பட்சி: கடிதம்

சிறுகதை: பட்சி

தருமசங்கட நிலைக்குத் தள்ளப்பட்ட முத்துவை பச்சையம்மன் மன்னிக்க வேண்டும் என வேண்டிடத் தோன்றுகிறது. கதையின் பின்னனி என்னவாக இருக்கும் என ஊகிக்க முடிகிறது. அது தவறாகவும் இருக்கலாம். எந்திரன் 2.0 திரைப்படதின் வில்லன் கதாப்பாத்திரம் பட்சிராஜன் உண்மையின் ORNITHOLOGY எனப்படும் பறவைகள் ஆராய்ச்சித் துறை அறிஞர் சலீம் அலி என்பாரின் நீட்சி ஆகும்.

Continue reading

சிறுகதை: பட்சி

“சிறுவனை நீங்கள் உடன் அழைத்து வருவது, எனக்கு அவ்வளவு பாதுகாப்பாகத் தோன்றவில்லை,” என்றார் மாலிக். மேடு ஏறி வந்ததில் அவருக்கு மூச்சிரைத்தது. வாய்வழியாக நீராவிப் புகை குபுக் குபுக்கென வெளியேறிக்கொண்டிருந்தது. அவரது உதவியாளன் எங்களைப்போல் குளிருடை அணியாமல் பழுப்பு நிற டீசட்டையுடன் கனத்துத் தொங்கும் பையைத் தோள்களில் சுமந்தபடி இயல்பாக நின்றுகொண்டிருந்தான். 

Continue reading

நேர்காணல்: இரு கேள்விகள்

நேர்காணல் இணைப்பு

நேர்காணலைக் கேட்டேன். மிகவும் தெளிவான பதில்கள். நிச்சயமாக மலேசிய இலக்கியம் குறித்த ஆழமும் அகலமும் எனக்கும் அதிலிருந்தே புலப்பட்டது. இரண்டு கருத்துகள் அல்லது கேள்விகள் எனக்குத் தோன்றியது. உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

Continue reading

சிறுகதை: சியர்ஸ்

“புதுசா ஜாய்ன் பண்ணுன மூர்த்தி புரோவுக்காக” என முதல் சியர்ஸில் ஷாம் சொன்னபோதுதான் அவர் முகத்தைத் தெளிவாக கவனித்தேன். மந்தமான மஞ்சள் ஒளியில் கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். மனதுக்கு நெருக்கமாகாத அந்நியத்தன்மையில் முகவெட்டு. சடங்காகப் புன்னகைத்தேன். வாயில் வைக்கச் சென்ற கிளாஸை நிறுத்தி, அவர் பதிலுக்குச் சிரிப்பதற்குள் பார்வையை விலக்கிக்கொண்டேன். ‘மங்கி ஷோல்டரில்’ ஆரஞ்சு பழச்சாற்றைக் கலந்து குடிப்பதன் மகத்துவத்தைக் கண்டுபிடித்தவன் வேதியலை அரைகுறையாய் முடித்த மகா கலைஞனாக இருக்க வேண்டும். எப்போதும் தோன்றுவதுதான். ஒரு மிடறு குடித்துவிட்டு தொலைவியக்கியால் ஒலியைக் கூட்டினேன். ராக்கம்மாள் கையைத் தட்டினாள்.

Continue reading

நுண்வெளி கிரகணங்கள்: சாதாரணங்களின் தரிசனம்

எழுத்தாளர் சு.வேணுகோபாலைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் துள்ளல்களே நினைவுக்கு வரும். மேடையில் உரையாற்றும்போதோ தனிப்பட்ட முறையில் உரையாடும்போது சன்னமாக எழுந்து நிலைகொள்ளும் அந்தத் துள்ளல் வசீகரமானது. அது காளையின் ஜல்லிக்கட்டு துள்ளலை ஒத்தது. தனது திமிலைப் பிடிக்கவிடாமல் நாலாபுறமும் சுற்றும் காளையின் அசைவுகள் இயல்பாய் ஒரு நடனத்தை உருவாக்கும். கொஞ்ச நேரத்தில் அவ்வளவு பெரிய உருவம் தனது நான்கு கால்களையும் மொத்தமாய் திருப்பி மறுபுறம் சீறும் கணம் குபுக்கென பார்வையாளர்களுக்குத் தூக்கிப்போடும். மேலிருந்து கீழாக அதன் சாகசத்தைப் பார்க்கும் கண்களுக்கு அதன் துள்ளல்கள் பழகப் பழக அத்தனையும் ஓர் ஒழுங்கில் நிகழ்வதாகத் தோன்றும். நுண்வெளி கிரகணங்களை வாசித்து முடித்தபோதும் அந்நாவல் சு.வேணுகோபாலின் கட்டற்ற துள்ளல்கள் உருவாக்கிக்கொண்ட ஒழுங்கு என்றே மனதில் முதலில் தோன்றியது.

Continue reading

டிராகன்: கடிதம் 4

சிறுகதை: டிராகன்

இதுவரை நவீன், கழுகு, உச்சை, சியர்ஸ், ராசன், பூனியான் சிறுகதைகளை எழுதிவிட்டார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இதில் ஒன்னொடு ஒன்று கலக்காதப் பாதரசம் போன்றது. யாதார்த்தம் நிறைந்த கதைக்களம். அதே சமயம் புதிர் அவிழா மர்ம முடிச்சுகள் சிக்கிக்கொண்டு இருக்கும் அது வாசகனின் வாசிப்புத்தன்மையையும் விரிவடையச்செய்து கொண்டே இருந்தது. நக்கல், நையாண்டி, பகடி வசனம், கருத்துத்தளவிவாதம், விலங்குகளின் சராசரி குணத்தைத் தவிர்த்து நுட்பமான செயல்பாங்கு, மானிட அனுபவமும், மானிட சிந்தனையும் ஒன்று திரண்ட சுவையுடன் நவீன இலக்கிய இலட்சணத்துடன் விளங்கின. இவைகள் ஒன்றை ஒன்றோடு கலப்பது சாத்தியமில்லை.

Continue reading

ஒலிப்பேழை: கடிதம் 4

ஒலிப்பேழை

கதையில் உள்ள ஒலிப்பேழையின் படத்தைப் பார்த்தவுடன், சற்றுப் பயமாகத்தான் இருந்தது. ஒலிபேழையில் இருந்து அந்தச் சுருள் சிக்குகள் அவிழ்க்கப்பட்டு வடிவ அமைப்பை மீறிய பெரிய பெரிய வளையங்களாக சீரற்று இருந்தன. கதையின் கதைக்களம் வித்தியாசத்தின் உச்சம் என்றால், ஒலிப்பேழையின் படம் அதற்கும் மேலே ஏறி நின்று பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

Continue reading

குருபூர்ணிமா

சீ.முத்துசாமியின் நாவல்கள் குறித்த கட்டுரையைப் பதிவேற்றம் செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் ஃபிரேசர் மலையை நோக்கி நண்பர்களுடன் புறப்பட்டேன். மார்ச் மாதம் அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தபோதும் நான் இதே நண்பர்களுடன்தான்  தைப்பிங் நகரில் சுற்றிக்கொண்டிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த விடுதி தொலைக்காட்சியில் விடுமுறையை அறிவித்தபோதே உருப்படியாக ஏதாவது எழுதவேண்டும் எனத் திட்டம் இருந்தது. அவ்வகையில் ஏப்ரல் மாதம் மலேசிய நாவல்கள் குறித்த ரசனை விமர்சனம் எழுதலாம் எனத்  தொடங்கினேன். பத்து மலேசிய எழுத்தாளர்கள்; அவர்களது மொத்த  நாவல்கள் எனும் அடிப்படையில் வாசிப்பையும் எழுத்தையும் திட்டமிட்டுக்கொண்டேன். ஜூலை 3 எழுதிய இறுதிக் கட்டுரையுடன் பத்து எழுத்தாளர்களின்  27 மலேசிய நாவல்கள் குறித்த கட்டுரைகளை எழுதி முடித்தேன்.

Continue reading

சீ.முத்துசாமி நாவல்கள்

முற்போக்கு இலக்கியம், லட்சியவாத எழுத்து ஆகியவை பிரதானமாக இருந்த 1970களின் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில், சீ.முத்துசாமியின் நுழைவு தனித்துவமானது. திட்டவட்டமான தீர்வுகள், சமூக அவலங்களை முன்வைக்கும் கதைக் கரு, முடிவுகளில் திருப்பம் வைக்கும் உத்தி, கருத்துகளைப் பிரதிநிதிக்கும் கதாபாத்திரங்கள் எனும் சட்டகங்களில் மாட்டிக்கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில், அவர் எழுதியவை முற்றிலும் புதிய பாணியிலான எழுத்துகள். குறியீடுகள் மூலம் வாசகன் அந்தரங்கமாக வேறொரு கதையைப் பின்னி உருவாக்கும் சாத்தியங்களையும் (இரைகள்) நுண்மையான அகவய சித்திரங்களால்  வாழ்வின் அர்த்தமற்றுப் போகும் தருணங்களின் இருளையும் (கருகல்) அதற்குரிய மொழியில் புனைவாக்கினார்.  1990களுக்குப் பின் அவரது மறுபிரவேசத்தில் எழுதிய ‘கல்லறை’, ‘வழித்துணை’, ‘வனத்தின் குரல்’ போன்ற சிறுகதைகள் சீ.முத்துசாமியை மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பதற்கான அழுத்தமான சான்றுகளாகின.

Continue reading

ஒலிப்பேழை: கடிதம் 3

சிறுகதை: ஒலிப்பேழை

அன்புள்ள அண்ணா,

ஒலிப்பேழை சிறுகதையிலுள்ள சிறப்பம்சமே அதில் ஒழிந்திருக்கும் மிஸ்ட்டிரி தன்மையும், கதையில் அலை போல படர்ந்து வரும் பெண்டசி தன்மையும் ஊடும் பாவும் எனக் கலந்து வருவது தான். தன் குரலாலும், திட்டமிட்டு செய்த ஒரு கொலையாலும் மலேசியாவின் பேசு பொருளான மோனா ஒரு சரடென்றால். இந்த அண்டிக் கடை மற்றொரு சரடு.

Continue reading