
பஸ் ஸ்டாப்பிலிருந்து பஸ் கிளம்பும்போதுதான் சிவகுமரனுக்கு சட்டென்று நினைவு வந்தது. அது புக்கித் மேரா டவுன் சென்ட்டர். அங்கு இறங்க வேண்டும். ஆனால் சிகப்புப் பொத்தானை அழுத்துவதற்குள், பஸ் கிளம்பிவிட்டது. தன்னையே ஒருமுறை திட்டிக்கொண்டார். அடுத்த ஸ்டாப் சிறிதுதூரம். வெயிலில் திரும்பி நடந்துவர வேண்டும். “சர்ர்ரியான வேஸ்ட்டு மாமா நீ!” குணா சொன்னது மீண்டும் காதில்…











