
அண்மையில் நான்கு கவிதை நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. இந்தப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளில் எனது வாசிப்பு அனுபவங்களை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். கே.பாலமுருகனின் தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள். இந்த நூலைத்தான் முதல் முதலில் வாசிக்கத்துவங்கினேன். ம.நவீனின் சிறப்பான முன்னுரையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கவிதைப் புத்தகம், வாசிப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக்கொடுக்கக்கூடிய அற்புத கவிதை நூல் என்று சொன்னால்…