
நேற்றிரவு படுக்கப்போகும்போது இருந்த தலைவலி இன்று காலையில் எழுந்திருக்கும்போதும் தொடர்ந்தது. இரவில் மூன்று-நான்கு முறை எழுந்து சிறுநீர் கழிக்கச்சென்றதில் சரியான உறக்கமில்லை. உறக்கத்தில் மூழ்கத்தொடங்கும் வேளையில் அல்லது உறக்கம் பிடித்த சிலநிமிடங்களில் மீண்டும் உந்துதல் தோன்ற எழுந்து கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே படுக்கையிலிருந்து எழும்போதே உறக்கச்சடவும் உடன் சேர்ந்துகொண்டது. வலப்புறப் பாதவிரல் நுனிகளில் லேசான…