தீவிர இலக்கியப் படைப்புகள் எழுதப்படும் காலத்தில் பொதுச்சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கிவிடுவதில்லை. ஜெயகாந்தன் போன்ற ஒரு சில விதிவிலக்குகள் உண்டெனினும் அவரது படைப்புகள் கூட சரியான விதத்தில் உள்வாங்கப்பட்டது அவை எழுதப்பட்ட சமகால சலனங்கள் அடங்கியபிறகே. உதாரணமாக அவரது அக்கினிப்பிரவேசம் என்ற பிரபலமான கதையைப் பெரும்பான்மையானவர்கள் அறிந்திருந்தாலும் அதற்கு அன்று கிடைத்தது ஒரு சமூகப் பொது…
யாக்கை
“ஏன் என்னைய எடுத்தீங்க சர்? வர்றவன் எல்லாம் பிலிப்பினோ, இந்தோ காரியதான் தேடுவானுங்க. இங்க கிராக்கியே இல்லாத சரக்கு நான்தான்” என்று அவள் இயல்பாகப் பேச்சைத் தொடங்கியது அவனுக்குப் பிடித்திருந்தது. முடியை இழுத்துவாரி குதிரைவால் கொண்டை கட்டியிருந்தாள். கொண்டைக்கு மட்டும் பழுப்பு நிற வண்ணம். சிலிவ்லெஸ் உடலோடு ஒட்டாதபடிக்கு மார்புகள் நிமிர்ந்திருந்தன. வெள்ளை லேகிங்ஸில் பிட்டங்கள்…
ஆண்கள் அழ வேண்டாம்
தான் ஓர் ஆண் என்று மனதார ஏற்றுக் கொண்ட ஒரு இளம் பெண் சமுதாயத்தின் மத்தியில் ஆணாக வாழ, ஆணாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முனையும்போது ஏற்படும் சிக்கல்களையும் கொடூரங்களையும் Boys Don’t Cry எனும் படக் கதையின் வழி காட்டியுள்ளார் இயக்குனர் கிம்பர்லி பியர்ஸ்.( Kimberly Pierce). அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா( Nebraska) மாநிலத்தின் தலைநகரான…
இலக்கியம் நடந்து சென்ற பாதையில்தான் வாழ்க்கை இருக்கிறது
புதுச்சேரியில் பிறந்த ந.பாலபாஸ்கரன், சிறுவயதிலேயே பினாங்கு வந்து உயர்நிலைப் படிப்பை மலேசியாவில் முடித்தார். பின்னர் தமிழகத்தில் ஓராண்டு படித்துவிட்டு, 1963ல் கோலாலம்பூர் ரேடியோ மலாயாவில் வேலைக்குச் சேர்ந்தார். மலாயாப் பல்கலைக்கழத்தில் பொருளியலில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து அதை முடிக்கவில்லை.பின்னர் மலாயாப் பல்கலையின் இந்திய இயல் புலத்தில் பி.ஏ.ஹானர்ஸ், எம்.ஏ கல்வியை முடித்தார். ‘மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள்’…
மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள்-1
மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் நாளிதழ்களின் பங்களிப்பு முக்கியமானது. சிறுபான்மை இனமான இந்தியர்களின் எழுச்சிக்கும் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் நாளிதழ்களே ஒவ்வொரு காலத்திலும் பெரும் பங்காற்றியுள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக தமிழ்ப்பத்திரிகையை இயக்கியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து மலாயாவுக்கு வந்திருந்த படித்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இந்தியாவில் இருக்கும்போது பத்திரிகைத் துறையிலும் அரசியல் இயக்கங்களிலும் அனுபவம் பெற்றவர்களாக இருந்ததால்…
குண்டர் கும்பல் கலாச்சாரமும் தமிழ்ச் சமூக மெளனமும்
முன்னுரை மலேசியத் தமிழ்ச்சமூகம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் அவலங்களையும் சீர்கேடுகளையும், அதனால் ஏற்படும் வீழ்ச்சியையும் இந்த இயற்பியல் விதியைச்சார்ந்தே ஒப்பிட முடிகிறது. அறிவியல், பொருளாதாரம், கல்வி, இலக்கியம் என எல்லாவற்றிலும் முன்னணி வகித்த தமிழர்களின் நிலையை இன்று ஒரு வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாகத்தான் கணிக்க முடிகிறது. இந்த மாற்றத்தைச் சங்கத்தமிழ் மரபிலிருந்தெல்லாம் கணக்கெடுக்க வேண்டியதில்லை. கடந்த 200…
கா.பாக்கியம் முத்து: புனித பிம்பங்களின் முன் மண்டியிடும் பெண்ணியம்
வடக்கில் இருந்து மிகத் தீவிரமாக எழுதியதோடல்லாமல் இலக்கிய இயக்கங்களிலும் அதிக கவனம் செலுத்தியவர் க.பாக்கியம் முத்து. பெண்ணியக் கருத்துக்களை கதைகளில் மட்டும் முன்வைக்காமல் கலந்துரையாடல்களிலும் பேச்சுகளிலும் துணிச்சலாக முன்வைத்து அவ்வப்போது பல தரப்பு விமர்சனங்களை எதிர்கொண்டவர் இவர். தன் படைப்புகள் பற்றி இவர் “என்னுடைய கதைகள் பெரும்பாலும் பெண்ணியம் சார்ந்தே எழுதப்பட்டது. பெண்களின் அவலநிலை என்…
ஆங்கில மறுவுருவாக்கத்தில் மலேசியத் தமிழ்ப் படைப்புகள்
ஒரு பனுவல் அதன் மூல மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றல் ஆகும்போது அப்பனுவல் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இம்மொழியாக்கத்தில், மொழிபெயர்ப்பு (Translation) என்றொரு வகையும் மறுவுருவாக்கம் (Trancreation) என்றொரு வகையும் உள்ளன. இன்றைய மொழியாக்கத்தில் கதை, கவிதை, நாடகம் போன்ற இலக்கிய மொழியாக்கம் குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது. இலக்கியம் அல்லா மற்ற பனுவல்களின் மொழியாக்கம்தான் அதிக அளவில்…
கனவு
“கனவ சொல்லவா சார்?” “ம்…சொல்லுமா.” “அம்மாவ பாக்கப்போறேன். அவங்க கால புடிச்சி அழறேன். அம்மா வந்துருமான்னு கெஞ்சிறேன். அப்போ மழ பேஞ்சிக்கிட்டு இருக்கு. காத்து வேகமா அடிக்குது. அம்மாவும் என்னைய கட்டிப்புடிச்சிக்கிட்டு அழறாங்க. அப்ப அந்த ஆளு வருது. அம்மாகிட்டேருந்து என்னைய புடிச்சி இழுக்குது. ஒரு அறையில போயி அடைச்சி வைக்குது. அம்மாவ போயி அடிக்குது.…
காவிக் கொடியும் கவிதை வரிகளும்
நான் முதன் முதலாக கோலாலம்பூருக்குப் பயணம் செய்தது ஒரு வரலாறு போல் இன்றைக்கும் நினைவுகூறத்தக்கதாக உள்ளது. என் முதல் கோலாலம்பூர் பயணமானது ஏதோ ஒருவகையில் மலேசிய அரசியல் போக்குடனும் சமூக சிந்தனை மாற்றத்துடனும் தொடர்புடையதாக இருப்பது எதிர்பாராதது. நானும் என் அண்ணனும் அடிப்படையில் திராவிடச் சிந்தனை தாக்கத்தால் வளர்ந்தவர்கள். எங்கள் அப்பா தீவிர பெரியார் பற்றாளராகவும்…
வைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு: விஷ்ணுபுரம் விருது அனுபவம்
அப்போது ஜெயமோகன் அறிவித்தார். இவ்வாண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை சீ.முத்துசாமிக்கு கொடுக்கவுள்ளோம். எனக்கு அது அதிர்ச்சியையும் கூடவே மகிழ்ச்சியையும் கொடுத்தது. அந்தக் கூட்டத்தில் நான் எதிர்ப்பார்த்த சலசலப்பு இருக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே சிலர் அவர்களுக்குள் முகபாவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். என் கண்கள் சீ.முத்துசாமியைத் தேடின. தூரத்தில் அவர் அமர்ந்திருந்தார். யாருக்கோ என்னவோ நடப்பது போல அங்கும் இங்கும்…