சூப்பர்மேன் மற்றும் சில சாபங்கள்

“இவரு பெரிய சூப்பர்மேனு வந்துட்டாரு காப்பாத்த…” என்று பலர் கிண்டலாகவும் கேலியாகவும் பேசிக்கேட்டிருப்பீர்கள். நாம் அறியாமலேயே நம் வார்த்தைகளுக்கு நடுவில் வந்து அமர்ந்து கொள்ளும் ஒரு கதாப்பாத்திரம்தான் இந்த “ சூப்பர்மேன்” பாத்திரம். சாகசங்களின் குறியீடாக ‘சூப்பர் மேன்’ எனும் பெயர் மாறியுள்ளது.  யார் இந்த சூப்பர்மேன்? 1938-இல் இரண்டு உயர்க்கல்வி மாணவர்கள் வெர்ரி சீகன்…

பப்பிகள்

நாய் வளர்ப்பது பற்றி எங்கள் குடும்பத்தினர் யோசித்தது முதன் முதலாக செட்டிக்கம்பத்துக்கு வீடு மாற்றலாகி போனப்போதுதான். ஏற்கனவே இருந்த கம்பத்துவீடு பக்கத்து வீடுகளோடு ஒட்டி இருக்கும். உலக நடப்புகள் அனைத்தையுமே அவரவர் வீட்டில் இருந்தபடி கொஞ்சம் வேகமாகக் கத்தி பேசியே பகிர்ந்துகொள்ள வசதி இருந்தது. திட்டுவதென்றாலும் அப்படித்தான். நேரிடையாகச் சென்று வரிந்துகட்டி வருவதெல்லாம் அப்பகுதியில் குறைவுதான்.…

என்னாச்சி?

என்னாச்சு நம்ம குழந்தைகளுக்கு! எதுவும் சொல்லமுடியவில்லை. பதின்மவயதுப் பிள்ளைகளை (teenage) வைத்திருக்கும் அனைத்துப் பெற்றோர்களின் புலம்பலும் ஒரே மாதியாகவே இருக்கின்றதே. எதில் குறை? எங்கே இந்த அவலங்கள் ஆரம்பிக்கப்பட்டன? எதனால் இவர்கள் இப்படி மாறினார்கள்? உழைப்பதற்கு அஞ்சுகிறார்கள். அவமானப்பட்டுவிடுவோமோ அல்லது காயப்பட்டுவிடுவோமோ என்று பயப்படுகின்றார்கள். பெரியவர்களிடம் மரியாதை இல்லை. யார் என்ன சொன்னாலும் முகத்தில் அறைந்தார்போல்…

சொற்கள் அலையும் பெருநகரம் – யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

பல்வேறு கிளைச்சம்பவங்களுடன் நீண்டு விரியும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் எனது வாசிப்பு தளத்திற்குப் புதியவை. எப்போதும் மிக கவனமாக கையாளப்பட்ட சொற்ப வாக்கியங்களாலான கவிதைகளையே அதிகமான வாசித்து பழக்கப்பட்டுவிட்ட நமக்கு யவனிகாவின் கவிதைகள் வியப்பளிக்கின்றன. தொடக்கத்தில் அதில் நுழைவதற்கான ஓர் அச்சத்தை இயல்பாகவே ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால், கவிதைக்குள் நுழைந்து விடுகிற பொழுது ஒவ்வொரு சொல்லும்…

மாலதி மைத்ரி பதில்கள் – பகுதி 4

பகுதி 4 கேள்வி : நீங்கள் ஏன் நாவல் எழுதவில்லை? சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை குறித்து உங்கள் பார்வை என்ன? சிலர் அதை இலக்கியப் பிரதியே இல்லை என விமர்சிக்கிறார்களே. – வளவன், ஆதி & மகிழ்னன், சிங்கை நாவல் எழுதத் தொடங்கி அதற்கான குறிப்புகளில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். தற்போது சில பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது, சில…

மாலதி மைத்ரி தன்னெஞ்சறிய பொய்யுரைக்கிறார்!

நவம்பர் மாத வல்லினம் கேள்வி – பதில் பகுதியில் கவிஞர் மாலதி மைத்ரி அவர்கள் தனது பதிலொன்றில் இவ்வாறு கூறியிருந்தார்: “ஷோபாசக்தி அடிப்படையில் ஈழ விடுதலைக்கு எதிரானவர். இலங்கையில் புலிகளால் தான் ஆயுதக் கலாச்சார வன்முறை உருவானதாக வரலாற்றை திரித்துக் கொண்டிருப்பவர். புஷ்பராஜா, புஷ்பராணியின் நூல்களே இவர்களின் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுகின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும்…

மாலதி மைத்ரிக்கு லீனா மணிமேகலையின் எதிர்வினை

நவம்பர் மாத வல்லினம் கேள்வி – பதில் பகுதியில் கவிஞர் மாலதி மைத்ரி அவர்கள் தனது  கேள்வி பதில் பகுதியில் இவ்வாறு கூறியிருந்தார்: கேள்வி :சக படைப்பாளியான லீனா மணிமேகலை கவிதைகள் தனித்து இருக்கின்றன என்பது என் வாசிப்பின் முடிவு. நீங்கள் ஒரு பெண் கவிஞராக என்ன நினைக்கிறீர்கள்? – கவிதாயினி, தமிழ்நாடு

தெளிவத்தை ஜோசப்புக்கு இவ்வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது

தெளிவத்தை ஜோசப்புக்கு இவ்வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும். இம்முறை விருதுத்தொகையாக ரூபாய் ஒருலட்சமும் நினைவுச்சிற்பமும் வழங்கப்படும். தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி விருதை வழங்கி கௌரவிப்பார். மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை…

தினகரன் கவிதைகள்

தனிமையில் எழுதி முடித்ததும் எழுதி கொண்டிருப்பதும் இனி எழுத போவதும் இன்னொரு தனிமையை பற்றி தான். • ஒருவர் கனவை மற்றொருவர் மற்றொருவர் கனவை இனொருவர் திருடித்தான் வாழ வேண்டியிள்ளது நாளை உங்கள் கனவை நானும் என் கனவை நீங்களும் திருட வேண்டிய நிர்பந்தத்தில் தான் வாழ்க்கை இருப்பு கொள்கிறது. • வலிமை இழந்த வார்த்தைகளோடும்…

எம்.ராஜா கவிதைகள்

அப்புக்குட்டியும் குட்டித்தங்கமும் புதுமணத் தம்பதி கதை தலைமுனை இழுத்தால் காலைக் கடிக்கிறது. காலைக் காப்பாற்றினால் கடிபடுது என்காது. கொசுக்கள் களவாடிய தூக்கம் தொலைந்துபோன நடுநிசியில் குட்டைப்போர்வையை சுருட்டியெறிந்து சுறுசுறுப்பாய் உட்கார்ந்தபடி புதுமணத் தம்பதிபற்றி சுடச்சுடக் கதைசொல்கிறேன். கவனமாய்க் கேளுங்கள் கனவான்களே கனவாட்டிகளே! கடவுள் வாழ்த்து வீதிநடுவே கொலு வைத்தார்களா கோவிலில் வைத்தபின்னே சுற்றிலும் வீதிசமைத்தார்களா எனக்…

“மனித விடுதலை போல் கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று”

டாக்டர் மா.சண்முகசிவா கெடா மாநிலத்தில் உள்ள அலோஸ்டார் நகரில் பிறந்தவர். தமிழகத்தில் மானாமதுரையில் (சிவகங்கை மாவட்டம்) பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தை கெடாவில் ‘ஜெய் ஹிந்த் ஸ்டோர்’ எனும் மளிகை கடை நடத்துவதிலிருந்து தன் வாழ்வை தொடங்கியுள்ளார். ஆரம்பக்கல்வியை ஆங்கிலப்பள்ளியில் கற்றாலும் இராமசாமி செட்டியார் எனும் தமிழ் ஆசிரியர் வீட்டில் வந்து சண்முகசிவாவுக்குத் தமிழ் போதித்தார்.…