
விடிகாலை, சிப்ட் முடித்துவிட்டு மில்லிலிருந்து ரகுராம் சைக்கிளில் வந்தான். மாணிக்கம் ஆசிரியர் திண்ணையில் இருந்த துரையும் சின்னச்சாமியும் வேகமாக எழுந்து நடந்தார்கள். கேசவன் டீக்கடை முன் தேங்காய் உரிக்கும் வாச்சியோடு நின்றிருந்த செல்வமும் பரமேஸ்வரனும் வேகமாகப் போனார்கள். டீக்கடை எதிரில் உள்ள புங்கமரத்தின் அடியில் போட்டிருந்த பட்டியக்கல்லில் சைக்கிளில் இருந்தபடியே காலூன்றி நின்றான். வடக்கால் இருந்துவந்த…











