நீண்டு பிளந்த மீன்னல் கதவுகளின் ஊடாக வாரிப்பொழிந்து கொண்டிருந்தது வானம். வெளிச்ச நரைகள் படிந்த இருளின் அமைதி அந்த விமான நிலையத்தை முழுமையாக ஆக்கிரமித்துக்கிடந்தது. மாறி மாறி வந்திறங்கிய விமானங்களுக்குள் பெருமூச்செறியும் பலநூற்றுக்கணக்கான உயிர்களின் நிம்மதியினாலோ என்னவோ அந்த பெருவிதானம் தொடர்ந்து காற்றோட்டம் நிறைந்ததாகவே காணப்பட்டது. வாழ்வின் சகல அழுக்குகளையும் அகத்தில் சுமந்த ஒருவனையும் மீதி…
கதைபோடுகிறாள் கனிப்பெண்
ஒரு சிறுகதையை எழுதி முடித்தவுடன் ஈராயிரம் ஆண்டுகளாய் தொலைந்து வரும் கதை இழையைக் கண்டுபிடித்துவிடுகிறது. புராதனக் கதை இழைகள் மறதியில் காணாமல் போய்த்தான் இருக்கும். ஒரு நகரம் பாழடைந்து ஜனங்கள் வெளியேறிச் செல்கிற கதைகள் உண்டு. எல்லா ஊரிலும் பஞ்சம் ஏற்பட்டு மாடுகளும் மனிதர்களைப்போல் எலும்பு துருத்திய காலத்தில் இந்தியாவைவிட்டு தமிழக கிராமங்களைவிட்டு வெளியேறிய ஜனங்களின்…
வடக்கு நோக்கி பறந்ததொரு மாயப்பறவை
வல்லினம் கலை இலக்கிய விழா முடிந்ததும் வழக்கம் போலவே நான் பரபரப்பானேன். எல்லாம் குறித்த நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டுமே என்கிற பரபரப்புதான். இந்த முறை எழுத்தாளர் கோணங்கியையும் உடன் அழைத்துச் செல்வதால் படபடப்பு அதிகம் இருந்தது. இரண்டு நாட்கள் வடக்கு மாநிலங்களை அவருக்குச் சுற்றிக் காட்ட திட்டமிட்டிருந்தோம். ஆகவே நிகழ்ச்சி முடிந்ததும் கோணங்கியிடம் என்னை…
மேஜிக் பையுடன் சுண்ணாம்பு மலை திருடன்!
15.9.2017 – வெள்ளி வழக்கம்போல தயாஜியும் நானும்தான் விமான நிலையத்தில் எழுத்தாளர் கோணங்கிக்காகக் காத்திருந்தோம். முதல் சந்திப்புதான். ஆனால் எளிதாக அடையாளம் காண முடிந்தது. ஐந்து மணிக்குள் சாலை நெரிசலாகும் பகுதிகளைக் கடந்துவிட வேண்டுமென அவசர நல விசாரிப்புகளுடன் காரை அடைந்தோம். தயாஜி காரில் காந்திருந்தார். காரிலேயே ‘வல்லினம் 100’ புத்தகத்தைக் கொடுத்தேன். பொதுவாக ‘வல்லினம்’…
வல்லினம் கலை இலக்கிய விழா 9 : ஒரு பார்வை
கடந்த 17.9.2017 (ஞாயிறு) கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் வல்லினம் குழுவினரின் வருடாந்திர நிகழ்ச்சியான கலை இலக்கிய விழா ஒன்பதாவது ஆண்டாக நடைபெற்றது. சரியாகப் பிற்பகல் 2.00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 280க்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கென தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரிந்த எழுத்தாளர் கோணங்கியுடன் சிங்கையிலிருந்தும் பல இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.…
வல்லினம் 100- மலேசிய சிங்கை எழுத்தியக்கத்தின் நவீனக் குரல்
வல்லினம் 100 நிகழ்ச்சிக்குப் போவதற்குத் தயாராகத்தான் இருந்தேன். ரயில் டிக்கெட்டை இன்னும் ஒரு வாரம் கழித்து எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். அதற்கு முன்னாலேயே வல்லின நிகழ்ச்சி தேதியிலேயே என் நெருங்கிய உறவுப்பையனுக்குப் பதிவுத் திருமணம் என் திட்டத்தைப் பாழாக்கிவிட்டது. ஒரு இலக்கிய மனம் அதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் வீட்டில் பெரிய மனுஷன் தகுதி இது போன்ற…
வல்லினம் 100 சிறுகதைகள் – ஒரு பார்வை
“எனது கதைகள் விமர்சகர்களின் அளவுகோல்களுக்குள் அடங்காதவை. என் கதைகளின் அருகில் அளவுகோல்களை வைப்பதன் மூலம், அவர்கள் என் கதையை அளக்கவில்லை. அவர்களின் அளவுகோல்களை அளந்துகொள்கிறார்கள்.” சொன்னது புதுமைப்பித்தன். அவர் சொன்னது என்னுள் உண்டாக்கிய தயக்கத்துடன் வல்லினம் 100 தொகுப்பில் இடம்பெற்ற 11 சிறுகதைகளைப் பற்றி எழுதுகிறேன். வாழ்வில் பல தருணங்களை, பல விதமான மக்களை, இடங்களை,…
வல்லினம் 100 விமர்சனக் கட்டுரை – ஒரு பார்வை
வல்லினம் 100′ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆறு விமர்சனக் கட்டுரைகளுள் சீ.முத்துசாமியின் ‘இருளுள் அலையும் குரல்கள்’ குறுநாவல்கள் தொகுப்பைக் குறித்து நான் எழுதியுள்ள கட்டுரையும் ஒன்று. அக்கட்டுரையைத் தவிர்த்து மற்ற ஐந்து விமர்சனக் கட்டுரைகளைக் குறித்து என் கருத்துகளை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன். முதலாவது, முத்தம்மாள் பழனிசாமியின் ‘நாடு விட்டு நாடு வந்து‘ நூல் குறித்த அழகுநிலாவின் விமர்சனக் கட்டுரை. தற்காலத்தில்…
வல்லினம் 100 நேர்காணல்கள் – ஒரு பார்வை
ஒரு விழாவை இத்தனை ஒழுங்கோடு ஒரு குழப்பமும் இல்லாமல் நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.இதற்கான ஏற்பாடுகளை நான்கைந்து மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன்.மூன்று மாதமிருக்கும், மலேசிய எண்ணிலிருந்து அழைப்பு. “நான் நவீன் பேசறேன்” என்றார். வல்லினம் நூறாவது இதழ் வரப்போகிறது. சிறப்பிதழாக கொண்டு வரலாம் என்று நினைக்கிறோம். சிங்கப்பூரிலிருந்து உங்களது பங்களிப்பாக படைப்புகள் அனுப்புங்கள்…
வல்லினம் 100 ஆய்வுக்கட்டுரைகள் – ஒரு பார்வை
‘சொல் புதிது சுவை புதிது’ வல்லினம் 100-இல் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தும்சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய கூறுகள். எங்கும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் உள்ளதை உள்ளபடியே உணர்ச்சி மிகையில்லாமல் பதிவாக்கப்பட்டிருப்பது கட்டுரைகளின் பலம். மொழி, இனம், இலக்கியம், இதழியல், கல்வி, அரசியல் என பல்துறை சார்ந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்துமே…
‘வல்லினம்’ தமிழ்ச் சொல்லினம்
எனது முதல் வெளிநாட்டுப் பயணமும் மலேசியச் செலவும் 2010 ஜனவரி இருபத்தெட்டாம் நாள் அதிகாலை 12.05க்குச் சென்னையில் துவங்கியது. ஜெட் ஏர்வேஸ். திரும்பி நான் சென்னையில் இறங்கியது பிப்ரவரி எட்டாம் நாள் காலை ஆறு மணிக்கு. இத்தனை துல்லியமாக ஏழாண்டுக்குப் பிறகும் நினைவிருக்குமா என்று கேட்பீர்களேயானால், எல்லாம் கடவுசீட்டில் இடப்பட்ட முத்திரிகைகள் காரணம். மொத்தம் பன்னிரெண்டு…