ம.நவீனுக்கு கனடா இலக்கியத் தோட்ட விருது

மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புனைவு மற்றும் இலக்கியச்செயல்பாடுகளில் அவரது பங்களிப்புக்காக இந்தச் சிறப்பு விருது வழக்கப்படுவதாக தமிழ் இலக்கியத் தோட்டம் அறிவித்துள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு…

தையும் பொய்யும்

முன்னோட்டம் தமிழ் அறிவுச் சூழலில், கடந்த 30 ஆண்டுகளாகத் தொடரும் சர்ச்சைகளில் ஒன்று தமிழ்ப்புத்தாண்டு தொடர்பானது.  சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று சமூகம் வழங்கிய பழக்கத்துக்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும்  முயற்சியில்,  முடிவே இல்லாத வாதங்கள் தொடர்கின்றன. தை முதல் நாளே தமிழாண்டு தொடக்கம் என்ற உலக…

வல்லினத்தின் நாவல் இலக்கிய நிகழ்ச்சி அனுபவம்

வல்லினத்தை முகநூல் வாயிலாகவே அறிவேன். அதன் இணைய இதழ்களை தவறாது வாசிப்பதுடன் வல்லினத்தின் தரம் வாய்ந்த இலக்கிய செயல்பாடுகளினாலும் நேர்மையான விமர்சன தன்மையினாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டவள் நான். வல்லினத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவிற்கு பலமுறை அழைப்பு வந்தும் அலுவல் காரணமாக செல்ல இயலவில்லை. ஆனால் இம்முறை வல்லினத்தின் “நாவல் இலக்கியம் & யாழ்…

சிறகு

யாழ் பதிப்பகம் ஆசிரியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று. குளிர்காற்று பரவி இருந்த அறையில் மல்லிகை மணத்துடன் ஒருவித திரவியத்தின் வாசமும் நிரம்பி இருந்தது. குமட்டியது. மல்லிகையை வெளியே வீசிவிட்டு வரலாமா என யோசித்தாள். உள்ளே நுழைந்தபோது இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் இல்லாமல் கால் வழுவிழந்திருந்தது. யாராவது பார்த்துவிட்டால்? இந்த எண்ணம்…

ரப்பியா கயிறு

யாழ் பதிப்பகம் ஆசிரியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று. வாளியில் தண்ணீர் மொண்டு ஒரு தடவை ஊற்றிவிட்டு, விளக்கமாறைக் கடைசியாய் இரண்டு தடவை தரையில் அடித்து நீரை வழித்து விட்டு செல்வி நிமிரவும், அவர்கள் வரவும் சரியாயிருந்தது. “சுடுகாட்டுக்குப் போனவங்க வந்துட்டாங்க”, தெண்டிற்குக் கீழ் அமர்ந்திருந்த சுப்பையாதான் சட்டென எழுந்து தகவல் சொன்னார்.…

பதில்

காற்றே சற்று கனத்துடனும் கொஞ்சம் சோம்பலாகவும் இருக்கும் அகாலமான நேரத்தில் எழுந்திருப்பதும் இங்கு நிற்பதும் பழகிப் போய் சில வருடங்கள் ஆகிவிட்டன.  வாய் பிளந்து காத்துக் கொண்டிருந்த சுரங்கக் குழியின் தலை இந்த நிறுத்தத்தில்தான் இருக்கிறது. சட்டென்று திறந்த கதவுகளில் பலர் முண்டியடித்து ஏறி உட்கார்ந்தனர். உள்ளிருந்து சிலர் வெகு அவசரமாக நடந்தனர். சிலர் இடமில்லாமல் …

அழகியும் அப்பா சொன்ன கதையும்

யாழ் பதிப்பகம் ஆசிரியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று அப்பா சொல்லிக் கொண்டிருந்த கதைக்கு ‘ஊங்’ கொட்டியவாறே கீழே சிதறிக் கிடந்த விளையாட்டுப் பொருள்களுக்கு உயிர் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள் அழகி. அவளின் கைகால்கள் தன்னைச் சுற்றி இருந்த விளையாட்டுப் பொருள்களில் பரபரத்துக் கொண்டிருந்தாலும் அப்பா சொல்லிக் கொண்டிருக்கும் கதையைக் காதுகள் மட்டும்…

வைகாசி

வைகாசி பாட்டி என்னமோ  சாதிப் பார்ப்பவள்தான். ஆயினும் எல்லோரிடமும் சகசமாய் பழகும் குணம் அவளுக்கு இருந்தது. யார் வீட்டுக்குப்  போனாலும் சாப்பிடவோ குடிக்கவோ அவளுக்கு மனத்தடை இருந்ததில்லை. அவளைப் பொருத்தவரை திருமணத்திற்கு மட்டும்தான்  சாதிப் பார்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடிருந்தாள். தான் என்ன சாதி என்று தெரிந்த அவளுக்கு  ‘சாதி’ என்றால் என்னவென்று தெரியாது.…

புரியவில்லை என்பதுதான் புரிந்தது

மகிழுந்தில் அமர்ந்தவாறு பள்ளி மாணவர்கள் நுழைவாயிலில் நுழைவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தினமும் பார்ப்பதுதான். எப்போதும் பள்ளிக்கு வருகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை வகுப்பறை வாசல் வரை கொண்டு வந்து விட்டுச் செல்பவர்களும் உண்டு. பள்ளிக்குத் தனித்து வருகின்ற மாணவர்களும் உண்டு. தன் தோழன் அவன் தாய் தந்தையோடு வருவதைப் பார்க்கும்போது அவன் பார்வையில் ஓர் ஏக்கம்…

மலையும் மனிதர்களும்

[ 1 ] எண்ணி எண்ணிக் குழி வெட்டி இடுப்பொடிஞ்ச பின்னாலும் இன்னும் வெட்டு  என்கிறானே வேலையத்த கங்காணி. உதையும் பட்டோம் மிதியும் பட்டோம் இங்க வந்து மானம் கெட்டோம் முட்ட முழிச் சாமி கையால் மூங்கில் கழி அடியும் பட்டோம்… [மலையகக் கூலித்தொழிலாளர்கள் நாட்டுப் பாடலொன்றின் சில வரிகள்.] பாரத நிலத்தை ஆண்டு சுரண்டிச்…