
“எல்லாமே நிரந்தரமாய் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். வாழ்க்கை என்பது தொடர்ந்து செல்லும்”-*1 ‘லீவ் உல்மன்’. மொழியின் வரலாறு என்பது மொழியில் உண்டான இலக்கியப் படைப்புகளின் வரலாறுதான். அந்த வகையில் நாவல் என்ற கலை வடிவம் தமிழ் மொழிக்கு அறிமுகமாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. முதல் நாவல் எழுதப்பட்ட காலத்திலிருந்து 2014ல் எழுதப்பட்ட…