
அன்பின் வழி அது நமது அன்பின் பெரும்பொழுது எல்லையற்று விரியும் இப்பெருநிலத்தின் உயிர்க்கூட்டங்களின் மேல் பிரபைகளைப் பொழிந்தபடி நட்சத்திரங்களில் சிமிட்டிக்கொண்டிருக்க நாம் அப்போதுதான் ஒரு முத்தம் பகிரத் தொடங்கியிருந்தோம். தடங்களைத் தளர்த்தியபடி நெகிழ்ந்த புலன்கள் பாவி சிகரங்களையும் சமவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் சுழித்துத் திளைக்கும் நமது அன்பின் நீர்மத்தில் மிதந்தபடி ஒரு புணர்தலைத் தொடங்கியிருந்தோம்…









