பஸ் ஸ்டாப்பிலிருந்து பஸ் கிளம்பும்போதுதான் சிவகுமரனுக்கு சட்டென்று நினைவு வந்தது. அது புக்கித் மேரா டவுன் சென்ட்டர். அங்கு இறங்க வேண்டும். ஆனால் சிகப்புப் பொத்தானை அழுத்துவதற்குள், பஸ் கிளம்பிவிட்டது. தன்னையே ஒருமுறை திட்டிக்கொண்டார். அடுத்த ஸ்டாப் சிறிதுதூரம். வெயிலில் திரும்பி நடந்துவர வேண்டும். “சர்ர்ரியான வேஸ்ட்டு மாமா நீ!” குணா சொன்னது மீண்டும் காதில்…
கலை இலக்கிய விழா 8
வல்லினம் இலக்கியக் குழு வருடம்தோறும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் மிக உற்சாகமாக ஏற்பாடாகி வருகிறது. ‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ எனத் தலைப்பின் கீழ் மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது, அரு.சு.ஜீவானந்தன், கோ.புண்ணியவான் ஆகியோரின் ஆவணப்படங்களை வெளியிடுவதோடு அவர்களின் தேர்ந்தெடுத்த இரு சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து உலக இலக்கிய ஆர்வளர்களின் பார்வைக்கும் எடுத்துச்செல்லும் திட்டமும் இவ்வருட கலை இலக்கிய…
வழக்கறிஞர் பசுபதியும் பத்திரிகை அறமும்!
கடந்த சில தினங்களாக நண்பர்களிடம் இருந்து வந்த அழைப்புகள் குறுந்தகவல்கள் என பலவும் வழக்கறிஞர் பசுபதி குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் செய்த அவதூறுகள் தொடர்பாகவே இருந்தன. எந்த நண்பர்கள் சபையிலும் நான் பசுபதியின் பெயரை உச்சரிக்காமல் இருந்ததில்லை. நான் பெரும்பாலான சமயங்களில் செயலூக்கம் அடைவது அவரைப் பார்த்துதான். சண்முகசிவா தந்தை போன்றவர் என்றால் பசுபதி…
“கலை என்பது அதுசார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருத்தல் வேண்டும்” ஷாலினி சார்ல்ஸ்
ஈழத்தின் வடபுலத்தில் உள்ள சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டு யாழ்நகரில் வசித்துவரும் ஷாலினி சார்ல்ஸ், வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பன்முக ஆளுமையுடையவராக எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். திரைப்பட நெறியாட்கை, குறும்படத்தயாரிப்பு, சமூக சேவை, யாழ் என்ரர்ரெயிமென்ற், மற்றும் யாழ் அறக்கட்டளை ஸ்தாபகர் என்று பலதுறைகளில் தனி முத்திரை பதித்து இருக்கின்றார் இவரே ஈழத்தின் முதல்…
கவிஞர் கலாப்ரியா பதில்கள் (2)
கவிதை எழுத அடிப்படை பயிற்சியாக எதைச் சொல்வீர்கள்? சுகுமாறன் , மலேசியா இருப்பதிலிருந்துதான் எடுக்கிறோம். எனவே அவசியமான அடிப்படைப் பயிற்சி என்பது ஏற்கெனவே உள்ள எழுத்துகளை வாசிப்பது என்பதுதான். நாம் வாசித்த வார்த்தைகள், வரிகள் அவை உருவாக்கிய படிமங்கள், எல்லாம் நம் மனக்கிணற்றில் தொலைந்துபோன பொருட்கள்போல ஆழ்ந்து முழுகிக்கிடக்கும். நம் மனதில் உதித்த ஒரு பொறியைக்…
பாம்பாட்டி சித்தன் கவிதைகள்
கலை இலக்கிய விழாக்கள்: கடந்துவந்த பாதை
நேற்றுப்போல் இருக்கிறது கலை இலக்கிய விழா கொண்டாடத்தொடங்கி. இது கொண்டாட்டமா என்றால்… ஆம்! கொண்டாட்டம்தான். 2009ல் நான் ‘கலை இலக்கிய நிகழ்ச்சி’ எனப் பெயரிட்டபோது மா.சண்முகசிவா சொன்னார், “இது நிகழ்ச்சி இல்லை. விழா. நாம் கொண்டாடப்போகிறோம்…” எனக்கு அப்போது ‘கொண்டாட்டம்’ என்ற சொல் அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஒரு தீவிர படைப்பாளிக்குள் எப்படிக் கொண்டாட்ட மனநிலை…
திறவுகோல் 2: செலாஞ்சார் அம்பாட்
தங்கமீன் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஏப்ரல்மாதம் நடைபெற்ற நாவல் பயிலரங்கில்தான் மலேசிய எழுத்தாளர் திரு கோ.புண்ணியவான் அவர்களை முதன் முதலில் சந்தித்தேன். தனது எழுத்துலக அனுபவத்தை பார்வையாளர்களிடம் விரிவாக பகிர்ந்துகொண்ட அவர் தனது நாவலான ‘செலாஞ்சார் அம்பாட்’டைப் பற்றி குறிப்பிட்டு பேசினார். அன்றுமுதல் இந்நூலை சிங்கை நூலகங்களில் தேடத்தொடங்கினேன். என்னோடு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த இந்நாவல் இரண்டுவாரங்களுக்கு…
பிங்கி
கடலின் பேரோசை வெளியெங்கும் நிறைந்துகிடக்க இன்னுமவள் மணலோடுதான் புரண்டு கொண்டிருக்கிறாள். அவளுடலெங்கும் மணல் திட்டுத்திட்டாய் ஓவியம் தீட்டியிருந்தது. மூடியிருந்த கண்களுக்குள் அசையும் அவளின் கருவிழிகளைப் பார்த்தபடியே கையிலிருந்த பியரை மகி குடித்துக் கொண்டிருந்தான். அந்தக் கருவிழிகளின் அலைச்சல் பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளியிருக்கும் தன் சொந்தநிலத்தைத் தேடும் தவிப்பின் வெக்கையாக இருக்கலாம். மதுவருந்தியிருக்கும் அவளின் நாசியிலிருந்து நீண்ட…
எனது ஞாபகக் கிண்ணங்களில்…
எனது ஞாபகக் கிண்ணங்களில் நிரம்பித் ததும்பும் உனது காதலை அள்ளிப் பருகியபடியே உயிர்த்திருக்கிறேன். நேசத்தின் கரங்களில் நாம் சிறு பிள்ளையாய் தவழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அதீத அன்பினால் மெருகூட்டப்பட்ட நாட்களின் மீது வீசிய ஒளிக்கற்றைகள் ஒன்றுதிரண்டு முழுநிலவாய் வான் மீதேறிவிட்டதென சொல்லி இறுகத் தழுவிக் கொண்டாய். இதழ்களைச் சுவைத்துவிட்டு ‘நான் போதையேறிக்…
ஆஸ்திரேலியப் பூர்வ பழங்குடிகளின் கனவு காலக் கதைகள்
ஆஸ்திரேலியப் பழங்குடிச் சமூகம் ஆஸ்திரேலிய பூர்வ பழங்குடிச் சமூகம் இன்றளவும் நிலைத்திருக்கும் உலகின் மிகத்தொன்மையான சமூகமாகத் திகழ்கின்றது. ஆஸ்திரேலியக் கண்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வழி அப்பழங்குடிகளின் வரலாறு 40,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணிக்கப்படுகிறது. மேலும், சில ஆதாரங்கள் 60,000 ஆண்டுகள் எனவும் சான்று பகர்கின்றன. இவர்களது பூர்வீகம் தென்னிந்திய மற்றும் இலங்கையைச் சார்ந்த இந்திய …