
ஏதோ ஒரு காரணத்தினால் என்னை பாலர் பள்ளியில் இணைக்கவில்லை. வறுமை ஒரு காரணமாக இருக்கலாம். சித்திதான் (அம்மாவின் தங்கை) எனக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். இரவானால் அம்மா சாமி அறையில் என்னையும் அக்காவையும் அமரவைத்து தேவாரம், திருவாசகம் பாடுவார். ஏழு வயதிலெல்லாம் கந்தர் சஷ்டி கவசமும் சிவபுராணமும் எனக்கு நன்கு மனனம். கந்தர் சஷ்டி கவசம் என்னை…














