மலேசியா முழுவதும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதை போட்டியை யாழ் பதிப்பகம் ஏற்று நடத்துவதை அறிவீர்கள். இப்போட்டிக்கான இறுதி நாள் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 28.2.2019 திகதிக்குள் ஆசிரியர்கள் தங்கள் சிறுகதைகளை yazlstory@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ‘யாழ்’ சிறுகதைப் போட்டி விதிமுறைகளும் விளக்கங்களும். 1.யாழ் சிறுகதைப் போட்டியில் மலேசியாவில் தற்போது…
வல்லினம்: நேற்று – இன்று – நாளை
வல்லினம் பதினோராவது ஆண்டில் நுழைகிறது. 115ஆவது இதழ். ஒருவகையில் மலேசிய நவீன தமிழ் இலக்கியத்துக்கான பெரும் தொகுப்பு என வல்லினம் அகப்பக்கத்தைச் சொல்லலாம். கலை இலக்கியப் பதிவுகள், விமர்சனங்கள், வரலாறு, அரசியல், ஆவணப்படங்கள், நிழற்படங்கள் என பல்வேறு ஆக்கங்கள் உள்ள இந்தத் தளம் மலேசியத் தமிழ்ச் சூழலின் கடந்த ஐம்பது ஆண்டுகாலச் சித்திரத்தை எளிதாக ஒரு…
யானை – ஜெயமோகன்
பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்பதற்கு அனந்தன் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. அவள் “என்ன?” என்றாள். அவன் தலையைக் கவிழ்த்து முனகலாக “எங்க ஸ்கூலிலே ஆனை இருக்கு” என்றான். “என்னது?” என்றாள். “ம்ம்ம்ம் ஆனை” அவள் அவனை ஒற்றைக்கையைப் பற்றி படுக்கையிலிருந்து தூக்கி எடுத்து “கெளம்பு” என்றாள். கால் தரையில் உரசியபடி இழுபட்டு வர “ஆனை முட்டிடும்……
பிரபஞ்சன்: சாதாரணங்களின் அசாதாரண கலைஞன்
“யார்தான் சாக முடியும்? உடம்பு மண்ணுக்குப் போறது, சாவா? நினைவுகளுள்ள மனுஷர் என்னைக்குமே ஜீவிக்க முடியுமே… அதுதான் அமரத்துவம்.” – பிரபஞ்சன் (அமரத்துவம் சிறுகதையில்) ஓர் எழுத்தாளர் இறந்தவுடன் ஏற்படும் வெறுமையின் தவிப்பில் அவரது வாசகர்கள் பல சமயங்களில் மிக அதிகமாகவே அவ்வாளுமையைக் கொண்டாடித் தீர்த்துவிடுவதுண்டு. படைப்புகளின் எண்ணிக்கை, அந்த எழுத்தாளர் என்னவாக வாழ்ந்தார், நட்பில்…
ICERD: ஒரு பின்னடைவு
மொழி, இனம், மதம் என்ற ஏதோ ஓர் அடையாளத்தின் காரணமாகத் தன்னை தனித்து வெளிப்படுத்துவது மனித இயல்பாக இருந்தாலும் அதே அடையாளத்தைக் காரணமாக்கி மற்ற அடையாளங்களைச் சிறுமைப்படுத்துவதோ உரிமைகளைப் பறிப்பதோ மனித நாகரீக வளர்ச்சிக்கு எதிரானது. நாகரீக சமூகம் என்பதன் முதன்மை அடையாளமாக ‘மண்ணில் வாழும் எல்லா மனிதனும் சமம்’ என்னும் பரந்த நோக்கை நோக்கி…
தேவதைகளின் குசு
எதேச்சையாக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. தனியார் அலைவரிசையில் பாடல் நிகழ்ச்சி ஒன்று ஒளியேறிக்கொண்டிருந்தது. வாண்டுகள் தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தனர். தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் சில கன்றாவிகளை செய்தனர். அதில் ஒன்று, பெண் தொகுப்பாளினி கீழே குனியும்போது குசு விடும் சத்தத்தை ஒலிக்கச் செய்து அரங்கில் பார்வையாளர்களை சிரிக்க…
கடவுச்சீட்டு என்னும் கள்ளச்சீட்டு
மலேசிய பின்னணி நாவல் என்றும் மலேசிய மக்களின் வாழ்வை கூர்ந்து கவனித்து எழுதப்பட்டது என்றும் பின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்ததால், தமிழக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘கடவுச்சீட்டு’ நாவலை விடுமுறையில் நேரம் ஒதுக்கி வாசித்தேன். ‘கடவுச்சீட்டு’ மிக எளிய கதையமைப்பைக் கொண்ட நாவல். தமிழக கிராமம் ஒன்றில் வளர்ந்த பெண்ணை மலேசிய இளைஞன் ஒருவன், (சில சமாதானங்களைச்…
பூங்காவில்
“நான் நீண்ட காலமாக பூங்காவில் உலவியதில்லை. அதற்கென நேரம் ஒதுக்கவோ அல்லது அதில் ஆர்வமோ எனக்கில்லை.” “எல்லோருக்கும் அதே நிலைதான். வேலை முடிந்ததும் மக்கள் வீட்டிற்கு விரைகிறார்கள். வாழ்க்கையே அவசரகதியில் உள்ளது.” “சிறுவனாக இருந்தபோது, இங்கே வந்து இந்த புல்லில் விழுந்து புரள நான் உண்மையிலேயே விருப்பு கொண்டிருந்தேன்.” “நான் எனது தாய் தந்தையரோடு வந்ததுண்டு.”…
ரொட்டி கோசம்
சரியாக எட்டுக்கு அலாரம் வைத்து எட்டரைக்கு விழிப்பதுதான் ஷாகுலின் வழக்கம். சில சமயங்களில் எட்டு நாற்பதுக்குப் போகும். அன்றைய தினம் தோற்றுப்போன அந்த பத்து நிமிடத்தை ஜெயிக்கவே முடிந்ததில்லை. அவனின் வேலை அப்படி. கீழே 24 மணி நேரமும் இயங்கும் சாப்பாட்டுக்கடை; மேலே படுக்கை. தினசரி வேலை. வருடம் முழுவதும் அதுதான் வாடிக்கை. ஒன்பது மணிக்கு…
ஒரு நிகழ்ச்சியும் ஒரு நாவலும்
நவம்பர் 18ஆம் தேதி வல்லின ஏற்பட்டில் நடைபெற்ற 10வது கலை இலக்கிய விழாவிற்குச் சென்றிருந்தேன். வழக்கமாக நான் கலந்துகொள்கிறே ஒரே உள்நாட்டு இலக்கிய விழா இதுதான் என்கிறபோதிலும் இவ்விழா இவ்வாண்டுடன் முடிவடையவிருக்கிறது என்கிற அறிவிப்பினை வாசித்தபோது சாக்குப்போக்குச் சொல்லாமல் கைப்பேசி டைரி குறிப்பில் எழுதிவைத்துக்கொண்டு பல எதிர்ப்பார்புடன் நிகழ்விற்குச்சென்றேன் என் எதிர்ப்பார்ப்பு வீண்போகவில்லை. நிகழ்ச்சி மிகவும்…
நேர்மையற்ற சிறுகதை போட்டி : ஒரு நேரடி சாட்சியம்
கடந்த 2016-ல் என் தோழி ஹேமா ஒரு செய்தியைப் புலனம் வழியாக என்னிடத்தில் காட்டினார். வல்லினத்தின் சிறுகதை எழுதும் போட்டி அறிவிப்பு அது. பள்ளியில் நான் சில பேச்சுப்போட்டிகளுக்காக மாணவர்களுக்கான கட்டுரைகள் எழுதுவதால் என்னை ஒரு நல்ல எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டார். நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டேன். கதை எழுதி அனுப்பவேண்டிய நாள் 15.09.2016. நானும்…