கும் ஒரு சாம்பல் நிறத்தை தொடும் கதை. ரீத்தா, அருண் இருவரும் இந்த இரண்டு எதிரீட்டின் ஒன்றைப் பற்றிக் கொண்ட புள்ளிகள்.
அ.ரெங்கசாமி நாவல்கள்
‘சிவகங்கை தொடங்கி சிசங்காங்’ வரை என்ற தனது சுயவரலாற்று நூலில், நாவல் எழுதுவதற்கான உந்துதலை மலேசியத் தமிழர்களின் இக்கட்டான வாழ்வை வரலாற்றுப் பின்புலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து பெற்றதாகச் சொல்கிறார் எழுத்தாளர் அ.ரெங்கசாமி. இயல்பிலேயே இருந்த கலையார்வம் அவரை புனைவை நோக்கி தள்ளியது. தனது இளமைக் காலத்தில் தொடர்கதைகள், சிறுகதைகள் எழுதியதோடு வில்லுப்பாட்டு, மேடை நாடகம் என ஆர்வமாக இயங்கினார். கலை என்பது மனிதனுக்குப் படிப்பினையைக் கொடுக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் ரெங்கசாமி. ‘பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகனும்’ என இமயத் தியாகம் நாவல் முன்னுரையில் ரெங்கசாமி எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது.
Continue readingபூனியான்: கடிதங்கள் 2
நவீன், பூனியான் கதையில் புனைவின் சாகசம் நிகழ்ந்திருக்கிறது. தாமதமாக படிக்கிறேனே என்ற வருத்தமும் ஏற்படுகிறது. பூனியான் உலகை ரீத்தா மனக்கற்பனைக்கும் நிஜத்திற்குமான மெல்லிய கோட்டின் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் விளையாடி இருக்கிறாள். குறிப்பாக ஒவ்வொரு தற்கொலை முயற்சியிலும் காப்பாற்றப்படுவதற்கான சாத்தியங்களை உண்டாக்கிக் கொண்ட நுட்பம் கண்டுபிடிக்க முடியாதவிதத்தில் இருக்கிறது. கதையில் நிதானமும் மனச்சிக்கலும் ஒரு சாகசத்துடன் உருவாகி உள்ளது. திறமையான எழுத்தாற்றல் அது. சபாஷ் நவீன்.
சு.வேணுகோபால்
Continue readingபூனியான்: கடிதங்கள்
பூனியான் பிரமாதமான கதை. முற்றிலும் தர்க்க உலகில் வாழும் ஒருவன். அமானுஷ்ய அதர்க்க உலகம் ஒன்றில் வாழும் ஒருவள். இருவருக்கும் இடையே கயிறு இழுக்கும் போட்டி. இந்த உலகுக்கு அவளை இழுக்கும் லாவகத்தை அவன் ப்ரயோகிக்கிறான். அந்த உலகை சோதித்துப் பார்க்க இவனை தூண்டில் புழு ஆக்குகிறாள் அவள். முதல் உணர்வாக திகில் கடந்து அவன் விழுந்தடித்து ஓடி வரும் தருணம் சிரித்து விட்டேன்.
சீனு, கடலூர்
Continue readingகன்னி: கடிதங்கள் 4
ம.நவீனின் கன்னி சுவாரசியமான ஒரு கதை. இதை நான் ஒரு கதைப்போர் என்றுதான் வாசிக்கிறேன். கதைசொல்லி ஒரு கதைசொல்லியை சந்திக்கிறான். அந்த கதைசொல்லி ஒரு பேய்க்கதையைச் சொல்கிறான். இவன் அதன் ஓட்டைகள் வழியாக கிரைமை கண்டுபிடிக்க முயல்கிறான். இருவரும் கதைகளால் மோதிக்கொள்கிறார்கள்.
சிறுகதை: பூனியான்
“இங்குதான் அவனை முதன்முறையாகப் பார்த்தேன்.”
ரீத்தா காட்டிய மரங்கள் அடர்ந்த பகுதியை ஆர்வமில்லாமல் பதிவு செய்துகொண்டே மெல்ல கைப்பேசியை அவள் பக்கம் திருப்பினேன். பசுமை பின்னணியில் கருஞ்சிவப்பு உடை காமிராவில் தூக்கலாகத் தெரிந்தது. காற்றில் அவளது பஹால்புரி குர்தி, உடலோடு ஒட்டிக்கொண்டபோது நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டவள் என நினைத்துக்கொண்டேன். கழுத்தோடு ஒட்டியிருந்த மெல்லிய பிளாட்டின சங்கிலி ஒன்றிரண்டு முறை மின்னியது.
Continue readingகன்னி: கடிதங்கள் 3
அன்புள்ள நவீன்
ஒரு நாட்டின் வரலாற்றை இப்படியும் எழுதலாம் என கோடிட்டு காட்டியிருக்கும் கதை கன்னி.
புதர் மண்டி கிடக்கும் வரலாற்று பாதையில் சரண் போன்ற பத்திரிக்கையாளர்கள் கையில் வரலாறு என்று சொல்லப்படுவது மீட்டரு வாக்கம் செய்யப்படுகிறது .
Continue readingஉண்டி முதற்றே உணவின் பிண்டம்
தன் வீட்டில் கூடு கட்டி மூன்று குஞ்சுகள் பொரித்த குருவிகளுடனான அனுபவம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் நான்கு பதிவுகள் எழுதியிருந்தார். அதுவே என் வீட்டில் குருவிகள் கூடு கட்டியிருந்தால் நான் சிறந்த சமையல் குறிப்புகளை வழங்கியிருப்பேன் என முகநூலில் சொல்லப்போக நண்பர்கள் சிலர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்கள். கிராதகா, பாதகா என வாட்சாப்புகள் வந்தன. இப்படியெல்லாம் விளையாடலாமா என அறிவுரைகள் வேறு. நான் விளையாடவில்லை உண்மையைத்தானே சொன்னேன் என அப்பாவியாய் சொல்லப்போக ‘அடப்பாவி’ என மீண்டும் வசைகள்.
Continue readingகன்னி: கடிதங்கள் 2
அன்பான நவின், கன்னி சிறுகதையை வாசித்தேன். இன்றைய எழுத்துகளில் நிலமே இல்லையா என ஏங்கி போயிருக்கும் என் போன்றவர்களுக்கு இதுபோன்ற சிறுகதைகள் வாசிப்பு சுவையை கொடுக்க கூடும்.
Continue readingஆர்.சண்முகம், ஆ.ரெங்கசாமி மற்றும் மரண ரயில்
அண்மையில் ஒரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் என்னைச் சந்தித்தார். வரலாற்றில் ஆர்வம் உள்ளவர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். வரலாற்றை ஒட்டியே தனது ஆய்வு இருக்கப்போவதாகக் கூறிய அவர், மலேசிய வரலாற்று நாவல்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். என்னுடைய ‘பேய்ச்சி’ நாவல் வேண்டுமெனக் கேட்டார். நான் ‘பேய்ச்சி’ வரலாற்று நாவல் இல்லை எனச்சொன்னேன். தான் அந்நாவல் குறித்த விமர்சனங்களை வாசித்ததாகவும் அதில் லுனாஸில் நடந்த சாராய மரணங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறினார். இருக்கலாம், ஆனால் அந்த நாவல் அதன் பொருட்டு எழுதப்பட்டதல்ல. அதற்குள் வரலாற்றின் சில தருணங்கள் உள்ளன; ஆனால் அது வரலாற்று நாவலல்ல என விளக்கினேன். இருந்தாலும் வாங்கிக்கொண்டு சென்றார். என்ன ஆகுமோ என பயமாகத்தான் இருக்கிறது.
Continue reading