மலாய் புராணக் கதைகள் ஓர் அறிமுகம்

எல்லாத் தொன்ம நிலங்கள் போலவே மலாய் மொழி புழங்கிய தீவுக்கூட்டங்களில் வாழ்ந்த எளிய மக்கள் மத்தியில் எழுத்து அறிமுகமாகாத காலத்தில் வாய்மொழியாகவே பல கதைகள் உருவாகி உலவி வந்தன. இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தென் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், புருணை, போன்ற நாடுகளை இந்த மலாய் தீவுக்கூட்டங்களில் உள்ளடக்கலாம். மன்னர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலப்பிரபுகளுக்கும் இருந்த…

விலங்குகள் சொல்லும் கதைகள்

‘Folklore’ எனும் சொல் 1864 ஆம் ஆண்டு ஜான் வில்லியம் தாமஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.தமிழில் நாட்டுப்புறவியல் என்பது இதன் சொல்லாட்சியாக இருக்கிறது.நாட்டுப்புறவியலில் பல வகைமைகள் இருந்தாலும் அதில் நமக்கு மிகவும் பரீட்சயமானது நாட்டுப்புறக் கதைகளாகும். நாட்டுப்புறக் கதைகள்(Folktales) அநாமதேயமாக உருவாக்கப்பட்டவை.அவை வாய்மொழியாக தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. அவை குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குள் மக்களால் பாதுகாக்கப்படுகின்றன.அவை ஒரு சமூகத்தின்…

கார்மலின் (கொங்கணி நாவல்): ஒரு பார்வை

இந்திய நிலப்பரப்பின் அறிமுகம் கிடைத்தவர்களுக்கு கோவா காணவேண்டிய இடமென மனதின்  ஆழ்கனவுகளுள் ஒன்றாய் அமைந்திருக்கும். கோவா என்றதும் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் எழுவது கடற்கரையும் மதுவகைகளும் கொண்டாட்டங்களுமாக இருக்கும். பண்பாடு அறிதலுள்ளோர் போர்ச்சுகீசிய வழித்தடங்களைக் காண விருப்பப்படுவர். ஆனால் அந்நிலம் தனக்கென ஒரு தனிமொழியை கொண்டுள்ளது என்பதை அங்கு சென்று வந்த பெரும்பாலானோர் அறிந்திருக்கமாட்டார்கள். வடக்கே குஜராத்தியும்…

பூனைகள் நகரம் : ஹருகி முரகாமி சிறுகதைகள்

நான்கு கால்களையும் பக்கவாட்டில் வாகாகப் பரப்பிக் கொண்டு முன்கால்கள் இரண்டின் இடையில் முகம் சாய்த்துத் தன்னையே திரும்ப பார்த்துக்கொண்டிருக்கும் பூனைகள் சாலைகளில் அகப்படும்.  அவற்றுள் சில அரிதாக வாலையும் அருகில் வைத்துக்கொண்டு அரை விழிப்பில் இருக்கும். தான் படைத்துக்கொண்ட அல்லது தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற உலகில்  உளம் தோய்ந்து வாழ முடியாத தனிமையும் வெறுமையும் அதிலிருப்பதாய்த் தோன்றும்.…

ஹெமிங் வே: வாழ்வெனும் கடலுக்கு அஞ்சிய கிழவன்

ஊட்டி முகாமில் கலந்துகொண்டு திரும்பியபின் பல புதிய படைப்பாளிகள் எனக்கு அறிமுகமானார்கள். அம்முகாமுக்காக உருவாக்கப்பட்ட தளத்தில் இருந்த பல கதைகளை ஆர்வத்துடன் வாசித்தேன். அதில்தான் ஹெமிங் வே எனும் படைப்பாளி எனக்கு அறிமுகமானார். தொடர்ந்து அவர் எழுதிய கிழவனும் கடலும் என்ற நோபல் பரிசு பெற்ற நாவலின் குறும்படத்தைத் தேடிப் பார்த்தேன். அவர் குறித்து விரிவாக…

அவிழாத மொட்டுகள்

உங்கள் உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களின் பரப்பளவு ஒருநாள் சிறுத்துவிடுவதைப் பற்றி என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அல்லது கால் உடையாமல், ஊனப்படாமல் ஒரே இடத்தில் வாழ்க்கை முழுவதிலும் அமர்ந்துகொண்டு,சிறு வேலைக்குக்கூட அடுத்தவருடைய உதவியை நாடி வாழ்வதைப் பற்றி எண்ணியதுண்டா? இவையெல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்கள் வலிந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் அது ஒரு அலங்காரமாக அவர்கள்…

இரத்தம் விற்பவனின் சரித்திரம்

சீன எழுத்தாளர் யூ ஹூவா 1994ஆம் ஆண்டில் எழுதிய இந்த நாவல் ‘Chronicle of Blood Merchant’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. எழுத்தாளர் யூமா வாசுகி  தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். நாவலின் பெயரைப் பார்த்தவுடன் போரைப் பற்றிய புனைவாக இருக்குமென்ற என் யூகத்தை இந்நாவல் முற்றிலுமாகப் புரட்டிப்போட்டது. உலகிலேயே பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்…

சுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)

இந்தத் தடவை பள்ளி விடுமுறையின்போது, நான் கட்டாயம் சுன்னத் (விருத்தசேதனம்) செய்துகொள்ள வேண்டும் என்று  அப்பா கட்டளையிட்டார். நானும் அதற்குத் தயாரானேன். அப்பாவின் முடிவைக் கேட்டு அம்மா அழுதார். இந்த  சின்னப் பையன் சுன்னத் செய்வதை அம்மாவின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அது அப்பா எடுத்த முடிவு, அம்மாவால் எதுவும் செய்ய இயலாது. எங்கள்…

கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)

அன்று நான் எனது தந்தையின் குடிசையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனாக இருந்தேன். அப்போது எனக்கு எத்தனை வயது இருந்திருக்கும்? என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. மிகக் குறைந்த வயது. ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்திருக்கக்கூடும். எனது தாய், தந்தையோடு பட்டறையில் இருந்தாள். சுத்தியலால் அடிக்கும் ஓசையும், விதவிதமானவற்றை வாங்க வருபவர்களது குரல்களும் எப்போதுமே…

மலைக்காடு: இன்னொரு முகம்

‘மலைக்காடு’ சீ. முத்துசாமியின் புதிய நாவல். தனது வழக்கமான களமான தோட்டப்புறத்தை மையப்படுத்தி இந்நாவலை அவர் எழுதியிருந்தாலும் அதன் பின்னணியில் தெளிவான வரலாற்றைச் சொல்லியிருக்கிறார். மலைக்காடு நாவல் மலேசியாவின் 1940ஆம் ஆண்டு காலகட்டத்தைத் தளமாகக் கொண்டது. புக்கிட் செம்பிலான் என்னும் தோட்டத்தை மையமாகக் கொண்டு சொல்லப்படும் இக்கதை, 1940களின் தோட்டப்புற வாழ்வுடன், மலேசிய வரலாற்றில் இன்றும்…

விஜிப்ரியா கவிதைகள்

ஒரு வன்மம் சுழற்றி அடிக்கிறது புள்ளியில் தான் தொடங்குகிறது . டார்வின்தியரி போல பல்கி பெருகி ஒரு திமிங்கலம் அளவு வளர்ந்துவிட்டது. வழக்கமான வசைகளை வாறிஇறைத்து கற்களை கொண்டு அடித்தும் வீழ்த்துகிறேன். என் வசைகளின் பெருவெள்ளத்தில் கரை ஒதுங்கி மூச்சு அறுபட்டு துடித்து சாகும்மென என நினைத்து நான் நிறுத்துவதில்லை. வளர்ந்துவிட்ட அவை என் கண்ணில்…