சரவாக். என்னை எனக்கு அறிமுகப்படுத்திய மாநிலம். இதை நான் மாநிலம் என குறிப்பிடுவதை விட இனம், மொழி, மதம், சீதோசன சூழல் என மாறுப்பட்ட இந்த நிலத்தை நாடு என்று சொல்வதுதான் சரியாகப் பொருந்தும். படிக்கும் காலங்களில் பாடப்புத்தகத்தில் சரவாக் பற்றி படித்ததோடு சரி. பின்னர் அதைப்பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. பல்கலைக்கழகத்தில் என்னோடு வேதியல் வகுப்பில்…
ஆணொருவன் அழுகிறான்
அலாவுதின் விளக்கில் அடைபட்டிருக்கும் பூதமொன்று அவனது அழுகை துளியின் சிறு துகள் பட்டு தூக்கம் கலைந்தது இது சாத்தியமே ஆகக்கூடாதென அசரீகள் முழுக்க பெண் குரல்களால் ஒலிக்கத்தொடங்கின ஆயிரத்து இரண்டாவது நாளுக்கான கதையை அரேபியர்கள் தேடிப்போகலானார்கள் அதிலவன் தனது மார்புக்கூண்டிலிருந்து இதயத்தை கழற்றி அதற்கு தங்க முலாம் பூசியதன் தகுதியை உயர்த்திக்கொண்டிருந்தான் விபரம் தெரிந்தவிட்ட…
வல்லினத்தின் குறுநாவல் பதிப்புத்திட்டம் நாள் நீட்டிப்பு
மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சிக்குத் தனது பங்களிப்பைத் தொடர்ந்து ஆற்றிவரும் வல்லினம் இவ்வருடம் குறுநாவல் பதிப்புத்திட்டத்தில் காலக்கேடு 28 பிப்ரவரி 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இத்திட்டத்தின் மூலம்: பதிப்பிக்கப்பட்ட குறுநாவல்கள் உலகம் முழுதும் உள்ள தமிழ் வாசகர்கள் மத்தியில் சென்று சேரும். நூலாக்கப்பட்ட குறுநாவல்களை ஒட்டிய தொடர் கலந்துரையாடல்கள் நாடு முழுவதும்…
விஷ்ணுபுரம் விருது 2017
2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது. கோவையில் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது. 16 ஆம்தேதி காலை ஒன்பது மணிக்குச் சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 ஆம்தேதி காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கி…
சீ.முத்துசாமி : ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்.
யு.பி தோட்டத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் பெரியாற்றின் மேல் பரப்பில் விரிந்திருக்கும் மரக்கிளையில் இருந்து குதித்து, எல்லா சிறுவர்களும் ‘சொரப்பான்’ பாய்ந்துகொண்டிருக்க கரை ஓரமாக நீந்தியபடியே பாய்ந்த வேகத்தில் தன் நண்பர்கள் ஆற்றின் ஆழம் சென்று மீள்வதை ரசித்துக்கொண்டிருந்த சிறுவன்தான் முத்துசாமி. ஆற்றில் ஆழ நீந்துவதில் பயம் இருந்தாலும் அதில் கால்களை நனைக்காமல் அவரால் இருக்க முடிவதில்லை.…
தழலின் சமரசத்தில் தணிந்திருக்கும் காடு
மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் ‘கறாரான இலக்கிய விமர்சனம்’, ‘தீவிர இலக்கியம்’ ஒரு எல்லைக்கு மேல் வளராமல் போனதற்கு இதுவரையில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் ‘இந்நாட்டில் எங்களுக்கு எழுத்து சுதந்திரம் இல்லை,’ என்று எழும் குரல்களே அவற்றில் மேலதிகமானவை. இலக்கியம் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக எழுத்து துறைகள், கலைத்துறைகள், ஊடகத்துறை என கருத்து வெளிபாட்டை முன்வைக்கும்…
தன்னுடன் பேசுதல்
ஆடம்பரத் தேவைகள் அத்தியாவசியத் தேவைகள் என இரு பகுதிகளாக பதில் சொல்லச்சொல்லி பள்ளிகளில் கேட்பார்கள். எது இருந்தாலும் இல்லையென்றாலும் நம்மால் உயிர் வாழ முடிகிறதோ அது ஆடம்பரத் தேவைகள். எது இல்லையென்றால் நம்மால் உயிர் வாழ முடியாதோ அது அத்தியாவசிய தேவைகள் என இலகுவாக ஆசிரியர் பாடம் நடத்தியிருந்தார். இப்போதுவரை அந்த எளிய கோட்பாடாக நினைவில்…
மலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (இறுதிப் பகுதி)
கே. பாலமுருகன். (2013). இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள். மலேசியா: வல்லினம் பதிப்பகம். இத்தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள். அவற்றில் குறிப்பிடத்தக்க சிறுகதை, ‘தங்கவேலுவின் 10-ஆம் எண் மலக்கூடம்’, ‘இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள்’ மற்றும் ‘பறையர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீடு’ கதைகள்தான். மற்ற சிறுகதைகள் முன்கூறியபடி விரிவாகப் பேசவேண்டிய தேவையில்லாத கதைகள். தொகுப்பின் முதல் கதையான ‘தங்கவேலுவின்…
மண் விழுந்தது
நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் பொறியியல் மற்றும் பசுமை தொழில்நுட்பப் புலத்தின் அறை எண் E214-இல் வகுப்பு நடத்த இடமளிக்கப்பட்டிருந்தது. இம்முறை அங்கு சர்வதேச மாணவர்களுக்கு மலேசிய வரலாற்றையும் அரசியலையும் போதிக்கும் பாடம். அன்று அதுதான் முதல் வகுப்பு. வகுப்பில் பாடம் போதித்துக் கொண்டிருக்கும்போது மெசெஞ்சரில் தகவலொன்று வந்தது. அதையடுத்து எனக்குப் பாடம் நடத்த மனம்…
புனிதத்தை நகல் எடுக்கும் பாவையின் கதைகள்
ந.மகேஸ்வரி கதைகள் எழுதிய அதே காலகட்டத்தில் வடக்கில் இருந்து படைப்புகளை தந்துகொண்டிருந்தவர் பாவை. இவரின் சிறுகதை தொகுப்பு 1986-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஞானப்பூக்கள்’. இந்நூலை தனி ஒருவராக வெளியிட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முன்னுரையில் வாசிக்கும்போது பிரமிப்பாகத்தான் உள்ளது. இத்தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளும் 1972 முதல் 1986 வரை அச்சு ஊடகங்களில் வெளிவந்தவை என்பதோடு …
ஈ
ஆபீசிலிருந்து தீம்பாருக்குள் நுழைந்து செம்மண் சாலையை அடைந்து, அரக்கப் பறக்க தார் சடக்குக்கு ஓடிவந்து சேர்வதற்குள்ளாகவே பத்து மணி பஸ் கண் பார்க்கக் கடந்து போய்க்கொண்டிருந்தது. எப்படியாவது நிறுத்திடவேண்டும் என்ற பதற்றத்தோடு கையசைத்து ஓடி வந்தும் பஸ் டிரைவர் சட்டை செய்யாமல் போய்விட்டிருந்தான். தன் கண்முன்னால் கடக்கும் பஸ்ஸை கரித்துக்கொட்டினான் வேலைய்யா. தன்னை ஒரு புழுவென…