சமூகம் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் அறிந்த, பழகும், சந்திக்கும் மனிதர்களால் மட்டும் ஆனதல்ல. அல்லது வரலாறு பதிவு செய்துள்ள உன்னத மனிதர்களையும் லட்சியப் புருஷர்களையும் மட்டும் கொண்டதல்ல. நாம் கண்டுகொள்ளாத அல்லது திட்டமிட்டே அறிய விரும்பாத மனிதர்களும் சமூகத்தின் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அருவருப்போடு நாம் ஒதுக்கிவைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாழ்க்கை…
செடல்: கைவிடப்படுதலின் துயர்
இயல்புவாதப் படைப்புகளைச் சுருக்கமாகக் கடவுள்கள் இல்லாத படைப்புகள் என்று வகைப்படுத்தலாம். கதைகளில் அற்புதத் தன்மையையும் யதார்த்தம் கடந்த தன்மையையும் கழித்துவிட்டு எழுதப்படும் கதைகளை இயல்பு மற்றும் யதார்த்தவாதப் படைப்புகளாக அடையாளப்படுத்தலாம். செடல் அப்படியானதொரு இயல்புவாதப்படைப்பு. ஆனால் செடல் இப்படித் தொடங்குவது ஒரு நகைமுரண். ‘சாமி என்னிக்குமே சாவப்போறதில்லெ’ சரியாகச் சொல்வதானால் இந்த நாவல் முழுக்கவே கடவுள்…
பெத்தவன்: நிகழ்த்தப்படும் ஆவணம்
‘பெத்தவன்’ நெடுங்கதை வெறும் நாற்பது பக்கங்கள் மட்டுமே. அந்த நாற்பது பக்கங்களை வாசித்து முடித்தபோது சில மணி நேரம் எந்த வேலையும் செய்ய முடியாமல் தடுமாறிப் போயிருந்தேன். மனித குலத்தில் வேரூன்றியிருக்கும் சாதியத்தையும் அதன் குரூரங்களையும் கதை முழுக்க நிரம்பியிருக்க அதை வாசிக்கும் வாசகன் நிச்சயம் பதைபதைப்புக்கு உள்ளாவான். எழுத்தாளர் இமையம் அவர்களை வல்லினம் மூலமாக…
எங் கதெ: ஆணின் அகவெளி
“என்னெ மாரியே ஒரு பொம்பள பொலம்புனா கற்புக்கரசி, கண்ணகி, உத்தமி, பத்தினின்னு பட்டம் கொடுப்பாங்க. ஆம்பள பொலம்புனா பொட்டப் பயம்பாங்க. பொழக்க தெரியாதவன்னு சொல்லுவாங்க”, இப்படியாக சமூகத்தின் பார்வையில் பொழக்க தெரியாதவனாகவும் நமது பொதுப்புத்திக்குப் பொட்டப் பயலாகவும் தெரிகிற விநாயகம் என்ற ஆண்மகனின் பத்து வருடத்துக் கதைதான் எங் கதெ. ஓர் ஆணின் கதை என்பது…
பெத்தவன்: வஞ்சிக்கப்படும் அன்பு
அழ வைத்தாலும் என்னுள் ஆழப் பதிந்த கதை, உயிர் வலி உணர்த்திய கதை. ஓர் உயிர் இன்னோர் உயிரை வதைக்கும் சமத்துவமற்ற நிலையின் உச்சம் இந்தப் பெத்தவன் குறுநாவல். சாதித் தீண்டாமையை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் ஒரு கிராமத்தில் கதை தொடங்கி அங்கேயே முடிகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆணை (காவல் அதிகாரியை) மூன்று வருடங்களாகக் காதலிக்கிறாள்…
செல்லாத பணம் : அலைந்து எரிந்த நிலம்
பார்த்த இடமெங்கும் கண்குளிரும் பொன்மணல் என் பாதம் பதித்து நடக்கும் இடத்தில் மட்டும் நிழல் தேடி என்னோடு அலைந்து எரிகிறது ஒரு பிடி நிலம். பாலை – பிரமிள் பொன்மணல் விரித்த பாலைவெளி. கண் தீண்டக் குளிர்ச்சி. கால் பதிக்க, தழல்த்தீண்டல். எல்லா உறவுகளும், அதைக் கட்டி வைக்கும் உணர்ச்சிகளும், அது வெளிக்காட்டும் உணர்வுகளும் இந்தப்…
பி.ரம்லி: கலை – கனவு – கலகம்
‘தூய கனவு நொறுங்கி சிதைந்தது கட்டிய மாளிகை கல்லறை ஆனது இருள் சூழும் வருங்காலம் வருவது நிச்சயம், என் ஆன்மா உழல்கிறது வடக்கும் தெற்கும்’ இது பி.ரம்லியின் வரிகள். அவர் இறுதியாய் எழுதிய மலாய் பாடல் வரிகள். அவர் வாழ்வின் இறுதிப்பகுதியின் அலைக்கழிப்பைச் சொல்லும் வரிகள். 1973 இல் தனது 44வது வயதில் இறப்பதற்கு முன்…
ஒரு தருணத்தில்
அவன் தனிமையில் முதுகை கடலுக்குக் காட்டியபடி சாய்வுநாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான். கடுமையான காற்று. வானம் மிகப் பிரகாசமாக, மேகத்தின் தடயம் ஏதுமின்றி இருக்கிறது. கடல் நீரில் பிரதிபலிக்கும் மினுங்கும் சூரிய ஒளியில், அவனது முகம் தெளிவாகத் தெரியவில்லை. கிரீச்சிடும் துருவேறிய ஈரமான பெரிய இரும்புக் கதவுகள். எங்கோ அவற்றின் மேற்பகுதியிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. அந்தத் தடித்த கனத்த…
தீக்கொன்றை
படுக்கைவிளிம்பில் இருந்து அக்காவின் கை நடுக்கத்தோடு விலகி கீழே தொங்கியதில் ரப்பர் குழாயில் மருந்து தடைப்பட்டு இரத்தம் மேலேறியது. சுற்றுக்கு வந்த மருத்துவர் அதை சரி செய்து “அவள் உன்னை காப்பாற்றியதாக எண்ணி தேற்றிக் கொள்,” என்று ஆறுதல் கூறிச் சென்றார். அதுவரை விட்டுவிட்டுத் தோன்றிக் கொண்டிருந்த அபாயகரமான மூச்சுத் திணறலின், உருவெளி மயக்கங்களின் பிடி…
விமர்சனக் கட்டுரை போட்டி
வல்லினம் கடந்த பத்து ஆண்டுகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளது. அவற்றில் சில பரவலான வாசிப்புக்குச் சென்றுள்ளன. சிறிய விமர்சன கூட்டங்கள் மூலம் நூல்களின் தரத்தைப் பாராபட்சம் இன்றி விமர்சனம் செய்யும் அங்கங்களையும் உருவாக்கி நூல்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வல்லினம் பதிப்பில் வந்த நூல்களை பரந்த வாசிப்புக்குக் கொண்டுச்செல்லவும் தரமான ஆக்கங்களை பொதுவாசகர் பரப்பில்…
சுப்ரபாரதி மணியன் எதிர்வினையும் அசட்டுத்தனமும்
குறிப்பு: ஜனவரி வல்லினத்தில் கடவுச்சீட்டு என்னும் கள்ளச்சீட்டு எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. கடவுச்சீட்டு எனும் நாவலை எழுதிய சுப்ரபாரதிமணியன் அக்கட்டுரைக்கு தனது எதிர்வினையை அனுப்பியுள்ளார். இலக்கிய விமர்சனமாக இருக்கும் பட்சத்தில் இந்த எதிர்வினைக்கு அடுத்த மாதம் வல்லினம் தரப்பில் இருந்து பொறுமையாக பதில் கூறியிருப்போம். ஆனால் முற்றிலும் மலினமான அவதூறை தாங்கியுள்ள இந்தக்…