
முந்தைய நாள் பேருந்து பயணத்தின்போது கண்ணில் கண்ட பூச்செடியைத் தேடி விரைகின்றான். அச்செடியை வீட்டுக்கு எடுத்து வந்து நட்டு வைத்து அதன் ஒவ்வொரு நொடி நேர வளர்ச்சியையும் கண்டு பூரிக்கின்றான். இவனை நன்கு அறிந்து வைத்திருப்பவளாய் மனைவி, ‘அடுத்த விருந்தாளி வந்தாச்சாக்கும்?’ என கேலி பேசுகின்றாள். இவனது செய்கையைக் கண்டு வியப்பவர்களுக்குப் பின்வரும் குறிப்புகள் உதவி…