மோட்சம்

“என்ன டே, புது கெராமவாசி பொறச்சேரி பக்கமா வந்து நிக்க,” என்றார் மருத்துவரான முதுக்கடசர். அவர் பேச்சில் சிறிது ஏளனமும், காட்டமும் தெரிந்தது. அதையும் மீறி அவர் உடைந்து அழுது விடுவார் என்பதை அவர் உடல் மொழி உணர்த்தியது. மாரனின் கழு உறுதியானதால், புதுக்கிராம தெருவினுள் நுழைய எத்தனித்தபோது மருத்துவருக்கு நூறு சவுக்கடிகளே பரிசாகக் கிடைத்தது.…

எலி

வந்ததிலிருந்து ஒருவார்த்தை கூட பேசாமல் என்னையும் எதிரிலிருந்த மணி அண்ணனையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெலிசியா. அவள் கண்களின் கீழே விழுந்திருந்த அழுத்தமான கரிய ரேகைகள் கணினித் திரையில் விழுந்த கோடுகளாகத் தெரிந்தன. அறையில் மஞ்சள் பல்பின் வெளிச்சத்தில் இரண்டு மூன்று சாமிபடங்கள் எண்ணெய் படிந்ததைப்போல இருந்தன. சாம்பிராணி புகையின் நெடி காட்டமாக இருந்தது. காவி…

பிளாச்சான்

நேற்று மாலை லீ சாய் வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்து என் முன்னால் நின்றான். சில வாரங்களுக்குப் பின் இன்றுதான் அவனைப் பார்க்கிறேன். வழக்கமாக பெரிய கேரியர் சைக்கிளில் வருபவன் நேற்று தலைதெறிக்க ஓடி வந்திருந்தான். அந்தப் பெரிய உடம்பு மழையில் நனைந்த  பூனைக்குட்டி போல உதறிக் கொண்டிருந்தது. உயிர் பயம் அவன் உடலெங்கும் படர்ந்திருக்க வேண்டும். …

பேய்ச்சி: பிரளயமும், ஆனந்த சயனமும்

நமது புராணங்களில்  வரும் உருவகங்கள், படிமங்கள், எப்போதும் நம்மை நிலைக்குலையவும், நிலைபெறவும்  செய்பவை. அன்றாட செயல்பாடுகளினூடாக, இன்றும் நம்மை சுற்றி சூழ்ந்துள்ளவை.  நம் அறையில் தொங்கிக்கொண்டிருக்கும், காலண்டரிலும், வீதிகளின்  விளம்பரங்களிலும், மக்கள் நாவில் எழுந்து வந்து செல்லும், வார்த்தைகள் ஊடாகவும் என எண்ணிலடங்கா  உருவக வெளி அது. அப்படி ஒரு திகைப்பையும், நிறைவையும் தரும் இரண்டு…

அருவாச்சாமி

ஆங்கில ‘U’ எழுத்தை தலைகீழாக நிறுத்திவைத்தது போலிருந்தது அந்தக் கோவில். சிறு மாடம் போன்ற அமைப்பு. மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருந்தது. அதன் நடுமையத்தில் அருவாச்சாமி பளபளப்போடு குத்தி நின்றிருந்தது. மூக்கில் எலுமிச்சம் பழம் அழுத்தி செருகப்பட்டிருந்தது. நடுமையத்தில் விபூதிப்பட்டை, அதன் நடுவில் குங்கும தீற்றல். வளைவான தலைப்பகுதியில் ஒருமுழ கதம்ப மாலை தொங்கிக்கொண்டிருந்தது. கீழே ஒரு…

இந்திர தேசம்

இரவு பத்து மணிக்கு நட்சத்திர விடுதியை விட்டு வெளியே வருபவனின் தனிமையை, பாங்காக்கின் டாக்ஸி ஓட்டுனர்கள் சரியாக இனம் கண்டுக்கொள்கிறார்கள். காரில் ஏறியவுடன் செல்லுமிடம் பற்றி எந்த வினாவுமின்றி வண்டியை சுக்கும்வித் சாலையில் இறக்கினார் அந்த ஓட்டுனர். சிறிது தூரம் சென்றவுடன், சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தினார். பிறகு, பின்பக்கம் திரும்பி என்னை பார்த்து சிரித்தார்.…

கதைத் திருவிழா சிறுகதைகள்

முடிவற்றுச் சுரந்து கொண்டே இருக்கும் புனைவு மனத்தில் இருந்து மீள முடியாமல் திளைத்திருக்கும்  ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் வெகு சிலரே. தங்களின் வாழ்வு கொடுக்கும் ஆழ் மனப்பதிவுகளாலும் புற உலக வாழ்வை அவதானிப்பதாலும் வாழ்ந்து பார்ப்பவர்கள் அவர்கள். எனவே, தங்களுக்கான தன்னிறைவைக் கலையின் வழியே அடைகிறார்கள். வெண்முரசு நிறைவுற்றபோது  பிறப்பு முழுமையடைந்த மனநிலையை அவரிடம் பார்க்கமுடிந்தது.…

செல்லாத பணம் : தீயில் வேகும் மனித மனங்கள்

கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டு கால வாழ்க்கையில் சந்தித்த சூழல், நசுக்கிய நிகழ்வுகள், உரசிச்சென்ற அரக்ககுணம் கொண்ட மனிதர்கள், அனுபவித்த அவமானங்கள், செய்த தவறுகள், ஏற்பட்ட தவிப்புகள், எதிர்க்கொண்ட அழுத்தங்கள், ஏமாற்றங்கள், முதுகில் குத்திய சம்பவங்கள், மனித அவலங்கள் என எனக்கு ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்களோடுதான் நான் மிக இலகுவாக ‘செல்லாத பணம்’ நாவலில் புகுந்து கொண்டேன்.    …

உறவுகளின் சுகந்தம்

ஆற்றோட்டமான செவ்வியல் கதைசொல்லல் முறை, கதைக்குள் கதையாக குள்ளசித்தன் பாணி, முன்னும் பின்னுமாக சொல்லிச்செல்லும் பிளாஷ் பேக் பாணி, ஓர்மையான மையத்திலிருந்து விலகி விளிம்பை மையப்படுத்தும் பின்நவீனத்துவ பாணி என சிறுகதை இலக்கணமாக பல்வேறு கோட்பாடுகளை நிறுவி படைப்பாளிகள் படைக்கும் ஆக்கங்களை ரசித்து ருசிக்கிறோம். மேலும் இந்த வித கோட்பாடுகளை தாண்டி சொல்ல வந்த கதைக்கருவை…

இமையத்துடன் இரண்டு மணி நேரம்

அண்மையில் இமையத்துடன் இரண்டு மணி நேரம் எனும் நிகழ்ச்சி ‘வல்லினம்’ மற்றும் ‘தமிழாசியா’ இணைவில் நடைபெற்றது. முதல் அங்கமாக இமையம் அவர்களின் படைப்பு குறித்த நான்கு உரைகள் இடம் பெற்றன. அதன் இணைப்பு இமையம் படைப்புகள் தொடர்ந்து இமையம் அவர்களிடம் உரை இடம்பெற்றது. அதன் இணைப்பு இமையம் உரை

“புற வேற்றுமைகளால் மகிழ்வித்து; அக பேதங்களை அகற்றுவது பயணம்” – சுரேஷ் நாராயணன்

சுரேஷ் நாராயணன் பெரும் பயணி. இதுவரை 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணித்திருக்கும் இவர் அகன்று விரிந்த உலகின் பெரு நிலப்பரப்புகளில் தன்னைத் தொலைத்து மீண்டும் தேடிக்கண்டு பிடிப்பதை பல ஆண்டுகளாகச் செய்து வரும் பயணி. உலகின் பார்வையாளனாக மாறி, அவ்வனுபவம்  விதைக்கும் தெளிவின் நீட்சியோடு அடுத்தடுத்த பயணத்தைத் தொடர்கிறார். sureshexplorer.com என்ற அகப்பக்கத்திலும் Suresh Explorer…