வல்லினம் குழுவினரின் தொடர்பு கிடப்பதற்கு முன்பு என் நிலைஎன்ன? அவர்களின் தொடர்பும் ஆதரவும் கிடைத்த பிறகு என் நிலை என்ன? என யோசிக்கிறேன். தொடக்கத்தில் எனக்குமூர்த்தி மற்றும் பாலு போன்று கைகொடுத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் நிறையவும் எழுதினேன். மயில், வானம்பாடி போன்ற இதழ்களில் என் தொடர்கள் வெளிவந்தன. லங்காட் நதிக்கரை நாவலுக்கு பரிசு…
வல்லினத்தின் விமர்சன முன்னெடுப்பு
மலேசிய இலக்கியம், மலேசிய படைப்பாளிகளின் படைப்புகள் குறித்து மிகவும் காத்திரமான விமர்சனத்தை முன் வைத்து எழுதக்கூடிய பல படைப்புகளை வல்லினத்தில் நான் படித்திருக்கின்றேன். பழம்பெரும் எழுத்தாளர்களைக்கூட தயவுதாட்சண்யம் இல்லாமல் விமர்சிக்ககூடிய சிற்றிதழாக வல்லினம் மலேசியாவில் வந்தது. அவர்களோடு எனக்கும் தொடர்பு ஏற்பட்டு இதையொட்டிய என்னுடைய கருத்துகளையும் கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களின் கருத்துகளில் நேர்மையையும் தெளிவையும் பார்க்க…
வல்லினத்தின் உள்ளார்ந்த ஈடுபாடு
கெடா மாநில எழுத்தாளர் சங்க தலைவராக நான் இருந்த சமயத்தில் அச்சில் வந்த முதல் வல்லினம் இதழை அங்கு வெளியிட்டு அறிமுகம் செய்தோம். அவ்விதழுக்குப் பல படைப்புகளை நான் எழுதியிருக்கிறேன். இலக்கிய விமர்சனங்கள் அரசியல் விமர்சனங்கள், சமூக விமர்சனங்கள், சிறுகதைகள், சுய அனுபவ கட்டுரைகள் எனச் சொல்லலாம். அந்த காலகட்டத்திலேயே எங்களுக்குள் நெருக்கமும் தொடர்பும் இருந்தது.…
வல்லினம் மீண்டும் அச்சிதழாக வேண்டும்
வல்லினம் இணைய இதழுக்கு முன்பு, அச்சிதழாக வந்தது எனக்கு ஒரு உந்துதலாகவும் எதையாவது எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது. எனது கதைகள் கட்டுரைகள் எல்லாம் அதில் வெளிவந்தன. தொடர்ந்து என்னை ம.நவீன் விரட்டி விரட்டி படைப்புகளை வாங்கினார். ஒரு முறை நான் எழுதிக் கொடுக்காவிட்டால் என் வீட்டின் முன் தீ குளித்துவிடுவேன் என்றும் கிண்டலாகச்…
என்னை மீட்ட வல்லினம்
திடீரென மலேசிய இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதாய் ‘காதல்’ என்ற இதழ் வந்திருந்தது. இளைஞர்கள் தங்களிடம் உள்ள மொத்த திறமைகளையும் கொட்டி அதனை உருவாக்கியிருந்தார்கள். புத்தகத்தில் வெளிவந்த நேர்காணலுக்கான படங்கள் அவ்வளவு அற்புதமாக இருந்தன. நான் அவற்றை மிகவும் ரசித்தேன். ‘காதல்’ புத்தகத்துக்குப் பிறகுதான் வல்லினம் வெளிவந்தது. வல்லினத்தின் வெளிப்பாடு என்னை எழுதத் தூண்டியது. வல்லினத்தில் தொடர்ந்து…
வல்லினத்தின் புதிய எழுத்துப்போக்கு
இன்றைய காலக்கட்டத்தில் மலேசியாவில் படைப்பிலக்கியம் கொஞ்சமும் தீவிரத்தன்மை இல்லாமல், கேளிக்கைத்தனமாகத்தான் பார்க்கப்படுகின்றது. எந்த எழுத்தாளர் சங்கமும் இதனைத்தான் முன்னெடுக்கின்றன. அவர்களுக்கு இருக்கும் அறிவை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு இருக்கும் மொழியை வைத்துக் கொண்டு பத்திரிகையில் கதை கவிதைகளை எழுதுகிறவர்கள் பலர். அவை பிரசுரமானதும் மகிழ்ச்சியடைந்து விடுகிறார்கள். அதுதான் இலக்கியம் என நினைக்கிறார்கள். கேளிக்கைகளைக் கொண்டாடுகின்ற மனம்…
வல்லினம் ஏற்படுத்திய வாழ்வின் திருப்பம்
எனக்கும் வல்லினத்திற்குமான தொடர்பு கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்டது. ஒரு நாள் திடீரென நவீன் என்னை அழைத்து அவரது சிறுகதைகளை நான் ஆய்வு செய்ய முடியுமா என வினவினார். மனதில் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் கூட நமக்கு அது ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என சொல்லி அந்த விமர்சனத்துக்கு ஒப்புக்கொண்டேன். அதனை கடந்த ஆண்டு மார்ச்…
வல்லினத்தின் ஆவணப்படங்கள்
எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளாக வல்லினம் குறித்து எனக்கு தெரியும். எதையும் தொடங்குவது சுலபமானது ஆனால் அதனை தொடர்ந்து செய்வது சவாலான காரியம், அதற்கான ஆற்றல் மற்றும் ஆர்வம் இருந்தாலின்றி அதனை செய்ய முடியாது. வல்லினம் பழைய எழுத்தாளர்களைத் தேடிக் கண்டறிந்து மீண்டும் எழுத வைத்து அதற்கான அங்கிகாரம் கொடுத்து வருகின்றார்கள். மிகவும் முக்கியமான செயல்பாடாக…
வல்லினத்தின் தொடர் பயணம்
வல்லினத்தின் நூறாவது இதழ் வருவதில் மகிழ்ச்சி. இச்சமயத்தில் வல்லினத்தின் ஆசிரியர் ம.நவீன் குறித்து நினைத்துப் பார்க்கின்றேன். 2004 என நினைக்கிறேன். அப்போது நவீன் நயனம் அலுவலகம் வந்திருந்தார். இதழின் வடிவமைப்பையும் அதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் செய்துக் கொடுக்க முடியுமா என கேட்டார். அப்போது அதற்கான சாதனங்கள் எங்களிடம் இருந்தன. அதனை செய்வதற்கான ஆட்களும் இருந்தார்கள். நானும்…
கலை இலக்கிய விழா 9
வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட…
வல்லினம் போட்டி படைப்பு முடிவுகள்
வாசகர்களும் எழுத்தாளர்களும் வழக்கமாக வல்லினத்துக்கு அனுப்பும் படைப்புகளையே ஒரு போட்டியாக நடத்தி, அதன் வழி சிறந்த படைப்புகளை வெளிக்கொணரலாம் என்ற திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் கம்பாரில், நண்பரும் வல்லினம் குழு எழுத்தாளருமான கங்காதுரையின் வீட்டில் நடந்த சந்திப்பில் முடிவானது. வல்லினம் போட்டி படைப்புகள் குறித்த அறிவிப்பு வந்தது முதலே வாசகர்களிடம் நல்ல வரவேற்பு…