Category: கவிதை

நிழலின் சொகுசு

shadow-new-150x150

பிரதான சாலையோடு சங்கமிக்கும் தடம் வழியே வரும் சொகுசுக் கார் முனையில் நின்று மூக்கு நீட்டி எட்டிப் பார்க்கும் தூர்தர்ஷனின் மகாபாரத வில் தொடுத்த கணைச் சரங்களாய் விசையுற்று ஏகும் வாகனங்கள் ஒருகண சிறுவெளி கிடைத்ததும் அதில் உடம்பை நுழைத்து வெறிவேக வேங்கைகள் ஸ்தம்பிக்க ஒய்யாரமாய் வளைத்து சல்லென்று முந்திச் செல்லும் நரியின் மீது உறுமும்…

ச. விஷ்ணுதாசன் கவிதைகள்

புழுக்கம்   வெளிகள் பலதாய் சமுக வெளிகள் பண்மியமாய் வேண்டும்.   வெளிகளை உருவாக்கிட இருப்பை உணர்த்தும் போதெல்லாம் முற்ற முழுதாக முள்வேலிச் சிறை அடைப்புக் கூடாய் அதிகாரத்தோடு …   சிறை முகாம் முழுவதுமாய் பாசி படர்ந்த இருட்டு இருட்டு கக்கிய விஷக் காய்ச்சல்.   வெளிச்சக் கீற்றை நாடும் அகவெளியும் புறவெளியும் அழுத்தப்பட்ட…

யோகி கவிதைகள்

நான் உன்னை பிரிகிறேன் என் அன்பே மூன்றாவது முறையாக இன்று உன்னை பிரிகிறேன் பிரிதல் உனக்கும் ஓர் ஓவியத்துகான புள்ளியை கொடுக்கலாம் புள்ளிகளைக் கோடுகள் ஒன்றினைக்கலாம் நீ அவற்றுக்கு வர்ணம் தீட்டி அழகான படம் வரைந்து காட்டி அதைக் காட்சிக்கு வைக்கலாம் என் அன்பே ஓர் ஓவியனின் ஓவியம் போல் இல்லை இந்த பிரிவு அதை…

அனார் கவிதைகள்

 விடுதலைக்கு அப்பால் உள்ளிருக்கும் பட்டுப்பூச்சியால் நெய்யப்படுகிறது பட்டுக்கூடு மின்னல் கீற்றுகள் பழிச்செனத் தெறித்து மங்குகின்றன கண்கூசச்செய்யும் கோடிவண்ணங்களின் பிரகாசத்தை யாராலும் தாங்கமுடியாது பொன்னிழைத் தூவல்களால் இழைத்த பட்டுக்கூடு ஆகாயவெளியின் பிடிமானத்தில் அசைகிறது வினோத ஒலிகளால் நேர்த்தியான சத்தங்களை எழுப்பும் பறவைகள் சிறு குருவிகள் நிகழ்த்தும் நாட்டிய அணிவகுப்பு சூழ்ந்திருக்க சர்ப்பமாகவும் சாத்தானாகவும் மாறித்தோன்றும் பேர் எழிலை…

உயிர் சுமக்கும் வேர்கள்

குளிர்காலத்தின் துயர் சுமந்த கிளைகளில் கனவுகளை எழுதுகிறது சாம்பல் பறவையொன்று இனிவரும் வசந்தகாலத்தின் இலைகள் பறவையின் கனவுகளை மொழிபெயர்க்கவும் இன்னொரு பறவை சுமந்து செல்லவும் கூடும் அந்தக் கணங்களில் அந்தப் பறவையும் மரமும் என்ன பேசிக்கொள்ளும் கனவுகளை வைத்திருந்து கையளித்ததிற்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லுமோ கிளையின் துயர் மீது கண்ணீர் சிந்திக் கழுவிப்  போகுமோ…

சித்தாந்தன் கவிதைகள்

போதையுலராப் பொழுதின் ஜந்துகள் தன் துக்கத்தை மலைகளுக்குப் பரிசளித்தவனின் நிழலில் பதுங்குகிறது வரியடர்ந்த மிருகம் காடுகள் விழித்துக் கொண்ட பிறகு நகரங்களின் மூலைமுடுக்குகளெல்லாம் பதுங்கித் திரிந்து களைத்து திரும்பியிருக்கிறது இவனிடம் தன் சொற்களுக்குள் அதை ஒளித்து வைத்திருக்குமிவன் துயில் மறந்த நோயால் அவஸ்தையுற்றான் அவனின் புத்தக் கட்டுகளுக்குளிலிருந்து அது உறுமும் பொழுதுகளில் சாபத்தைத் தன் தலையில்…

எம். ராஜா கவிதைகள்

கருப்பு நிறத்திற்குக் காக்கையின் குரல் இமைகள் மூடினால் இருளின் ஆழம் ஆழத்து நிறத்தில் தலை சாய்த்து விழி உருட்டி உறுத்தும் உருவம் ஒன்று ரெண்டாகி ரெண்டு மூன்றாகி காவெனக் கரையும் o க்கா க்கா தெருச் சாலை எதிர்க் கரையில் சிறகு மறந்து தரையில் நிற்கும் கரிய உருவம் இளஞ் சிவப்பு அடித் தொண்டை தெரியக்…

பூங்குழலி வீரன் கவிதைகள்

  1. ஒரு தவித்த பொழுதில் தனித்திருக்கையில் என் காலத்தைத் தின்று தீர்ப்பதைப் போல் பிறந்தேவிட்டது என் கவிதை… எப்போதும் ஒரு வலியென அது வெடித்து வெளியேறும் ஒரு பஞ்சு விதை வெடிப்பதைப் போல… ஒரு மென்கோது கொண்ட முட்டை சட்டென கைத்தவறி விழுவதைப் போல… என் கவிதை ஒரு போதும் என்னைத் தவிர வேறொன்றைப்…

லூய் யோக் தோ சீனக்கவிதைகள்

தமிழில் : கி.இ.உதயகுமார் , பூங்குழலி வீரன் பிரியாவிடை ‘சி’ என் இருப்பு இங்குதான் என முடிவெடுத்திருக்கிறேன் நம்பிக்கைகள் மக்கிப்போகும் பொழுதுகளில் மீதி வாழ்வின் எதிர்ப்பார்ப்புகள் தகுதியற்றுப் போகின்றன… புலப்படாத ஏக்கங்களின் மையமிது “பார்… தூரங்கள் மெதுவாக மறைந்து போகின்றன…” ஆனால் இந்தக் கிரகத்தை விட்டுச்செல்ல அடம் பிடிக்கிறேன் படிப்பது, எழுதுவது, இசையமைப்பது, வரைவது, நேரத்துடன்…

எம்.கே. குமார் கவிதைகள்

கிணற்றைத் தாண்டி கரையில் ஏறுகிறது நிலவு தொடந்துண்டு கொழுத்த தவளை இயலாமையில் நகர்கிறது.     ஒற்றைக்குரலில் ஓங்கிக் கதருகையில் செவியிழந்தவனின் விழிபோல விதிர்ச்சியாய்க் கிடக்கிறது இரவு.     அண்மையில் உதித்திருந்த உண்மை பழைய பொய்களின் எஞ்சியிருக்கும் சாம்பல்களுக்கிடையில் படாதபாடு படுகிறது. சாம்பலிலும் நழுவி ஓடுகிறது ஒரு துளி.     விஷத்தில் இறங்குதல்…

எஞ்சிய ரத்தம்

அறியாமையின் அடையாளமாய் நிற்கும் சிலுவையை   தன்னை நோக்கி தானே கேட்டுக்கொண்ட வார்த்தையை   எழப்போகும் மூன்றாம் நாளை   உணர்ந்தபடி உறைந்திருந்தது சிலுவையில் எஞ்சிய ரத்தம்    பா.பூபதி

கே.பாலமுருகன் கவிதை

 தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்   இதற்கு முன் இங்கே தூக்கிலிடப்பட்டவர்களின் கதைகள் இவை. குற்றங்களை விலைக்கு வாங்கத் தெரியாமல் தூக்கில் தொங்கியவர்களின் எளிய மக்களின் வசனங்கள் இவை.   கயிற்றில் தொங்கியவனின் தடித்த நாக்கிலிருந்து வடியும் எச்சிலில் ஊறிக்கிடக்கின்றன வாழமுடியாத ஆயிரம் ஏக்கங்களின் வரைப்படங்கள். ஆண்டான் எத்தி உதைத்த விலை உயர்ந்த காலணிகளின் அச்சு கரையாத நாக்குகள்…

நவீன் மனோகரன் கவிதை

 வெறி நாய்களுடன் விளையாடுதல்   வெறி நாயுடன் விளையாட முடிவெடுத்தான் வாசகனின்றி திரிந்த ஒரு நகரத்து கவிஞன்   வெறிநாய்கள் எதையாவது பார்த்து குரைத்துக்கொண்டே இருக்கும் இடபேதம் தெரியாமல் கால்தூக்கி நனைக்கும் நகரத்து இரைச்சல் எல்லாம் தனக்கான வசையென்று தறிகெட்டு ஓடும் தாய் மகள் தெரியாமல் கடிக்கும் கலவி கொள்ளும்   வாசகர்களில்லாதவர்கள் வாழும் நகரத்தில்…

கருணாகரன் கவிதைகள்

நம் வீதியில் ஆயிற்று இன்னொரு காலம் என்ற போதும் நாம் உணரவில்லை இன்னோர் காலம் இதுவென்று குருதியில்லை, குண்டுச் சத்தங்கள் இல்லை அகதி இடப்பெயர்வுகளும் இல்லை என்றாலும் யுத்தம் ஒயவில்லை இன்னும் குண்டும் குருதியும் தீயும் புகையும் காயமும் இன்றிய யுத்தம் போரின் பிறிதொரு ரூபமே. நான் தோற்கடிக்கப்படும் கணந்தோறும் நிகழ்வது யுத்தமன்றி வேறென்ன? என்னுடைய…

தினகரன் கவிதைகள்

தனிமையில் எழுதி முடித்ததும் எழுதி கொண்டிருப்பதும் இனி எழுத போவதும் இன்னொரு தனிமையை பற்றி தான். • ஒருவர் கனவை மற்றொருவர் மற்றொருவர் கனவை இனொருவர் திருடித்தான் வாழ வேண்டியிள்ளது நாளை உங்கள் கனவை நானும் என் கனவை நீங்களும் திருட வேண்டிய நிர்பந்தத்தில் தான் வாழ்க்கை இருப்பு கொள்கிறது. • வலிமை இழந்த வார்த்தைகளோடும்…